பகுதி – 9ஆ
கூட்டுறவுச் சங்கங்கள் (The Co-Operative Societies)
(பிரிவு 243 ZH-ZT)
கேள்வி 1.இந்தப் பகுதி அரசியலமைப்புச் சட்டத்தில் எப்பொழுது கொண்டு வரப்பட்டது? இதன் முக்கியத்துவம் என்ன?
V
97ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் படி, ஜனவரி 2012இல் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள பகுதி இப்பகுதியாகும். 1992இல் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த 73, 74ஆவது திருத்தங்கள்படி முறையே ஊராட்சி மன்றங்கள் நகர்மன்றங்கள் பற்றிய செயல்முறைகள் பிரிவு 9 மற்றும் 9இல் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று கூட்டுறவு சங்கங்களின் செயல் முறைகள் பற்றிய இந்த 97ஆவது திருத்தமும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். கூட்டுறவுச் சங்கங்களுக்கு இத்திருத்தம் ஒரு தனித்துவ நிலையைக் கொடுத்துள்ளது.
கேள்வி 2.கூட்டுறவு சங்கங்களின் செயல்முறைகள் பற்றி சட்டம் இயற்ற யாருக்கு அதிகாரம் உள்ளது?
பதில் :-
மாநில அவைகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கும் முறை, செயல்முறைப்படுத்துதல், சங்கங்களைக் கலைத்தல் பற்றி சட்டம் இயற்றலாம். தாங்களாகவே விரும்பி அமைத்திடும் முறை, ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் இயங்குதல், பொருளாதார மேம்பாட்டிற்காக உறுப்பினர்கள் இயங்குதல் மற்றும் சங்கங்கள் சுதந்திரமாக செயல்படுதல் இவைகளைக் கருத்தில் கொண்டு சட்டங்கள் இயற்றப்படலாம். ஆனால் இப் பகுதி (9ஆ)க்குப் புறம்பாக சட்டங்கள் இயற்றக் கூடாது.
கேள்வி 3. கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழுமம் (Boarid of Directors) பற்றிக் குறிப்பு வரைக.
பதில் :-
நிர்வாகக் குழுவில் அதிகப்படியாக 21 பேர்கள் இருக்கலாம். தனிப்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பெண்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் குறைந்தது ஓர் உறுப்பினர் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்தும், ஓர் உறுப்பினர் பழங்குடியினர் வகுப்பிலிருந்தும் மற்றும் இரு பெண் உறுப்பினர்களும் நிர்வாகக் குழுவில் இருக்க வேண்டும்.நிர்வாகக் குழும உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள்.
நிர்வாகக் குழுவின் பதவிக் காலத்தில் பாதிக்கும் மேல் கடந்த நிலையில் ஏதாவது காலியிடங்கள் ஏற்பட்டால் நிர்வாகக் குழுவே அதே பிரிவைச் சார்ந்த ஓர் உறுப்பினரைக் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வங்கித் துறை, நிதி, பொது நிர்வாகம், கூட்டுறவு சங்கங்க ளுடன் தொடர்புடைய துறை முதலியவற்றில் சிறந்து விளங்கும் நிபுணர்களில் அதிகபட்சமாக இரண்டு பேர்களை மட்டும் நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 21 பேர்களுக்குண்டான வரையறை எல்லைக்குள் அடங்க மாட்டார்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. நிர்வாகக் குழுவின் எந்தவிதப் பதவிகளையும் (தலைவர், செயலர், பொருளாளர் போன்றன) வகிக்க முடியாது
கேள்வி 4 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தும் முறையை விவரி.
பதில் :-
கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் எல்லாத் தேர்தல்களைப் பொறுத்த வரையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் விதம், தேர்தல்கள் நடத்தும் முறை, தேர்தல்களைக் கண்காணிக்கும் பொறுப்பு இவைகளைப் பற்றிய விவரங்களை மாநில அரன். சட்டமாக இயற்றும். ஒரு நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடியதற்கு சற்று முன்பே அடுத்த நிர்வாகக் குழுவும். தேர்ந்தெடுக்கப்பட்டு, பழைய குழுவின் பதவிக் காலம் முடிந்தி உடனேயே புதிய நிர்வாகக் குழுமம் பதவியேற்கும்.
கேள்வி 5. கூட்டுறவுச் சங்கங்களைக் கலைப்பது அல்லற தற்ாமிகளாம் அவைகள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது எவ்வாறு?
பதில் :-
ஒரு கூட்டுறவுச் சங்கம் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டிருந்தாலோ, தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினாலோ, கூட்டுறவுச் சங்கம் அல்லது அதன் நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டாலோ, மாநிலச் சட்டம் குறிப்பிடும் வகையில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தவில்ளை யென்றாலோ, கூட்டுறவுச் சங்கமானது கலைக்கப்படலாம். அல்லது நிர்வாகக் குழுவின் செயல்முறைகளைத் தற்காலிக மாக நிறுத்தி வைக்கலாம்.
எந்தக் கூட்டுறவு சங்கங்களில் அரசிள் பங்குத் தொகைக இல்லையோ அல்லது அரசிடமிருந்து கடனோ. நிதி உதவியோ உத்தரவாதமோ பெறவில்லையோ, அந்தக் கூட்டுறவு சங்கங்கமாலா அரசு கலைக்கவோ அல்லது தற்காலிகத் தடையோ செய்ய முடியாது.
வங்கித் தொழில் நடத்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949இன் விதிகளும் பொருந்தும். ஒரு மாநிலத்துக்குள்ளே வங்கித் தொழில் நடத்தும் கூட்டுறவுச் சங்கங்களை மேற் கூறப்பட்ட காரணங்களுக்காகஓ ஆண்டு தற்காலிகமாக நிர்வாகக் குழுவின் பெயல்களைத் தடை செய்யலாம்.
கேள்வி 8.கூட்டுறவுச் சங்கங்களின் வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்வது எவ்வாறு?
பதில் :-
கூட்டுறவுச் சங்கங்கள் வரவு செலவு கணக்குகலைப் மரிப்பது பற்றியும் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்வது பற்றியும் மாநில அவைகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். அதே போன்று தணிக்கையாளர்களுக்கும் தணிக்கை நிறுவனங் களுக்கும் தேவையான தகுதி, அனுபவங்கள் பற்றியும் மாநில அவைகள் சட்டம் இயற்றும்
மாநில அரசோ, அரசின் அதிகாரம் பெற்ற அமைப்போ தயாரித்து வைத்திருக்கும் தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் பெயர்ப் பட்டியலிலிருந்து, கூட்டுறவுச் சங்கங்கள் பொதுக் குழுவின் மூலமாகத் தணிக்கையாளர்களை நியமிக்கும் நிதி ஆண்டு முடிந்து ஆறு மாதங்களுக்குள் அதன் கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். மாநிலச் சட்டத்தில் குறிப்பிடப்படும் மிகப் பரந்த அளவில் செயல்படும் தலையாய கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கை அறிக்கை சட்டத்தில் குறிப்பிடப்படும் முறையில் மாநில அவை களில் தாக்கல் செய்யப்படும்.
கேள்வி 7. கூட்டுறவுச் சங்கங்களைப் பற்றிய மற்றைய பல்வேறு கூறுகளைப் பற்றி விளக்குக.
பதில் :-
ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் ஒவ்வொரு நிதி ஆண்டும் முடிந்த ஆறு மாதங்களுக்குள் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும்.
சங்கத்தின் கணக்கு வழக்குகள், சங்கத்தைப் பற்றிய தகவல்கள், அதற்கு உபயோகமாக உள்ள நூல்கள், உறுப்பினர்களின் பார்வைக்கு தேவைப்பட்ட நேரத்தில் அளித்திடல் வேண்டும். உறுப்பினர்களுக்கு கூட்டுறவைப் பற்றிய அறிவு மற்றும் பயிற்சியை அளித்திடல் வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டவைகளுக்கு மாநில அவைகள் தகுந்த சட்டங்கள் இயற்றிக் கொள்ளலாம். தண்டனைகளையும் பற்றி மாநில அவைகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். குறிப்பாக கீழ்க்கண்ட குற்றங்கள் அவைகளில் உள்ளடங்கும்.
மாநிலச் சட்டத்தில் குறிப்பிடப்படும் ஓர் அதிகாரப் பூர்வமான நபருக்கு கூட்டுறவுச் சங்கமோ அல்லது அதன் அதிகாரியோ அல்லது உறுப்பினரோ வேண்டுமென்றே தவறான தகவல் களையோ தவறான அறிக்கையையோ அளித்தல்.
வேண்டுமென்றோ அல்லது தகுந்த காரணம் இன்றியோ சட்டம் குறிப்பிடும் அமைப்போ, அதிகாரியோ எழுத்து மூலமாக அளிக்கும் ஆணைகளையோ, வேண்டுகோள்களையோ. அழைப்பாணைகளையோ புறக்கணித்தல்.
ஒரு முதலாளியோ அல்லது வேலை கொடுக்கும் நிறுவனமோ கூட்டுறவுச் சங்கத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை, வேலை பார்ப்போரிடம் இருந்து பிடித்து விட்டு அதைக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் செலுத்தாமல் இருத்தல்.
சங்கத்திலுள்ள பதிவேடுகள், வியாபாரக் கணக்குகள், ஆவணங்கள், குறிப்பு அறிக்கை, பாதுகாப்பு, மற்றும் சங்கத்தைச் சேர்ந்த சொத்துக்கள் முதலியவைகளுக்கு அதிகாரப் பூர்வமாண பொறுப்பாளராக உள்ள ஒருவர் சட்டப்படி அதிகாரம் பெற்ற ஒருவருக்கு மேற் கூறப்பட்ட பொருட்களை கேட்கும் பொழுது அளிக்காமல் இருத்தல்.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் மற்றும் நடக்கும் பொழுதும் தவறான முறையற்ற வழிகளில் ஈடுபடுதல்.
கேள்வி 8. பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சட்ட விதிமுறைகளை இயற்றுவது யார்?
பதில் :- பாராளுமன்றம்.
கேள்வி 9. மத்திய அரசு நேராட்சிப் பகுதிக்கு இப்பகுதியில் கூறப்பட் டுள்ளனவைகள் பொருந்துமா?
பதில் :- பொருந்தும். அவைகள் உள்ள நேராட்சிப் பகுதிகளில், அவைகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். அவைகள் இல்லாத நேராட்சிப் பகுதிகளில் ஆட்சியாளர்கள் தகுந்த விதிமுறைகள் வகுப்பார்கள்.
பகுதி – 10
பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகள்
(பிரிவு 244)
கேள்வி 1. மலைவாழ் மக்களும் பழங்குடியினரும் நிறைந்த வடகிழக்கும் மாநிலங்களின் தகுந்த வளர்ச்சிக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளவற்றைச் சுருங்கக் கூறுக.
பதில் :-
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, திரியுரா ஆகிய எட்டு மாநிலங்களிலும் மலைவாழ் மக்களும் பழங்குடியினரும் முழுமையாகவோ அல்லது அதிக அளவிலோ வசித்து வருகின்றனர். பழங்குடியினர் அல்லது. மலைவாழ் மக்கள் அல்லாதார்களால் குறிப்பாக பணவட்டி அளிப்போர் களால் (Money Lenders) அவர்களது பொருளாதாரம் பாதிக்கப் பட்டு விடாமல் இருக்கவும், அவர்களது பாரம்பரிய பண்பாடு சமூக முறைகளைப் பாதுகாக்கவும் செயல்படுத்த வேண்டியது பற்றி விவரிக்கிறது.
ஐந்தாவது அட்டவணை அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோராம் தவிர மற்ற மாநிலங்களிலுள்ள பட்டியலிடப் பட்டுள்ள பகுதிகள், பழங்குடியினர் வாழும் பகுதிகளின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஆறாவது அட்டவணை அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோராம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
கேள்வி 2. பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு கூறப்பட்டுள்ளன யாது?
பதில் :-
குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளைபட்டியவிடப்பட்டுள்ள பகுதிகள் என அறிவிக்கலாம். ஆளுநர் அந்தப் பகுதிகள் அமைதியாக இருக்கவும் நல்லாட்சி ஏற்படவும் ஒழுங்கு முறைகள் (Regulations) இயற்றலாம். குறிப்பாக பழங்குடியினர் நிலங்களை விற்கத் தடை ஏற்படுத்தவோ அல்லது விற்பனையை கட்டுப்படுத்தவோ, பழங்குடியினருக்கு வட்டிக்குப் பணம் அளிப்போர்களின் செயல்முறைகளில் ஒழுங்குமுறை ஏற்படுத்தவோ ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
மேற்கூறப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளை சட்டங்கள் பாதிக்காது. அரசின்ஆளுநர் மேலே கண்ட ஒழுங்கு முறைகளை ஏற்படுத்துமுன் பழங்குடியினர் ஆலோசனைக் குழு (Tribal Advisory Council) இருந்தால் அதையும் கலந்தாலோசிப்பார்.
பகுதி – 11
மத்திய அரசு, மாநில அரசு தொடர்புகள் (Relations between the Union and the States)
(பிரிவுகள் 245-263)
உட்பிரிவு -1
சட்டமியற்றும் தொடர்புகள்
(பிரிவுகள் 245-255)
கேள்வி 1. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சட்டம் இயற்றும் பொதுவான அதிகாரங்கள் யாவை?
பதில் :- இந்தியாவின் முழுமைக்கோ அல்லது ஒரு பகுதிக்காகவோ சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
ஒரு மாநிலம் முழுமைக்கோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ சட்டம் இயற்ற மாநில அவைகளுக்கு (Legislature of a State) அதிகாரம் உண்டு.
பாராளுமன்றத்திற்கு ஒன்றியப் பட்டியலில் (Union Listi உண்டான விஷயங்கள் பற்றிய சட்டங்கள் இயற்ற முழுமை யான அதிகாரங்கள் உண்டு.
மாநில அவைகளுக்கு மாநிலப் பட்டியலில் (State List) உள்ள விஷயங்கள் பற்றி சட்டங்கள் இயற்ற முழுமையான அதிகாரங்கள் உண்டு..- மத்திய அரசின் நேராட்சிப் பகுதிகளைப் பொறுத்த வரையில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் மாநிலப் பட்டியலில் இருந்த போதிலும், சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ள விஷயங்கள் பற்றி சட்டங்கள் இயற்ற பாராளுமன்றம், மாநில அவைகள் இரண்டுக்கும் அதிகாரம் உண்டு.
கேள்வி 2. மூன்று பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத விஷயங்கள் (Residuary Matters) பற்றிய சட்டங்கள் இயற்ற யாருக்கு அதிகாரம் உண்டு?
பதில் :- பாராளுமன்றத்திற்கு. இதைத் தவிர மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் குறிப்பிடப்படாத விஷயங்கள் மீது வரிகள் விதிப்பது உட்பட, சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
கேள்வி 3. மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் பற்றி பாராளு மன்றம் எப்பொழுது சட்டம் இயற்றலாம்?
பதில் :- தேசிய நலனுக்காக மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் பற்றிச் சட்டம் இயற்ற வேண்டும் என அவையில் வருகை தந்துள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மையுடன் பாராளுமன்ற மேலவை (Rajya Sabha) தீர்மானம் (Resolution) நிறைவேற்றினால், அத்தகைய தீர்மானம் அமலில் இருக்கும்வரை பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம் (பிரிவு 250).
அவசர நிலை பிரகடனம் செயலில் இருக்கும் பொழுதும் சட்டம் இயற்றலாம். அவசர நிலை முடிந்த ஆறு மாதங்களுக்குப் பின் பாராளுமன்றத்திற்குச் சட்டம் இயற்ற இயலாத பகுதிகள் செல்லாதவைகளாகி விடும்.
பன்னாட்டு ஒப்பந்தங்களை (International Treaties or Agreements) முன்னிட்டும் மாநிலப் பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள விஷயங்கள் மீது சட்டம் இயற்றலாம்.
பிரிவு 356இன் படி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர்’ஆட்சி (President’s Rule) நடக்கும் பொழுதும் சட்டம் இயற்றலாம்.ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் கேட்டுக் கொண்டல் அவைகளுக்காகப் பாராளுமன்றம் மாநிலப் பட்டியலை ஒட்டிய சட்டம் இயற்றலாம்.
கேள்வி 4. ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் பரிந்துரையோ அல்லது முன் அனுமதியோ பெற வேண்டிய பட்சத்தில் அந்தச் செயல்முறையைப் பின்பற்றாமல் ஒரு சட்டம் இயற்றப்பட்டு விட்டால் அந்தச் சுட்டம் செல்லுபடியாகுமா?
பதில் :- செல்லுபடியாகும் (பிரிவு 255).
கேள்வி 5. முரண் கொள்கையை (Doctrine of Repugnancy)ப் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
ஒருங்கிணைந்த பட்டியலில் (Concurrent List) குறிப்பிடப் பட்டுள்ள விஷயங்களைப் பற்றி பாராளுமன்றமும், மாநில அவைகளும் தனித்தனியாக சட்டம் இயற்றியிருந்தால் பாராளு மன்றச் சட்டமே செல்லுபடியாகும். மாநிலச் சட்டத்தின் எந்தெந்தப் பகுதிகள் பாராளுமன்றச் சட்டத்திற்கு முரணாக உள்ளதோ அப்பிரிவுகள் நடைமுறையில் பயனற்றதாக விளங்கும் (Void to the Extent of Repugnancy). இதுவே முரண் கொள்கையாகும்.
கேள்வி 6. சாராம்சக் கொள்கை (Doctrine of Pith and Substance) என்றால் என்ன?
பதில் :- பாராளுமன்றமோ மாநில அவைகளோ தங்களுக்கென ஒதுக்கப்பட்ட விஷயங்களின் மீதே சட்டம் இயற்ற இயலும் ஆனால் சில நேரங்களில் ஒருவர் இயற்றும் சட்டத்தில் மற்றொருவருக் குண்டான விஷயங்களின் அம்சமும் காணப்படும். இத்தகைய நிலையில் நீதிமன்றங்கள் சட்டத்தின் சாராம்சத்தை ஆய்ந்து கணிசமான பகுதி தன் அதிகார வரம்பில் இருந்து, தற்செயலாக அடுத்தவர் பகுதியைத் தொட்டால் அந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்காது. இதுவே சாராம்சக் கொள்கை (Doctrine of Pith and Subtance) எனப்படும்.
கேள்வி 7. இந்தியக் கூட்டாட்சி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக
பதில் :- அமெரிக்கா போன்ற நாடுகளில் மத்திய, மாநிலங்களுக்கு இடையே தெளிவான வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உண்டு. இங்கிலாந்து போன்ற நாடுகளில் மத்திய அரசு மட்டுமே (Unitary Government) உள்ளது. இந்தியக் கூட்டாட்சி முறை மேலே கண்ட இரு பிரிவுகளின் கூறுகளையும் கொண்டதாக விளங்குகிறது. மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என்ற அதிகார வரையறை பிரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்டியலில் இல்லாத விஷயங்கள் (Residuary Powers) மீது சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அவசர நிலைப் பிரகடனத்தின்போது மத்திய, மாநில அரசுகள் ஒருமையுடன் செயல்படும். குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநில விஷயங்கள் மீது மத்திய அரசு சட்டம் இயற்ற இயலும். இதுவே இந்தியக் கூட்டாட்சி முறையின் அமைப்பாகும்.
கேள்வி 8. பன்னாட்டு ஒப்பந்தங்களை முன்னிட்டு, மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தின் மீது மத்திய அரசு சட்டம் இயற்ற விரும்பினால், மாநிலங்களைக் கலந்தாலோசிப்பது அவசியமா?
பதில் :- இல்லை.