பகுதி – 6
மாநிலங்கள்
உட்பிரிவு – 2
நிர்வாகம் (பிரிவுகள் 153-167)
ஆளுநர்
பிரிவுகள் 153-162)
1. ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்? அவர் பதவிக் காலம் எவ்வளவு?
பதில் :- ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் ஆளுநர் இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவாக ஒரே ஆளுநரும் இருக்கலாம். ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அவருடைய பதவிக் காலம் ஐந்தாண்டுகளாக இருந்த போதிலும்,குடியரசுத் தலைவரின் விருப்பம் நீடிக்கும் வரைதான் (During the pleasure of the President) பதவியில் தொடருவார். ஐந்தாண்டுகள் முடிந்தாலும் அடுத்த ஆளுநர் பதவியேற்கும் வரை பதவியில் தொடரலாம். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆளுநருக்கு உறுதிமொழி அளிப்பார் (Administering oath
2. ஆளுநராக நியமிக்கப்பட வேண்டிய தகுதிகள் ?
பதில் :- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சட்ட சபை அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது. உறுப்பினர்கள் ஆளுநராகப் பதவி ஏற்றால் உறுப்பினர் பதவியை இழந்ததாகக் கருதப்படு வார்கள். ஊதியம் தரக்கூடிய அலுவல் எதுவும் வகிக்கக் கூடாது.
3. ஆளுநரின் மாத ஊதியம் எவ்வளவு?
பதில் :- ஆளுநரின் மாத ஊதியம் ரூ. 1,25,000. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராகச் செயல்படும் பொழுது குடியரசுத் தலைவர் ஆணைப்படி குறிப்பிட்ட மாநிலங்கள் ஆளுநர் ஊதியத்தைப் பகிர்ந்து அளிக்கும். பதவி வகிக்கும் காலத்தில் ஆளுநர் ஊதியம் குறைக்கப்பட மாட்டாது.
4. ஆளுநர் தன் பதவி விலகல் மடலை யாருக்கு அனுப்ப வேண்டும்?
பதில் :- குடியரசுத் தலைவருக்கு.
5. ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் யாவை?
பதில் :- மாநில நிர்வாகத்தின் தலைமைப் பீடத்தில் இருப்பவர் ஆளுநர். அதை அவர் முதலமைச்சர், அமைச்சரவை மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தின் வழி செயல்படுத்துவார். எந்தெந்த துறைகளில் சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு (State legislature) அதிகாரம் உள்ளனவோ, அந்தத் துறைகளில் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் ஆளுநர்
6. குற்றவியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மன்னிப்பு அளிப்பது சம்பந்தமாக ஆளுநருக்கு உண்டான அதிகாரங்கள் யாவை?
பதில் :- எந்தெந்தத் துறைகளில் சட்டம் இயற்ற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதோ அந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆளுநர் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை முழுமையாக நீக்க முடியும் (Pardon). தண்டனையின் காலத்தைக் குறைக்கலாம் (Remission), தண்டனையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்தி போடலாம் (Reprieve or Supend) கடுமையான தண்டனைக்குப் பதிலாக தீவிரம் குறைந்த தண்டனையாக மாற்றலாம் (Commutation).
7.ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
பதில் :- சட்டம் இயற்ற ஆளுநருக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் அடிப்படையில் ஒருவர் மரண தண்டனை பெற்றிருந்தால் அதைக் குறைக்க மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
8.எந்தெந்த விஷயங்களில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் எனத் தீர்மானிப்பவர் யார்?
பதில் :- ஆளுநரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
9. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
பதில் :- கவிக்குயில் சரோஜினி நாயுடு.
மாநில அமைச்சர் குழு பிரிவுகள் 163-164)
1. மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர் குழுவை யார் நியமிக்கிறார்? அவர்களது பணிகள் யாவை?
பதில் :- முதலமைச்சரை நியமிப்பவர் ஆளுநர். அவரே முதலமைச் சரின் பரிந்துரையின் பேரில் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார். முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் ஆளுநரின் விருப்பம் நீடிக்கும் வரை (During the pleasure of the Governor) பதவியில் தொடருவர்.முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பதவி உறுதிமொழி அளிப்பவர் ஆளுநர்.
மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர்; அரசு நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் குழுவின் பரிந்துரையின்படி நடத்துவார். சில நேரங்களில் ஆளுநர் தனது விருப்பப்படியே (Discretion) செயல்படுவார். எந்த விஷயங்களில் தனது விருப்பம் படி செயல்பட வேண்டுமென்பது ஆளுநரின் முடிவாகும்.
ஆளுநர் எடுத்த முடிவைப் பற்றியும் அமைச்சரவை அளித்த பரிந்துரைகள் பற்றியும் நீதிமன்றம் விவாதிக்காது.
2. மாநிலங்களின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக முடியுமா?
பதில் :- முடியும். ஆனால் அமைச்சரான ஒருவர் ஆறு மாதங்
களுக்குள் ஏதாவது ஓர் அவையில் உறுப்பினராக வேண்டும்.
3. ஒரு மாநிலத்தில் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம்?
பதில் :-குறைந்தது 12 பேர் இருக்க வேண்டும். அதிக பட்சமாக சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டுக்கு மேல் இருத்தல் கூடாது.
4. எந்தெந்த மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலனைக் கவனிக்க கண்டிப்பாக ஓர் அமைச்சர் இருக்க வேண்டும்?
பதில் :- சத்தீஸ்கர், ஜார்க்கண்டு, மத்திய பிரதேஷ், ஒரிஸ்ஸா மாநிலங்களில்,
5. அமைச்சர்கள் குழு யாருக்குக் கூட்டுப் பொறுப்பு வாய்ந்தவர்கள்?
பதில் :- மாநில கீழவைக்கு.
6. அமைச்சர்களின் ஊதியத்தையும் படியையும் நிர்ணயிப்பது யார்?
பதில் :- சட்டம் மூலமாக மாநில அவைகளே முடிவு செய்து கொள்ளும்.
7.இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
பதில் :-சுசேதா கிருபாளினி.
அட்வகேட் ஜெனரல்
83
(பிரிவு -165)
1. மாநிலத்தின் முதன்மைச் சட்ட அதிகாரி யார்? அவர் பொறுப்புகள் யாவை?
பதில் :- அட்வகேட் ஜெனரல் மாநிலத்தின் முதன்மைச் சட்ட அதிகாரி ஆவார். இவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். ஆளுநருக்கும் அரசுக்கும் சட்ட சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குவார். முக்கியமான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடுவார். ஆளுநரால் அளிக்கப்படும் மற்ற சட்ட சம்பந்தமான வேலைகளும் செய்வார். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வேண்டிய தகுதிகள் இவருக்கும் வேண்டும். ஆளுநரி ரின் விருப்பம் நீடிக்கும் வரைதான் இவர் பதவியில் தொடரலாம். இவரது ஊதியம் ஆளுநரால் நிர்ணயிக்கப்படும்.
மாநில அவைகளில் பேசவோ, அல்லது அவை நடவடிக்கை களில் பங்கு கொள்ளவோ அட்வகேட் ஜெனரலுக்கு உரிமை உண்டு. ஆனால் அவைகளில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
அரசு நிர்வாகம் நடத்தும் முறை (பிரிவுகள் 166-167)
1. மாநிலத்தில் அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படும்?
பதில் :- மாநிலத்தின் நிர்வாக செயல்கள் எல்லாம் ஆளுநரின் பெய ரால் நடப்பதாகக் கூறப்படும். உண்மையிலேயே ஆளுநரைக் கலந்தாலோசித்து எடுத்த முடிவுகளா என்று நீதிமன்றம் விசாரிக் காது. அரசு ஆணைகளை ஊர்ஜிதம் செய்து கையொப்பமிடுவது ஆளுநர் பேரால் அரசு அதிகாரிகளால் செய்யப்படும். ஆளுநரே நேரடியாகச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்ப முடியாது.
மாநில அரசு அலுவல் நடக்கும் முறைகளைப் பற்றியும் விதி முறைகள் ஆளுநரால் இயற்றப்படும். அமைச்சர்களுக்கிடையே பணி ஒதுக்கீடுவது பற்றியும் அரசியலமைப்புச் சட்டத்தின்படிஆளுநர் தன்னிச்சையாகச் செயல்முறைகளைப் பற்றிய விதிமுறைகள் இயற்ற வேண்டியதில்லை
. 2. ஆளுநருக்கும் மாநில முதல்வருக்குமுள்ள நிர்வாகத் தொடர்பு பற்றி கூறுக
பதில் :- மாநிலஅரசு நிர்வாகத்தைப் பற்றி அமைச்சரவை எடுத்த முடிவுகளைப் பற்றியும் சட்டம் இயற்றும் திட்டங்களைப் பற்றி யும் முதலமைச்சர் அவ்வப்போது ஆளுநருக்குத் தெரிவிப்பார். ஆளுநரே அது பற்றிய விவரங்களை முதலமைச்சரிடம் கேட்கலாம். ஓர் அமைச்சர் எடுத்த முடிவை, அமைச்சர் குழுவின் பார்வைக்கு அனுப்புமாறு ஆளுநர் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்ளலாம்.
உட்பிரிவு 3
மாநில அவைகள் (பிரிவுகள் 168-212)
பொது
(பிரிவுகள் 168-177)
1. மாநில அவைகள் எவைகளை உள்ளடக்கின?
பதில் :- ஆளுநர், கீழவை (Assembly) மற்றும் மேலவை (Council) இருந்தால் மேலவையுமாகும்.
2. எந்தெந்த மாநிலங்களில் இரு அவைகள் உள்ளன?
பதில் :- பீஹார், மஹாராஷ்டிரா, கர்னாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில்.
3.ஒரு மாநிலத்தில் மேலவையை உருவாக்குவதற்கும் கலைக்கவும் யாருக்கு அதிகாரம் உண்டு?
பதில் :- பாராளுமன்றத்திற்கு, சட்டம் மூலமாக; ஆனால் அதற்கு முன்பு அந்த மாநிலத்தின் கீழவையில் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டவர்களாலும், அவையில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் மூன்றுக்கு இரண்டு பங்கு உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் செயல்படும்.
4. கீழ்வை, மேலவைகளில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்?
பதில் :- கீழவைகளில் 60 முதல் 500 வரை உறுப்பினர்கள் இருக் கலாம். ஆனால் அருணாசல பிரதேசம், கோவா, சிக்கிம், மிசோராம் மாநில அவைகளில் 60க்கும் குறைந்த உறுப்பினர்கள் இருக்கலாம். ஒவ்வொரு தொகுதியின் மக்கள் தொகையும், தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடுமான வரையில் மாநிலம் முழுவதும் ஒரே சீராக இருக்கும்.
மேலவையில் 40 உறுப்பினர்களுக்குக் குறையாமலும், கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
5.மேலவையில் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள்?
பதில் :- i) மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள், நகர்மன்றம், மாவட்டக் குழுமம், இதைப் போன்று பாராளுமன்றத்தால் குறிப்பிடப்படும் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந் தெடுக்கப்படுவார்கள்;
ii) பன்னிரண்டில் ஒரு பகுதியினர் மாநிலத்தில் வசிக்கும் பட்டதாரிகளால் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்;
ii) பன்னிரண்டில் ஒரு பகுதியினர் மூன்றாண்டுகளுக்கு மேல் உயர்நிலைப் பள்ளி மற்றும் அதற்கு மேலுள்ள கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக வேலை பார்ப்பவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்;
iv) மூன்றில் ஒரு பகுதியினர் கீழவை மூலமாகத் தேர்ந் தெடுக்கப்படுவர்;
v) இலக்கியம், அறிவியல், கலை. கூட்டுறவுத் துறை, சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவர்களை மீதமுள்ள
இடங்களுக்கு (ஆறில் ஒரு பகுதி) ஆளுநர் தியமிப்பார்
6.கிழவை, மேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் எவ்வளவு?
பதில் :- கலைக்கப்பட்டாலொழிய கீழவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள்.
அவசர நிலைப் பிரகடனம் செயலில் இருக்கும்பொழுது ஐந்தாண்டுகளுக்கு மேலும் சட்டமன்றத்தின் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஓராண்டு வரை நீட்டித்துக் கொள்ள லாம். அவசர நிலைப் பிரகடனம் ரத்து செய்த பின்பு காலாவதி யான சட்டமன்றத்தை ஆறு மாதங்களுக்கு மட்டும் தொடர்ச் செய்யலாம்.
மேலவை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும். ஆனால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பகுதியினர் பதவி விலகுவார்கள்.
7. கீழவை மற்றும் மேலவையில் உறுப்பினராகத் தேவையான தகுதிகள் யாவை?
பதில் :- கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட 25 வயதும், மேலவைக்கு 30 வயதும் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பாராளுமன்றச் சட்டம் கூறும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, இந்திய இறையாண்மையை யும் ஒருங்கிணைப்பையும் மதித்து நடப்பேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும்.
8. ஆளுநருக்கும் அவைகள் நடைமுறைகளுக்கும் உண்டான தொடர்பு யாது?
பதில் :-
i) இரு அவைகளுக்கும் தலைமை நிலையில் இருப்பவர் ஆளுநர். அவைகளின் இரு கூட்டத் தொடர்களுக்கு இடையில் இடைவெளி ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது இரு அவைகளையும் கூட்டுவார். கூட்டத் தொடரை முடிப்பதற்கும் (Prorogation), சட்ட மன்றத்தைக் கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
II]அவைகளைத் தனித்தனியாகக் கூட்டியோ அல்லது ஒருங்சிணைந்த கூட்டத்திலோ ஆளுநர் உரை நிகழ்த்தலாம்.
III) நிலுவையிலுள்ள மசோதாக்கள் மீதோ அல்லது மற்ற படியோ அவைகளுக்கு ஆளுநர் செய்திகள் அனுப்ப லாம். இரு அவைகளும் இச்செய்திகளை கவனம் அளித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்.
IV) பொதுத் தேர்தல் முடிந்து புதிதாகச் சட்டமன்றம் கூடும் பொழுது மேலவையும் இருந்தால் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். அதைத் தவிர ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் இதே மாதிரி உரையாற்றுவார். பொதுவாக ஆளுநர் உரையில் அரசு செய்யவிருக்கும் அல்லது செய்த திட்டங்களைப் பற்றி விளக்கமான செய்திகள் அடங்கியிருக்கும். பின்பு நடை முறையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வரும்; கருத்துரையாடலுக்குப் பின்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
9. அவை உறுப்பினர்களாக இல்லாத போதும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளும் உரிமை பெற்றவர்கள் யாவர்?
பதில் :- அமைச்சர்களாக இருப்பவர்கள் ஏதாவது ஓர் அவையில் உறுப்பினராக வேண்டும். தான் உறுப்பினராக இல்லாத அவை யிலும் அமைச்சர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள லம். ஆனால் வாக்குரிமை, உறுப்பினர்களாக உள்ள அவையில் மட்டும் உண்டு.
இதே போன்று மாநிலத் தலைமை வழக்கறிஞரும் (Advocate Gளைl) அவை நடவடிக்கைகளில் பங்கு கொள்ளலாம். ஆனால் வாக்குரிமை கிடையாது.
மாநில அவைகளின் செயல் அலுவலர்கள்
(பிரிவுகள் 178-187)
1. மாநிலங்களின் கீழவையில் உள்ள செயல் அலுவலர்கள் யாவர்? அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பணி முதலியன பற்றிக் குறிப்பிடுக.
பதில் :-
கீழவையின் தலைவராகச் செயல்படுபவர் அவைத் தலைவர். (Speaker). அவருக்குக் கீழ் உதவித் தலைவர் (Deputy Speaker இருப்பார். இருவரும் கீழவையினால் தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள். மன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் பொழுது தலைவர் அல்லது உப தலைவர் பதவியிலிருந்தும் நீங்கியதாகக் கருதப்படுவர்.
தலைவரும் உபதலைவரும். பதவி நீங்கக் கோரி சட்ட மன்றத்தில் 14 நாட்களுக்கு முன்னதாகவே தகவல் கொடுக்கப் படும். இவர்களின் பதவி நீக்கத் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இருவரும் பதவி இழந்ததாகக் கருதப்படுவார்கள்.
அவைத் தலைவர் பதவி காலியாக இருக்கும்பொழுது உபதலைவர், அவைத் தலைவராகச் செயல்படுவார். இருவரின்
பதவி காலியாக இருக்கும் பொழுது நியமிக்கப்படுபவர் தலைவராகச் செயல்படுவார். அவை நடக்கும் காலங்களில் இருவரும் பணி செய்ய இயலாத நிலையில் இருக்கும் பொழுது அவையின் முடிவுப்படி ஓர் உறுப்பினர் தலைவராகச் செயல்படுவார். தலைவர், உபதலைவர் தங்களது பதவி விலகல் மடலை ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொள்ள வேண்டும்.கீழவை கலைக்கப்பட்டாலும், புதிய கீழவை முதன் முதலில் கூடும் வரை தலைவர் தன் பதவியைத் தொடர்ந்து வகிப்பார்.
தலைவர், உபதலைவர் இவர்களுடைய பதவி நீக்கத் தீர்மானம் அலையின் பரிசீலனையில் இருக்கும் பொழுது இருவரும் அவைகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தலைவராகவோ உபதலைவராகவோ செயல்பட மாட்டார்கள். தலைவர் பதவி நீக்கத் தீர்மானம் கருத்துரையாடலில் உள்ள பொழுது தலைவர் ஓர் உறுப்பினராக வாக்களிக்க உரிமை உண்டு. ஆனால் அவருக்கு முடிவு செய்யும் வாக்கு (Casting Vote) கிடையாது.
மேலவையின் தலைவருக்கும் (Chairman) உபதலைவருக்கும் (Deputy Chairman) இதே மாதிரி அதிகாரங்களும் செயல்முறை களும் உண்டு.
2. இரு அவைகளின் தலைவர் மற்றும் உப தலைவர்களின் ஊதியம், படிகளைத் தீர்மானிப்பவர் யார்?
பதில் :- மாநில அவைகளே சட்டம் மூலமாகத் தீர்மானிக்கும்.
3. இரு அவைகளின் செயலகத்தைப் பற்றிக் குறிப்பிடுக.
பதில் :- இரு அவைகளுக்கும் பொதுவாகவோ தனித்தனியாகவோ செயலகம் உண்டு. செயலகத்தில் பணிபுரிவோரைத் தேர்ந் தெடுக்கும் முறை, பணிவிதிகள் பற்றிய ஒழுங்கு முறைகளை அவைகளே முடிவு செய்து கொள்ளும். அப்படி செய்யாத பட்சத்தில் இரு அவைத் தலைவரையும் கலந்தாலோசித்து ஆளுநர் ஏற்படுத்தும் ஒழுங்கு முறை விதிகள் நடைமுறையில் இருக்கும்.
அவைகளின் நடைமுறைகள் (பிரிவுகள் 188-189)
1]அவைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன?
பதில் :-
i) ஒவ்வொரு உறுப்பினரும் பதவியேற்கும் முன் ஆளுந ரிடம் அல்லது அதற்கென அவருடைய சார்பில் நியமிக்கப்படும் நபரிடமிருந்து மூன்றாவது அட்டவணை யில் குறிப்பிட்டபடி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
18) அவையில் ஏற்படும் பிரச்சினைகளை வாக்கெடுப்பு மூலமாக அவையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் முடிவுப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
iii) அவையின் தலைவராக இருப்பவர் முதலில் வாக் கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது; இரு தரப்பின ருக்கும் சமமான வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் மட்டுமே தனது வாக்கை (Casting Vote) அளிக்க வேண்டும்.
iv) அவைகள் செயல்படுவதற்குக் குறைந்தது பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அல்லது பத்து பேர், இவைகளில் எது அதிகமோ அது தேவை. இது கோரம் (Quorum என்றழைக்கப்படும். கோரம் ஏற்படும் வரை அவையை ஒத்தி வைக்க அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவைத் தலைவருக்கு உரிமை உண்டு.
V) உறுப்பினர் தகுதியில்லாத ஒருவர் அவையில் பங்கேற் றார் அல்லது வாக்களித்தார் என்று காரணங் காட்டி ஏற்கெனவே நடந்த அவைச் செயல்களைச் செல்லாத தாக ஆக்க முடியாது. சில உறுப்பினர்களின் பதவிகள் காலியாக இருந்த போதிலும் அவை நடவடிக்கைகள் தொடர எந்த விதத் தடையுமில்லை.