பகுதி-8
யூனியன் பிரதேசங்கள்
(The Union Territories)
(பிரிவுகள் 239-242)
கேள்வி 1. மத்திய அரசு நேராட்சிப் பகுதிகள் எத்தனை? அவை யாவை?
பதில் :-
தேசிய தலைநகர்ப் பகுதி (National Capital Territory)யான தில்லி உட்பட ஏழு ஆகும். தில்லியைத் தவிர அந்தமான் நிகோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், தாத்ரா, நாகர் ஹவேலி. டாமன் டையூ, புதுச்சேரி மற்றும் சண்டிகார் ஆகும்.
கேள்வி 2. எந்தெந்த நேராட்சிப் பகுதிகளில் (UTS) மாநில அவைகள் (Assemblies), அமைச்சர் குழு உள்ளது?
பதில் :-
தில்லி மற்றும் புதுச்சேரியில் மட்டும்.
கேள்வி 3. நேராட்சிப் பகுதிகள் யாரால் நிர்வகிக்கப்படுகின்றன?
பதில் :-
குடியரசுத் தலைவர் தாம் நியமிக்கும் ஆட்சியாளர்கள் மூலமாக நேராட்சிப் பகுதிகளை நிர்வாகம் செய்கிறார். அவர்கள் ஆட்சியாளர்களாகவோ (Administrator) அல்லது லெப்டினனட் கவர்னராகவோ இருக்கலாம். சில நேரங்களில் அருகிலுள்ள மாநிலத்தின் ஆளுநரை நிர்வாகியாக இருக்குமாறு குடியரசுத் தலைவர் பணிக்கலாம்.
கேள்வி 4. தேசிய தலைநகர்ப் பகுதிக்கு அளிக்கப்பட்டுள்ள தனித்துவம் (Special Provisions) wing?
பதில் :-
மத்திய அரசு நேராட்சிப் பகுதிகளில் ஒன்றாக இருந்த போதிலும், தீல்மிக்கு ஒரு மாநில அரசைப் போல் எல்லா செயல்முறைகளும் உரிமைகளும் உண்டு. மாநில அவை, அவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை மற்ற மாநிலங்களைப் போல உண்டு. அமைச்சர்களின் எண்ணிக்கை அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10%க்கு மிகாமல் இருக்கும். ஆனால் பொது ஒழுங்குமுறை (Public Order), காவல் துறை மற்றும் நில சம்பந்தமான விஷயங்கள் நடுவண் அரசிடமே இருக்கும்.
அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியுறும் நிலையில் தேசிய தலைநகர்ப் பகுதியிலும் புதுச்சேரியிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படலாம்.
கேள்வி 5. நேராட்சிப் பகுதிகளைப் பற்றிய மற்ற அம்சங்கள் யாவை?
பதில் :- அமைதி, முன்னேற்றம், நல்ல அரசு இவைகளைக் கருத்தில் கொண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டையூ முதலியவைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒழுங்குமுறைகள் உருவாக்கலாம். அவைகள் செயல்படாத காலங்களில் அவசர ஆணைகள்
பிறப்பிக்க தேசிய தலைநகர்ப் பகுதி துணை ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர்க்கு அதிகாரம் உண்டு.
மாநிலங்களைப்போல் தனித்துவம் கொண்டு விளங்காமல் நேராட்சிப் பகுதியின் ஆட்சியாளர்களோ துணை ஆளுநர்களே! குடியரசுத் தலைவரின் சார்பில் செயல்படுகிறார்கள்.
கேள்வி 6. மாநில அவைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு சட்டம் இயற்ற யாருக்கு அதிகாரம் உண்டு?
பதில் :- பாராளுமன்றத்திற்கு.
பகுதி – 9
ஊராட்சி மன்றங்கள் (The Panchayats)
(பிரிவுகள் 243, 243A முதல் 0 வரை)
கேள்வி 1. ஊர் அவை (Gram Sabha)க்கும் ஊராட்சி மன்றத்துக்கும் (Panchayat) உள்ள வேறுபாடு யாது?
பதில் :-
ஓர் ஊராட்சி மன்றப் பகுதியில் உள்ள வாக்குரிமை பெற்ற அனைவரும் அடங்கிய அவை ஊர் அவை ஆகும். கிராமப்புற பகுதிகளில் தன்னாட்சி செய்வதற்குண்டான அமைப்பு ஊராட்சி மன்றங்களாகும்.
கேள்வி 2. ஊராட்சி மன்றங்களின் அமைப்பு (Constitution) உள்ளடக்கம் (Composition) மற்றும் அதிகாரங்கள் பற்றி விவரி.
பதில் :-
தன்னாட்சியின் அடிப்படை மையமாக அரசு சார்ந்த நிறுவனங்களான ஊராட்சி மன்றங்கள் மாவட்ட, வட்ட மற்றும் கிராம நிலை என்ற மூன்று நிலைகளில் இருக்கும். இருபது இலட்சத்துக்குக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் வட்ட அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் கிடையாது.
ஓர் ஊராட்சி மன்றத்தின் பகுதிகள் வட்டம் வட்டமாகப் (Wards) பிரிக்கப்படும். ஒவ்வொரு வட்டத்திற்கும் பிரதிநிதியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஊராட்சி மன்றத்தின் தலைவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப் படலாம்.
ஊராட்சி ஒன்றியத்தில் (Panchayat Union) ஊராட்சி மன்றத்தின் தலைவர்கள் உறுப்பினராகச் செயல்படுவார்கள். ஊராட்ச ஒன்றியப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநில கீழ் அவை (Assembly) உறுப்பி னர்கள் ஊராட்சி ஒன்றிய அல்லது மாவட்ட அளவில் உள்ள ஊராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தில் பங்கேற்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் செய்யலாம். இதே போன்று பாராஞ் மன்ற மேலவை உறுப்பினர்களும், மாநில மேலவை உறுப்பினர் களும் எந்தப் பகுதியில் வாக்காளர்களாக இருக்கிறார்களோ அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட குழுமம் (District Boards) நிர்வாகத்தில் பங்கேற்கலாம்.
கேள்வி 3. ஊராட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட வகுப்பினருக்குண்டான இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடுக.
பதில் :- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடி மக்களுக்கும் அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப நேரடியாகத் தேர்த் தெடுக்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு உண்டு. இதே மாதிரி பெண்களுக்கும் 33’/ % சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு. தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கும், பழங்குடி மக்களுக்கும் உண்டான ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கென 33′),% சதவீத ஒதுக்கீடு உண்டு. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்குண்டான வட்டங்கள் (Wards) சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படும்.
இதே போன்று ஊராட்சித் தலைவர் பதவிகளில் பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கும் மாநிலங்கள் சட்டம் மூலமாக இட ஒதுக்கீடு செய்யலாம்.
ஊராட்சி அமைப்புகளில் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய மாநில அவைகளுக்கு உரிமை உண்டு.
கேள்வி 4. ஊராட்சி மன்றத் தலைவர். உறுப்பினர்களின் பதவிக் காலம் எவ்வளவு ஆண்டுகள்?
பதில் :- ஐந்து.
கேள்வி 5 .ஊராட்சி மன்றங்களின் அதிகார வரம்புகள் யாவை?
பதில் :-
தன்னாட்சியின் அடிப்படை நிலைக்களன்களாக விளங்கும் வகையில் மாநிலங்கள் சட்டம் மூலமாக ஊராட்சி மன்றங்களுக்கு. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும். பொருளாதார மேம்பாடு அடைய வும் சமூக நீதி பெறவும் வகையில் ஊராட்சி மன்றங்கள் திட்ட மிடலாம். பதினோராம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் உண்டான திட்டங்களை நிறைவேற்றவும் ஊராட்சி மன்றங்கள் முயலும்.
கேள்வி 8. ஊராட்சி மன்றங்களுக்கு நிதி வருவாய் எந்த முறையில் கிடைக்கிறது?
பதில் :-
மாநில அரசு சட்டம் மூலமாக பொருத்தமான வரிகள் (Taxes), தீர்வைகள் (Duties), சுங்கங்கள் (Toll) மற்றும் கட்டணங்கள் (Fees) விதிக்கவும் வசூலிக்கவும் ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
மாநில அரசுகள், தாங்கள் வசூலிக்கும் வரிகளிலிருந்து ஊராட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலத் தொகுப்பு நிதியிலிருந்தும் (Consolidated Fund of the State) மானியங்கள் ஒதுக்கீடு செய்யும்.
ஊராட்சி அமைப்புகளின் நிதி நிலையை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் (Finance Commission) ஏற்படுத்தப்படும். மாநில வரிகளிலிருந்து பண ஒதுக்கீடு, தொகுப்பு நிதியிலிருந்து அளிக்கப்படும் மானியம், ஊராட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்தும் திட்டங்கள் முதலியன பற்றி பரிந்துரைகள் அளிக்கும்.
இந்த நிதி ஆணையமே நகர்மன்ற நிதி நிலைமை பற்றியும் பரிந்துரைகள் அளிக்கும். ஊராட்சி மன்றங்களின் நிதி நிலை இருந்த முறையில் இருப்பதற்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.
ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கைக் குறிப்புடன் ஆளுநர் மாநில அவைகளில் சமர்ப்பிக்கச் செய்வார்.
கேள்வி 7. ஊராட்சி அமைப்புகளில் வரவு, செலவு கணக்குகள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன?
பதில் :- வரவு செலவுக் கணக்குகள் காக்கும் மற்றும் தணிக்கை செய்யும் முறைகளைப் பற்றி மாநில அரசுகள் சட்டம் இயற்றலா.
கேள்வி 8. ஊராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துபவர் யார்?
பதில் :-
மாநில ஆளுநர்கள் அந்தந்த மாநிலத்துக்காக ஒரு தேர்த ஆணையரை நியமிப்பார்கள். உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் (ஊராட்சி மற்றும் நகர்மன்றம் முதலியன) அனைத்துத் தேர்தன் களுக்கும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதையும், முறையாகத் தேர்தல் நடப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
மாநிலச் சட்டவரையறைக்குட்பட்டு, தேர்தல் ஆணையரின் பணிமுறைகள், பதவிக் காலம் பற்றிய ஒழுங்கு முறை விதிகளை ஆளுநர் ஏற்படுத்தலாம்.
ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் பொழுது பின்பற்ற வேண்டிய அதே வழிமுறையை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையரை நியமித்த பின்பு அவருக்குப் பாதகமாக அவரது பணி விதிமுறைகளை மாற்ற முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்திற்குபட்டு தேர்தல் பற்றிய விதிமுறைகளை மாநில அவைகள் இயற்றிக் கொள்ளலாம்.
கேள்வி 9. மத்திய அரசு நேராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றம் களின் நிலை என்ன?
பதில் :- இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள விதிகள், முறைகள் அவை களுக்கும் பொருந்தும். ஆனால் அட்டவணைப் பகுதிகளுக்கும், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கும் இம்முறைகள் பொருந்தாது.
கேள்வி 10. தேர்தல் வழக்குகளைத் தீர்த்து வைப்பது யார்?
பதில் :- மாநில அரசு இயற்றும் சட்ட விதிகளின்படி, தேர்தல் வழக்குகள் நடத்தப்படும். ஆனால் தொகுதி வரம்பு மாற்றுதல்இட ஒதுக்கீடு தொகுதிகள் முதலியனவற்றில் நீதிமன்றங்கள் தலையிடாது.
கேள்வி 11.ஊராட்சி மன்றங்களைப் பற்றிய இப்பகுதி எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் கொண்டு வரப்பட்டது?
பதில் :- 1992இல் 73ஆவது திருத்தத்தின் அடிப்படையில் வாராட்சி மன்றங்களைப் பற்றிய இப்பகுதி சேர்க்கப்பட்டது.
கேள்வி 12.ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரப் பகிர்வளித்தலில் பெரும் பங்கு வகித்த இரு குழும அறிக்கைகள் யாவை?
பதில் :- பல்வந்த்ராய் மேத்தா குழுமம் (1956-58) மற்றும் அசோக் மேத்தா குழுமம் (1977) அறிக்கைகள் ஆகும்.
கேள்வி 13. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு ஊராட்சி பிரிவு – 40. முதன் முதலில் எந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது?
பதில் :- இராஜஸ்தானில்,
கேள்வி 14.அமைப்புகளை ஏற்படுத்தலும், அதிகாரப் பகர்தலும் அவசியம் பற்றி எடுத்துரைக்கிறது?
பதில் :- மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு முறை (Three tier structure)
பகுதி – 9அ
நகர் மன்றங்கள் (The Municipalities)
(பிரிவு 2431 – 243ZG)
கேள்வி 1. நகர்மன்றம் உருவாக்கம், அமைப்பு, பகுதிக் குழுக்கள் பற்றிக் கூறுக.
பதில் :-
கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறமாக மாறக் கூடிய இடங்கள் பேரூராட்சி (Nagar Panchayat) என்றும், சிறிய நிலப்பரப்பில் அமைந்துள்ள நகர்ப்புறங்கள் நகர்மன்றங்கள் (Municipal Council) எனவும், பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள நகர்ப்புறங்கள் நகர்மன்ற ஆணையம் (Municipal Corporation) என்றும் அழைக்கப்படும்.
நகர்மன்றப் பரப்புகள் பகுதி பகுதிகளாகப் (Wards) பிரிக்கப் படும். உறுப்பினர்கள் பகுதி வாரியாக மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தலைவர் (Chairperson) தேர்ந்தெடுப்பு முறை பற்றி மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளும்,
நகர்மன்ற ஆட்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளு மன்ற உறுப்பினர், நகர்மன்ற ஆட்சி வல்லுனர்கள் ஆகியோருக்கு பங்களிக்கும் முறை பற்றி மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் நகர்மன்ற நிர்வாக வல்லுநர்களுக்கு நகர்மன்றக் கூட்டங்களில் ஓட்டுரிமை கிடையாது.
ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களுக்கோ (Wards) வட்டக் குழு (Wards Committee) அமைக்கப்படும். வட்டங்களைச் சார்ந்த உறுப்பினர்களே தலைவராக இருப்பார்.
கேள்வி 2. நகர்மன்றங்களில் இட ஒதுக்கீடு முறை யாது?
பதில் :-
மூன்றுக்கு ஒரு பங்கு குறையாத அளவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு அவ்வகுப்பினரின் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து இட ஒதுக்கீடு அமையும். அவர்களுக்குள்ளும் பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பற்றி மாநில அரசு முடிவு செய்யும்.
கேள்வி 3. நகர்மன்ற உறுப்பினர்களின் கால வரையறை யாது?
பதில் :-
தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டுகள் பதவி வகிப்பார்கள். இடையில் மன்றங்கள் கலைக்கப்பட்டு புதிதாக நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் மீதிக் காலம் மட்டுமே பதவி வகிப்பார்கள். ஐந்தாண்டுகள் முடிவதற்கு ஆறு மாதங்களுக்குக் குறைவான காலமே இருந்தால் மறு தேர்தல் நடக்காது.
கேள்வி 4. நகர்மன்றங்களின் பொதுவான அதிகாரங்கள் யாவை?
பதில் :-
பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் இசைவாக பன்னிரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள விஷயங் களின் மீதான திட்டங்களை நகர்மன்றங்கள் தன்னாட்சி முறை யாகச் செயல்படுத்தலாம். மாநில அரசுகள், வரி விதிப்பு பற்றிய நகர்மன்ற வரை யறைகள் குறிப்பிட்டு அனுமதி அளிக்கலாம். மாநில ஒருங்நிணைந்த நிதியின் மூலமாக நகர் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கிடலாம்.
கேள்வி 5. நிதி, தேர்தல், நிதித் தணிக்கை (Audit) பற்றிய நிலை யாது?
பதில் :-
மாநில நிதிக் குழு (State Finance Commission) நகர்மன்றங் களின் நிதி நிலைமையை ஐந்தாண்டுக்கொரு முறை ஆய்வு செய்து ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
நகர்மன்றங்களின் செலவினங்களைத் தணிக்கை செய்வது குறித்து மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். நகர்மன்றத் தேர்தலும் அதற்குத் தொடர்பான வேலைகளை யும் மாநில தேர்தல் ஆணையம் கவனித்துக் கொள்ளும். ஊராட்சி மன்றங்களுக்கு விதிக்கப்பட்ட பல நடைமுறைகள் அதே மாதிரி நகர்மன்றங்களுக்கும் விவரிக்கப்பட்டுள்ளன. ஆதலால் மறுபடியும் அதே நடைமுறைகளை விரிவாக எடுத்துக் கூறவில்லை.
கேள்வி 6. உள்ளாட்சி அமைப்பில் உள்ள திட்டக் குழுக்கள் பற்றி விளக்குக. மாவட்ட திட்டக் குழுவும் பெருநகர்ப் பகுதி திட்டக் குழுவும் உள்ளாட்சி அமைப்பில் உள்ள குழுக்களாகும்.
பதில் :-
a) மாவட்ட திட்டக்குழு:
திட்டக் குழுவின் அமைப்பு அல்லது உள்ளடக்கம், குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, அந்தக் குழுக்களின் செயல்பாடுகள், குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மறை ஆசியவை பற்றி மாநில அவைகள் சட்டம் இயற்றும். பிந்தக் குழுவில் ஐந்தில் நான்கு பங்குக்கு குறையாத உறுப்பினர்கள், அந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிற மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நகர்ப்புற பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும்.
b) பெருநகர்த் திட்டக் குழு:
ஒவ்வொரு பெருநகருக்கும். பெருநகரின் வளர்ச்சிக்காக திட்ட முன்வடிவு தயாரிக்க பெரு நகர்த் திட்டக் குழு இருக்கும். திட்டக் குழு செய்ய வேண்டிய செயல்கள், தலைவர் தேர்த தெடுக்கும் முறை, குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்கள் விவரங்கள் பற்றி மாநில அரசு சட்டம் இயற்றும். பெருநசர் குழுப் பகுதியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், இவர்களிலிருந்து திட்டக் குழுவுக்கு மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெருநகர் பகுதிக்கான திட்டம் தயாரிக்கும் பொழுது பகுதியில் இருக்கும் இயற்கை மற்றும் மற்ற வளங்கள் பயன்படுத்தும் முறை, கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாத்தல் இவைகளைக் கணக்கில் கொள்ளும்.
கேள்வி 7. நகர் மன்றத்தைப் பற்றிய இப்பகுதி எந்தத் திருத்தத்தால் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?
பதில் :- 74ஆவது திருத்தத்தால் 1992இல் கொண்டு வரப்பட்டது.
கேள்வி 8. யார் காலத்தில் இந்தியாவில் முதல் முறையாக நகராட்சி அமைப்புகள் (Local Self Government) கொண்டு வரப்பட்டன?
பதில் :- ரிப்பன் பிரபு காலத்தில்.