THE VICE-PRESIDENT ARTICLE 63-73

Table of Contents

THE VICE-PRESIDENT ARTICLE 63-73

 

கேள்வி 1. துணைக் குடியரசுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

பதில் :- பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களால் விகிதப்படியுள்ள (Proportional) ஒற்றை மாற்று வாக்கு முறைப்படி(Single Transferable Vote) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கேள்வி 2. பாராளுமன்ற இரு அவை நியமன உறுப்பினர்கள் (Nominated members) வாக்களிக்க முடியுமா?

பதில் :- ஆம்.

கேள்வி 3. துணைக் குடியரசுத் தலைவருக்குப் போட்டியிட வேண்டிய தகுதிகள் எவை?

பதில் :- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியவ ராக இருக்க வேண்டும். மேலவை (Council of States)க்குத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருத்தல் கூடாது. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்கள், மத்திய மாநில அமைச்சர் பதவிகள் ஊதியம் பெறும் பதவிகளாகக் கருதப்பட மாட்டாது. ஆனால் குடியரசுத் துணைத் தலைவர் பணியில் சேரும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர், மாநில அவைகள் உறுப்பினர் அல்லது மேலே கூறப்பட்ட மற்றப் பதவிகளிலிருந்து நீங்கியதாகக் கருதப்படுவார்.

கேள்வி 4. துணைக் குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?

பதில் :- குடியரசுத் தலைவர்,

கேள்வி 5. தூணைக் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் எவ்வளவு ஆண்டுகள்?

பதில் :-ஐந்து, ஆனாலும் பதவிக் காலம் முடிந்த பின்னரும் அடுத்த துணைக் குடியரசுத் தலைவர் பதவியேற்கும் வரை, பதவியில் தொடர வேண்டும்.

கேள்வி 6. துணைக் குடியரசுத் தலைவரின் முக்கியமான பொறுப்பு யாது? அவரின் மற்றப் பொறுப்புகள் எவை?

பதில் :- தன் பதவியின் காரணமாக ராஜ்ய சபையின் தலைவராகச் செயல்படுவது முக்கியமான பொறுப்பு ஆகும். இதைத் தவிர திடீர் மறைவு. இராஜினாமா பணி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருந்தால், புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை துணைக் குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவராகச் செயல்படுவார். அதே மாதிரி குடியரசுத் தலைவர் நோய் மற்றும் விடுப்பு காரணங்களுக்காக தன் கடமை யைச் செய்ய இயலவில்லையென்றால் துணைக் குடியரசுத் தலைவர், அவ்வேலைகளைக் கவனிப்பார். துணைக் குடியரசுத்தலைவர் குடியரசுத் தலைவராகச் செயல்படும் பொழுது அதிகாரங்கள், சிறப்புரிமைகள், ஊதியம் முதலியன அவருடைய குடியரசுத் தலைவருக்குண்டானது போன்று இருக்கும்.

கேள்வி 7. ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாகும் பொழுது குடியரசுத்தலைவரின் பொறுப்புகளை யார் கவனிப்பார்?

பதில் :- இந்தியத் தலைமை நீதிபதி (Chief Justice of India). 1969ஆம் வருடம் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன் இறந்த பொழுது, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தன் பதவியை இராஜினாமா செய்தார். அவ்வமயம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் இதயதுல்லா குடியரசுத் தலைவர் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார்.

கேள்வி 8, துணைக் குடியரசுத் தலைவர் தனது வேலை விடுப்பு மடலை யாருக்கு அனுப்ப வேண்டும்?

பதில் :- குடியரசுத் தலைவருக்கு (பிரிவு 67(a)}}

கேள்வி 9. துணைக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா?

பதில் :- ஆம். குற்றச்சாட்டு மூலமாக பதினான்கு நாட்கள் அவகாசம் கொடுத்து குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டு வந்து மேலவையில் (Council of States) அவையின் அப்போதுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பின் மக்களவைக்குத் தீர்மானம் அனுப்பப்பட வேண்டும். மக்களவை யிலும் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டால் துணைக் குடியரசுத் தலைவர் பதவி இழந்ததாகக் கருதப்படுவார் (பிரிவு 67(b))

கேள்வி 10. துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தலிலிருந்து எவ்வாறு மாறுபட்டது?

பதில் :-மாநிலங்களிலுள்ள கீழவை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.பாராளுமன்ற இரு அவை நியமன உறுப்பினர்களும் Nominated Members) வாக்களிக்கலாம்.

கேள்வி 11. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை எதிர்த்து வழக்குகள் எங்கு தொடரலாம்?

பதில் :-  உச்ச நீதிமன்றத்தில். ஆனால் வாக்காளர் குழுமத்தில் (Electoral College) காலியிடங்கள் இருந்ததால் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது.

கேள்வி 12. குடியரசுத் தலைவர் துணைத் தலைவரின் மாத ஊதியம் எவ்வளவு?

பதில் :-குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ. 5,00,000. துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.4,00,000.

கேள்வி 13. மத்திய அரசின் நிர்வாக வரம்பு யாது?

பதில் :- எந்த விஷயங்களின் மீது பாராளுமன்றத்தால் சட்டம் இயற்ற இயலுமோ அந்த விஷயங்களின் மீதும், பன்னாட்டு ஒப்பந்தங்கள் அல்லது ஒப்புதல்கள் மீது மத்திய அரசு எடுக்க வேண்டிய செயல் முறைகள் மீதும், மத்திய அரசின் நிர்வாக வரம்பு பரவி நிற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலோ அல்லது பாராளுமன்றம் சட்டம் இயற்றி இருந்தாலோ தவிர, மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசின் நிர்வாக வரம்பு தலையிடாது.

கேள்வி 14. அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் நிலை என்ன?

பதில் :-அமெரிக்க குடியரசுத் தலைவரைப் போலன்றி, இந்தியக் குடியரசுத் தலைவர் பெயரளவுக்குத்தான் தலைமைப் பொறுப்பில் உள்ளார். உண்மையான அதிகாரங்கள் பிரதம மந்திரியிடம்தான் உள்ளன. பிரிவு 53(1)ன்படி மத்திய அரசு நிர்வாகப் பொறுப்பின் தலைமையில் இருப்பவர் குடியரசுத் தலைவர். அதனால்தான் அவர் சர்வாதிகாரத்தோடு விளங்கலாமா எனக் கேள்வி எழுகிறது. ஆனால் பிரிவு 74(1)ன்படி அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.அமைச்சரவையின் ஆலோசனையை ஒரு தடவை மறு பரிசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளலாம். அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டுமென்றாலும், ஆதற்கு மந்திரி சபையின் எழுத்து மூலமான பரித்துரை கண்டிப்பாகத் தேவை, சுருங்கக் கூறின் இந்தியக் குடியரசுத் தலைவர் இங்கிலாந்து நாட்டு மன்னர் நிலையை ஒத்தவர் ஆவார். (President is the Head of the State but not of the executive. He represents the nation but does not rule the nation).

 

அமைச்சரவை

கேள்வி 1. குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுகிறார்?

பதில் :- பிரதம மந்திரியும் அவரது அமைச்சரவைக் குழுவும் செய்யும் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் செயல்படுவார். பரிந்துரையில் கருத்து வேறுபாட்டால் குடியரசுத் தலைவர் பரிந்துரை (Advice)யை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்வார். மறுபரிசீலனை செய்யப்பட்ட பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் செயல்படுவார்.

அமைச்சரவை செய்யக் கூடிய பரிந்துரையின் விவரங்கள் என்னவென்பது பற்றி நீதிமன்றங்கள் தலையிடாது; விசாரிக்காது (பிரிவு 74).

கேள்வி 2. அமைச்சர்கள் நியமிக்கப்படும் முறையை விவரி.

பதில் :-  பிரதம மந்திரியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற மந்திரிகளை பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் விருப்பம் நீடிக்கும் வரைதான் (Duing the Pleasure of the President) அமைச்சர்கள் பதவியில் இருக்க முடியும்.

கேள்வி 3. எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்ச ராக முடியுமா?

பதில் :-முடியும். ஆனால் ஆறு மாதங்களுக்குள்ளாக ஏதாவது ஓர் அவையில் உறுப்பினராக வேண்டும்.

கேள்வி 4. அமைச்சரவை யாருக்குக் கூட்டுப் பொறுப்பு வாய்ந்தவர்கள் (Collectively Responsible)?

பதில் :-மக்களவைக்கு,

கேள்வி  5. அமைச்சர்களுக்கு உறுதி மொழி (oath) அளிப்பவர் யார்?

பதில் :-குடியரசுத் தலைவர்.

கேள்வி 6.ஓர் அமைச்சரவையில் அதிகப்படியாக எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம்?

பதில் :- மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15%

கேள்வி 7. அமைச்சர்களின் ஊதியம், படிகளை நிர்ணயிப்பது யார்?

பதில் :- சட்டம் மூலமாகப் பாராளுமன்றம்.

கேள்வி 8. அமைச்சர்களுக்குண்டான ஒரு சிறப்புரிமை யாது?

பதில் :- அமைச்சர்கள் இரு அவைகளின் நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளலாம். ஆனால் உறுப்பினர்களாக உள்ள அவையில் மட்டும் வாக்குரிமையைப் பயன்படுத்தலாம்.

கேள்வி 9. திட்டக் கமிஷனின் (Planing Comission) தலைவராக செயல்படுபவர் யார்?

பதில் :- பிரதம மந்திரி.

கேள்வி 10.கேபினெட்டுக்கும். அமைச்சர் குழுவுக்கும் (Council of Ministers) உள்ள வித்தியாசம் என்ன?

பதில் :- மத்திய மந்திரி சபையில் மூன்று விதமான மந்திரிகள் இருப்பார்கள். அவர்கள் முறையே கேபினட் மந்திரிகள் (Cabinet Ministers) இராஜாங்க மந்திரிகள் (Ministers of State) மற்றும் உப மந்திரிகள் (Deputy Ministers) ஆவர். ஓர் அமைச்சகத்தில் தலைவராகச் செயல்படுபவர் கேபினட் மந்திரியாவார். அவருக்குக் கீழ் இருப்பவர்கள் இராஜாங்க மற்றும் உப மந்திரிகள் ஆவார்கள். மிகக் குறைந்த ஒரு சில இராஜாங்க மந்திரிகள் மட்டுமே துறைக்குத் தலைவராக இருப்பார்கள். கிட்டத்தட்ட 20 முதல் 25 கேபினட் மந்திரிகளே, பிரதம மந்திரியின் தலைமையில் முடிவெடுப்பார்கள். மூன்று வகை உள்ளடக்கியது அமைச்சர் குழாம் (Counsil of Ministers} என்றழைக்கப்படும்.

அட்டார்னி ஜெனரல் (Attorney General)

கேள்வி 1. மத்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி யார்?

பதில் :- தலைமை வழக்கறிஞர் (Attorney General)

கேள்வி 2. அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட வேண்டிய தகுதி என்ன?

பதில் :-தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய

வேண்டிய தகுதிகள் அட்டார்னி ஜெனரலுக்கு வேண்டும்.

கேள்வி 3. அட்டார்னி ஜெனரலை நியமிப்பது யார்?

பதில் :- குடியரசுத் தலைவர். அவர் விருப்பம் நீடிக்கும் வரை பதவியில் தொடருவார். அவரது சம்பளத்தையும் குடியரசுத் தலைவர் நிர்ணயிப்பார்.

கேள்வி 4. அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்தபடியாக அதிகாரி யார்?

பதில் :- சொலிஸிட்டர் ஜெனரல் (Solicitior General)

 

கேள்வி 5. அட்டார்னி ஜெனரலுக்குண்டான சிறப்புரிமை என்ன?

பதில் :- இரு அவையிலும் உறுப்பினராக இல்லாத போதும் பாராளுமன்ற இரு அவைகளிலும் அல்லது ஒருங்கிணைந்த கூட்டத்திலும் பேசவோ, நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவோ உரிமை உண்டு. ஆனால் அவையின் வாக்குரிமை கிடையாது.

கேள்வி 6. அட்டார்னி ஜெனரலின் கடமை என்ன?

பதில் :- சட்டம் சம்பந்தமான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூற வேண்டியது அட்டார்னி ஜெனரலின் கடமை யாகும். மிகவும் முக்கியமான வழக்குகளில் தலைமை நீதிமன்றங் களில் அரசுக்காக வாதாடுவார். இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாதாட (Has the Right of Audience) அவருக்கு உரிமை உண்டு.

அரசு நிர்வாகம் நடத்தும் முறை

கேள்வி 1.Allocation of Business Rules’ மற்றும் ‘Transaction Business rules’ என்றால் என்ன?

பதில் :- எந்தெந்த துறைக்கு (Department) என்னென்ன விஷயங்கள் (Subjects) ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிடும் நூல் “Allocation of Business Rules.’ இது இரகசியமான நூல் இல்லை.

உயர்மட்ட அளவில் அரசு நிர்வாகத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை விளக்கும் நூல் ‘Transaction of Business Rules’ ஆகும். அது இரகசியமான (Confidential Document) நூல் ஆகும்.

கேள்வி 2. குடியரசுத் தலைவருக்கு அரசு நிர்வாகம் பற்றி எப்படித் தெரிய வரும்?

பதில் :- நாட்டு நிர்வாகத்தைப் பற்றிய அமைச்சரவை முடிவுகளையும் Cabinet Decision) புதிதாகச் சட்டம் இயற்றப் போகும் விஷயங்கள் பற்றியும், பிரதம மந்திரி அவ்வப்போது குடியரசுத்தலைவரைச் சந்தித்துத் தெரியப்படுத்துவார்.

குடியரசுத் தலைவர் தானாகவே எந்த விஷயத்தைப் பற்றியும் தனக்குத் தகவல் தருமாறு அரசைக் கேட்டுக் கொள்ள லாம். ஓர் அமைச்சர் எடுத்த முடிவை, அமைச்சர் குழு ஆலோசிக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளலாம்.

கேள்வி 3. அரசு நிர்வாகத்துக்கும் குடியரசுத் தலைவருக்குமுள்ள முக்கியமான தொடர்பு என்ன?

பதில் :- அரசு நிர்வாகத்தில் எடுக்கும் முடிவுகளைத் தெரியப்படுத்தும் பொழுது குடியரசுத் தலைவர் எடுத்த முடிவுகளாகத் தெரியப்படுத்தப்படும்.

அரசு ஆணைகளை (Orders or instruments) ஊர்ஜிதம் செய்து கையொப்பமிடுவது (Authentication) குடியரசுத் தலைவர் பேரால் அரசு அதிகாரிகளால் செய்யப்படும். குடியரசுத் தலைவரே நேரடியாகச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்ப முடியாது.

மேலும் விபரங்களுக்கு….

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply