பகுதி – 16
சில குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனிப்பட்ட சலுகைகள்
(பிரிவுகள் 330-342)
கேள்வி 1. குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனியாகத் தரப்பட்ட சலுகைகள்யாவை?
பதில் :-
பாராளுமன்றத்தில் மக்களவையில் தாழ்த்தப்பட்ட பிரிவின ருக்கும், பழங்குடியினருக்கும் மாநிலத்தில் அவர்களின் மக்கள் தொகையைப் பொறுத்து இட ஒதுக்கீடு செய்யப்படும். அதே போன்று மக்களவையில் இரண்டு உறுப்பினர்களுக்கு மிகாமல் ஆங்கிலோ இந்தியர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.
இதே போன்று மாநிலங்களில் உள்ள கீழ் அவைகளிலும் காழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் பழங்குடியினருக்கும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இட ஒதுக்கீடுகள் உண்டு. ஆதரின் விருப்பப்படி ஆங்கிலோ இந்தியர் இனத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் மாநிலங்களின் கீழ் அவைக்கு நியமிக்கப்படலாம். இந்த ஒதுக்கீடுகள் தற்பொழுது 2020 வரையில் நீடிக்கப்பட் டிருக்கின்றன.
பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியர்களுக்கு உண்டான இதுக்கீடு ஜம்மு காஷ்மீரில் கிடையாது. அஸ்ஸாம் மாநில சட்ட மன்றத்தில் அதன் தன்னாட்சி பெற்ற
மாவட்டங்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்தல் வேண்டும். நிர்வாகத் திறனைச் சீராகப் பராமரித்தலைக் கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடி வகுப்பினருக்கும் மத்திய அரசு மாநில அரசு பதவிகளில் சேர, பதவி உயர்வுகள் பெற சலுகைகள் உண்டு. போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்களின் அளவைக் குறைக்கலாம்.
கேள்வி 2. தாழ்த்தப்பட்ட மக்களுக்குண்டான தேசிய ஆணையம் National Commission for Scheduled Castes) பற்றிக் குறிப்பு -வரைக.
பதில் :-
தலைவர், துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர் களைக் கொண்டது இவ்வாணையம். இவர்கள் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழோ அல்லது மற்றச் சட்டங் களின் அடிப்படையிலோ அரசு ஆணைகள் மூலமாகவோ தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கு அளித்திருக்கும் பாதுகாப்புகள் ஒழுங்கான முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என ஆணையம் ஆய்வு செய்யும்; கண்காணிக்கும். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைப் பாதிப்பு மற்றும் பாதுகாப்புகள் சம்பந்தமாக வரும் புகார்களைக் கவனிக்கும்; அவர்கள் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காகத் திட்டமிடுவதற்கு அரசுக்கு உதவும்.
ஆணையம் ஆண்டுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவருக்கு தனது செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் பரிந்துரைகளின் மீதான எடுத்த அல்லது எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் இணைத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார்.
பரிந்துரைகளில் ஏதாவது மாநிலங்களைப் பற்றியதாக இருந்தால் அறிக்கையின் பிரதிகள் அந்த மாநில ஆளுநர்களுக்கு அனுப்பப்படும். அதன் மீதான எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப் பட விருக்கும் நடவடிக்கைகளின் அறிக்கையுடன் மாநில அவை களில் சமர்ப்பிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்.
புகார்களை விசாரிக்கும் பொழுது உரிமையியல் நீதிமன்றங் களுக்கு உண்டான அதிகாரங்கள் ஆணையத்துக்கும் உண்டு. மத்திய அரசும், மாநில அரசுகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் சம்பந்தமான விஷயங்களில் ஆணையத்தைக் கலந்தாலோசிக்கும்.
பழங்குடியினருக்கும் பின்தங்கிய வகுப்பினருக்குமுண்டான ஆணையங்கள் (National Commission for Scheduled Tribes and National Commission for Backward Classes) இதே மாதிரி அதிகாரங்களுடன் செயல்படும்.
கேள்வி 3. ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் அட்டவணையில் சேர்ப்பது எவ்வாறு?
பதில் :-
ஒரு மாநிலத்தில் உள்ள பிரிவினரை அம்மாநில ஆளுநரைக் கலந்தாலோசித்து அட்டவணையில் சேர்ப்பதற்குக் குடியரசுத் தலைவர் பொது அறிவிப்பு செய்யலாம். அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் இதற்கென சட்டம் மூலமாக அட்டவணையில் சேர்க்கலாம்; சேர்த்த பின்பு இதில் மாறுதல் செய்ய முடியாது.
பகுதி – 17
Biana Guns (Official Language)
(பிரிவுகள் 343-351)
கேள்வி 1. மத்திய அரசின் நிர்வாக மொழி எது?
பதில் :-
மத்திய அரசின் நிர்வாக மொழி தேவநாகரி எழுத்தில் அமைந் துள்ள இந்தி. பன்னாடுகளில் வழங்கி வரும் இந்திய எண்கள் International form of Indian numerals) எண்களாக உபயோகிக்கப் படும்.
கேள்வி 2. ஆங்கிலத்தின் நிலை என்ன?
பதில் :-
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் வரை (25 ஜனவரி 1965 வரை) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருமுன் இருந்தது போல் ஆங்கிலமும் அலுவலக மொழியாக நீடிக்கும் என்றிருந்தது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு (1965) காரணமாகவும், இந்தி பேசாத மாநிலங்களின் கருத்தின் அடிப்படையிலும் 1965க்குப் பின்பும் ஆங்கிலமும் தொடர்ந்து கூடுதல் ஆட்சி மொழியாக உள்ளது.
கேள்வி 3. இந்தியாவின் தேசிய மொழி இந்தியா?
பதில் :-
இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் தனியாகத் தேசிய மொழியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் எட்டாவதி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பெரும் பாலானவை மாநிலங்களின் ஆட்சி மொழியாக உள்ளன.
கேள்வி 4. நாகாலந்தின் ஆட்சி மொழி எது?
பதில் :-
ஆங்கிலம்.
கேள்வி 5. எட்டாவது அட்டவணையில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட மொழிகள் எவை?
பதில் :- 2003ஆம் ஆண்டு 92ஆம் திருத்தப்படி போடோ, தோக்ரி, சந்தேலி, மைதிலி மொழிகள் சேர்க்கப்பட்டன.
கேள்வி 6. நிர்வாக மொழி ஆணையம் (Commission on Official Language) மற்றும் நிர்வாக மொழிக் குழுவின் (Committee on Official Language) செயல்பாடுகளை விவரி.
பதில் :-
a) நிர்வாக மொழி ஆணையம் பத்தாண்டுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது. ஆணையத்தின் தலைவரும், எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளின் பிரதிநிதிகளும் உறுப்பினர்கள் ஆவர். மத்திய அரசு அலுவலப் பணிகளுக்கு அதிகமாக இந்தியை உபயோகிப்பதைப் பற்றியும், ஆங்கிலத்தை குறைவாக உபயோகிக்க வேண்டியதைப் பற்றியும் ஆணையம் ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் உபயோகிக்கப்பட வேண்டிய மொழி பற்றியும் பரிந்துரை செய்யும். மாநிலங்களுக் கிடையிலோ அல்லது மத்திய அரசு மாநிலங்களிடையிலே உபயோகிகப்பட வேண்டிய மொழி பற்றியும் குடியரசுத் தலைவர் ஆணையத்திடம் விளக்கம் கேட்கலாம். குடியரசுத் தலைவ ருக்குப் பரிந்துரை செய்யும் முன் இந்தியாவின் தொழிற்துறை, பண்பாடு, அறிவியல் முன்னேற்றம், மத்திய அரசு வேலை களைப் பெறுதல் பற்றிய இந்தி பேசாதோர் தேவைகள் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளும்.
b) நிர்வாக மொழிக் குழு (Committee on Official Language) 20 மக்களவை உறுப்பினர்களையும் 10 மேலவை (Rajya Sabha) உறுப்பினர்களையும் கொண்டது. இக்குழு ஆணையத்தின் (Comimision) பரிந்துரையை மறு ஆய்வு செய்து குடியரசுத் இலைவருக்குத் தனது கருத்தைத் தெரிவிக்கும்.
கேள்வி 7. மாநில மொழிகளைப் (Regional Languages) பற்றி அசி லமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
பதில் :-
மாநில அவைகளே (State Assemblies) அம்மாநிலத்தில் எந்த மொழியை நிர்வாக மொழியாக ஆக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும்.
கேள்வி 8. மாநிலங்களுக்கிடையே எந்த மொழி நிர்வாக மொழியாக இயங்கும்?
பதில் :-
மாநிலங்களுக்கிடையே அல்லது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் தகவல் பரிமாற்ற மொழிகள் இந்தி அல்லது ஆங்கிலம். அதே நேரத்தில் இரு மாநிலங்கள் தங்களுக்கு இடையே எந்த மொழியில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
கேள்வி 9. ஒரு மாநிலத்தில் ஒரு மொழிக்கு மேல் நிர்வாக மொழிகள் இருக்கலாமா?
பதில் :-
இருக்கலாம். குடியரசுத் தலைவருக்கு, கணிசமான மக்கள் தொகை அம்மாநில நிர்வாக மொழியல்லாத ஒரு மொழியைப் பேசுகிறார்கள் ஆதலால் அந்த மொழியையும் மற்றொரு நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்தால், குடியரசுத் தலைவர் அம்மொழியையும் நிர்வாக மொழியாக்க வேண்டும். என அந்த மாநிலத்துக்கு ஆணையிடலாம் (பிரிவு 347).
கேள்வி 10. நீதித்துறை நடவடிக்கைகள், சட்டம், மசோதாக்கள் எந்த மொழியில் இருக்க வேண்டும்?
பதில் :-
தலைமை நீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் எல்லா நடைமுறைகளும் (Proceedings) ஆங்கில மொழியில் இருக்கும் சட்டம் மசோதாக்களின் அதிகார பூர்வ வடிவங்கள் (Authoritative Text) ஆங்கிலத்தில் இருக்கும் சட்டத்தின் வழியாக வெளிக் கொண்ரப் படும் ஆணைகள் (Order), விதிகள் (Rules), ஒழுங்குமுறைகள் (Regulation), உட்சட்டங்கள் (Bye-laws) முதலியவைகளின்,- அதிகார பூர்வ வடிவங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். இதில் பாராளுமன்றம் சட்டம் மூலமாக மாறுதல் செய்து கொள்ளலம். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஆளுநர் இந்தியையோ அல்லது வேறு மொழியையோ நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம் என அனுமதிக்கலாம். இருந்த போதிலும் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது உத்தரவு ஆங்கிலத்திலேயே இருக்கும்.
சட்டம், மசோதா போன்றவைகளுக்கு ஒரு மாநிலத்தில் ஆங்கிலத்தில் அல்லாத மொழியை உபயோகப்படுத்த வேண்டு மென விரும்பினால், ஆங்கில மொழி பெயர்ப்பை ஆளுநர் முத்திரையுடன் அரசு நாளிதழில் (Gazette) வெளியிட வேண்டும். அதுவே அதிகார பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
கேள்வி 11. மொழிகளைப் பயன்படுத்துவது பற்றி சிறப்பு ஆணைகள்(Special directives) யாவை?
பதில் :-
a) பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான முறையீடு களை ஒன்றியம் அல்லது மாநிலத்தின் நிர்வாகத்தில் பயன்படும் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அனுப்பலாம்.
b) மொழிவாரி சிறுபான்மையினர் குழந்தைகள் தொடக்கக் கல்வியை தங்களது தாய்மொழியில் கல்வி கற்றிட மாநில அரசுகள் தேவைப்பட்ட வசதிகளைச் செய்து கொடுத்திடல் வேண்டும். குடியரசுத் தலைவரும் இது பற்றித் தேவையான ஆணைகள் பிறப்பிக்கலாம்.
c) மொழிவாரிச் சிறுபான்மையருக்கான சிறப்பு அலுவலர் (Special officer for Linguistic Minority) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் மொழி வாரிச் சிறுபான்மையருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் ஒழுங்காக செயல்முறைப்படுத்தப்பட்டு வருகின்றனவா என ஆய்ந்து அறிக்கை தருவார். அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப் படும்.
கிணைந்த பண்பாட்டின் (Composite Culture) வெளிப்பாடாக ) இந்தியைப் பரப்புவதற்காகவும் அதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டின் வெளிப்பாடாக ஆக்குவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி மொழி சமஸ்கிருதத்திலிருந்தும் எட்டாவது அட்டவணை யில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற மொழிகளிலிருந்தும் சொன் மொழி வளங்களை எடுத்துத் தனதாக்கிக் கொண்டு வரை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி 12.இந்தியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதைப் பற்றி விளக்கம் அளிக்கும் சட்டங்கள் எவை?
பதில் :- நிர்வாக மொழிகள் சட்டம், 1963 Official Languages Az 1963) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் (மத்திய அரசுச் சட்டங்கள்) சட்டம், 1973 (The Authorised Translution- (Central Laws) Act 1973)
கேள்வி 13. அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வமான இந்தி மொழி பெயர்ப்பை வெளியிட யாருக்கு அதிகாரம் உண்டு
பதில் :- 58ஆம் திருத்தப்படி (1987) குடியரசுத் தலைவருக்கு உண்சி (பிரிவு 394A).
கேள்வி 14.நிர்வாக மொழியான இந்தியுடன் ஆங்கிலத்தையும் ஏத்தி காலம் வரை நிர்வாக மொழியாக உபயோகப்படுத்தலாம்?
பதில் :-கால வரையறையின்றி.