பகுதி – 14
உட்பிரிவு -1
மத்திய அரசு, மாநில அரசுப் பணிகள் (Services under the Union and the States)
(பிரிவுகள் 308-314)
கேள்வி 1. மத்திய அரசு, மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வு. அவர்தம் பணி விதிகள் எவ்வாறு வரன் முறைப்படுத்தப்பட்டுள்ளன?
பதில் :-
பாராளுமன்றமோ அல்லது மாநில அவைகளோ மேற் கூறப்பட்டவைகளுக்காக சட்டம் இயற்றலாம். சட்டம் இயற்றும் வரை மத்திய அரசைப் பொறுத்தவரையில் குடியரசுத் தலைவரோ அவர் ஆணையின் கீழ் அரசு நிர்வாகமோ இதற்காக ஒழுங்கு முறை விதிகள் (Rule) இயற்றலாம். மாநிலத்தில் ஆளுநரோ அவர் ஆணையின் கீழ் அரசு நிர்வாகமோ ஒழுங்கு முறை விதிகள் இயற்றலாம். தற்பொழுது மத்திய அரசில் பெரும்பாலான பணிகளுக்குச் சட்டத்திற்குப் பதிலாக பணியாளர் தெரிவு மற்றும் ஒழுங்குமுறை விதிகளே (Recruitmem Rules under Subordinate Legislation) உள்ளன. (பிரிவு 309)
கேள்வி 2. மத்திய அரசு, மாநில அரசுப் பணியாளர்கள் பதவியில் எவ்வளவு நாள் நீடிக்க முடியும்?
பதில் :-
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் விருப்பம் நீடிக்கும் வரையில் தான் (During the pleasure of the President or Govermor) பணியாளர்கள் பதவியில் நீடிக்க முடியும்.
கேள்வி 3. ஆட்சித் துறையில் உள்ள மத்திய மாநில (Holders of Civil Post) அரசுப் பணியாளர்களுக்கு உள்ள பாதுகாப்பு என்ன?
பதில் :-
பிரிவு 311 இது பற்றிய விளக்கம் அளிக்கிறது.
எந்த நிலை அதிகாரிகள் பணியாளரை வேலைக்கு அமர்த்தும் பொறுப்பில் இருக்கிறார்களோ (Appointing Authority) அதற்குக் கீழ் நிலையில் உள்ள பொறுப்பாளர்களால் (Subordinate Authority) அரசுப் பணியாளர்களைப் பணி நீக்கம் அல்லது பதவிக் குறைப்பு செய்ய முடியாது.
அரசுப் பணியிலிருந்து விடுவிக்கவோ (Removal), பணிநீக்கம் (Dismissal) செய்யவோ, வசிக்கும் பதவியிலிருந்து கீழ் நிலைப்ட பகுதிக்குத் தள்ளவோ (Reduction in Rank) முடிவு செய்யுமுன் பணியாளர்களுக்குத் தகுந்த அவகாசம் கொடுத்து (Reasonable opportunity) குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தி, அவர் தரப்பு விளக்கங்களைக் கேட்ட பின்பு தான் அவருக்குத் தண்டனை அளிக்கலாம்.
நாட்டின் பாதுகாப்பு நலனை முன்ளிட்டோ, குற்றவியல் சம்பந்தமான குற்றச்சாட்டில் ஒருவர் நீதிமன்றத்தினால் தண்டனை அடைந்து அதே காரணத்தினால் அவருக்கு அரசாங்கமும் தண்டனை அளிக்க விரும்பினாலோ, விசாரணை நடத்த இயலாது எனக் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, பணியாளரை அமர்த்தும் பொறுப்பில் உள்ளவர்களோ (Appointing Authority) முடிவுக்கு வந்த பொழுதும் முன் பத்தியில் கூறப்பட்டவாறு விசாரணை நடத்தாமல் தண்டனை அளிக்கலாம்.
கேள்வி 4. அனைத்திந்தியப் பணி (All India Service) உருவாக்கும் முறை யாது?
பதில் :-
பாராளுமன்ற மேல்வையில் ஒரு தீர்மானம் (Resolution) கொண்டு வரப்பட்டு, அது அவையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர் களால் பின்பே பாராளுமன்றம் ஒப்புதல் செய்யப்பட்ட அனைத்திந்தியப் பணியை உருவாக்கச் சட்டம் இயற்ற இயலும்
கேள்வி 5. தற்பொழுது உள்ள அனைத்திந்தியப் பணிகள் (All India Services) யாவை?
பதில் :-
இந்திய ஆட்சித் துறைப் பணி (I.A.S.), இந்திய காவல் துறைப் பணி (IPS), இந்திய வளத்துறைப் பணி (Indian Forest Service) ஆகிய மூன்றும் ஆகும்.
கேள்வி 5. இந்திய வெளித்துறைப் பணி (Indian Foreign Service)யின்நிலை உன்ன?
பதில் :-
அது ஒரு மத்திய அரசுப் பணி (Central Service) ஆகும்.
உட்பிரிவு – 2
பணியாளர் தேர்வாணையங்கள் (Public Service Commissions)
(பிரிவுகள் 315-323)
கேள்வி 1. அரசுத் தேர்வாணையங்களின் வகைகள் யாவை?
பதில் :-
மத்திய அரசில் ஒன்றிய பொதுப் பணித் தேர்வாணையம் Union Public Service Commission) செயல்பட்டு வருகிறது. மாநிலங் களில் மாநில பொதுப் பணித் தேர்வாணையம் (State Public Service Commission) செயல்பட்டு வருகின்றன. மாநிலங்கள் விரும்பினால் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக ஒரே மாநிலப் பொதுப்பணித் தேர்வாணையம் செயல் படலாம். இதைத் தவிர மத்திய அரசில் இடை மற்றும் கீழ்நிலை ஊழியர் ஈளைத் தேர்ந்தெடுக்க, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) செயல்பட்டு வருகிறது.
கேள்வி 2. தேர்வாணையங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?
பதில் :-
நியமிக்கப்பட வேண்டிய தகுதிகள் யாவை? பதவிக் காலம் எவ்வளவு? மத்திய அரசில் குடியரசுத் தலைவரினாலும் மாநிலங்களில் இளுநராலும் நியமிக்கப்படுகிறார்கள். பதவிக்கு காலம் ஆறுஆண்டுகள். ஒன்றியத் தேர்வாணையத்தில் ஒரு தடவை நன்றவ ராகச் செயல்பட்டவர் மத்திய மாநில அரசுகளில் மறுப வேலை செய்ய முடியாது. உறுப்பினர்களாக உள்ளவர்கள் ம ஒரு முறை தலைவராகச் செயல்படலாம். மாநிலத் தேர்வாணை களின் உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் ஒன்றியத் தேர்வாணை! யத்தில் தலைவராகவோ உறுப்பினராகவோ பணியாற்றலம் மாநிலத் தேர்வாணைய உறுப்பினர்கள் மறுபடி ஒரு முறை எந்த மாநிலத்திலும் தேர்வு ஆணையத் தலைவராக இருக்கலாம்.
தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் பாதிப் பேர் மத்திய அல்லது. மாநில அரசுகளில் குறைந்தது பத்து ஆண்டுகள் சேனம் செய்தவராக இருக்க வேண்டும். ஒன்றியத் தேர்வாணையத்தில் தலைவரும், உறுப்பினர்களும் 65 வயது வரை பதவி வகிக்கலாம். மாநிலத் தேர்வாணையங்களில் 62 வயது வரை பதவி வகிக்கலாம்.
கேள்வி 3. தேர்வாணையத் தலைவர் உறுப்பினர்களைப் பதவி நீக்கம் (Removal) செய்வது எவ்வாறு?
பதில் :-
தவறான நடத்தை காரணமாக குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்படலாம். பதவி நீக்கம் செய்யப்படுமுன் குடியரசுத் தலைவர் தலைமை நீதிமன்றத்தின் பரிந்துரையை நாடுவார். தலைமை நீதிமன்றமும் இது பற்றிய விசாரணை செய்து தனது பரிந்துரையை அனுப்பும். பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வார். தலைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்பிய பின்பு, தேர்வாணையத் தலைவரையோ உறுப்பினரையோ தற்காலிகமாக பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
ஆளுநரைப் பொறுத்தவரையில் மாநிலத் தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினர்களை இம்முறையில் தற்காலிக் பதவி நீக்கம் செய்யலாம்.
ஆனால் தலைவர்களோ உறுப்பினர்களோ நொடிப்பு நிலையர் (Insolvent) ஆக நீதிமன்றங்களினால் அறிவிக்க பட்டாலோ, வேலை செய்ய இயலாதவாறு உடல், மனநிலை குன்றியிருந்தாலோ, அல்லது தான் வசிக்கும் பதவியைத் தவிர வருவாய் பெறக் கூடிய வேறு ஏதாவது தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலோ விசாரணையின்றி பதவி நீக்கம் செய்யப்படலாம்.
கேள்வி 4. தேர்வாணையங்களின் பணிகள் யாவை?
பதில் :-
a) மத்திய, மாநில அரசு பணிகளுக்குத் தேர்வுகள் மூலமாக தகுந்த ஆட்களைத் தெரிவு செய்தல் மற்றும் அரசு சார்ந்த அமைப்புக்களுக்கும் ஆட்களைத் தெரிவு செய்ய வழி வகுக்கலாம்.
b) மாநிலங்கள் கேட்பதற்கிணங்க ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக சிறப்புத் தகுதிகள் தேவையான பதவிகளுக்கு ஒருங்கினைந்த தேர்வு (Joint Examination) நடத்துதல்.
c) மத்திய, மாநில அரசுப் பதவிகளைப் பொறுத்தவரையில் சீவில் துறை, சிவில் பதவிகளுக்குத் தெரிந்தெடுக்கும் முறை, (Methods of Recruitment). அரசுப் பதவிகளில் வேலை உயர்வு. ஒரு பணித் துறையிலிருந்து இன்னொரு பணித் துறைக்கு மாற்றல், ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்கள் (Disciplinary Matters) முதலியவற்றிற்குத் தேர்வாணையங்களைக் கலந்தே அரசு நடவடிக்கை எடுக்கும். இதைத் தவிர மத்திய, மாநில அரசுகள் அரசுப் பணிகளைச் சார்ந்த பல்வேறு விஷயங்களில் தேர்வாணையங்களின் கருத்துக்களைக் கேட்கும்.
d) தேர்வாணையங்கள் ஆண்டுக்கு ஒரு முறைத் தங்களது செயல்களைப் பற்றி குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் அல்லது மாநில அவைகளில் தாக்கல் செய்யப்படும். தேர்வாணையங்களின் எந்தப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளவில்லையோ அதைப் பற்றி பற்றி விளக்கங்களும் அறிக்கையில் இடம் பெறும்.
கேள்வி 5. தேர்வாணையத்தின் எல்லாச் செலவினங்களும் எந்த நிதியிலிருந்து கொடுக்கப்படுகின்றன?
பதில் :- இதுக்கப்பட்ட நிதியிலிருந்து (Charged Expenditure).
பகுதி – 14அ தீர்ப்பாயங்கள் (Tribunals)
(பிரிவு 323 அ ஆ)
கேள்வி 1.நிர்வாகத் தீர்ப்பாயங்கள் (Administrative Tribimals) எவ்வாது அமைக்கப்படுகின்றன?
பதில் :-
மத்திய அரசு, மாநில அரசு அதைச் சார்ந்த பொது நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவைகளில் வேலை பார்க்கும். ஊழியர்களின் தேர்வு, பணி நிமித்தம் எழும் தகராறுகளை (Recnine and conditions of Service)த் தீர்ப்பதற்காகப் பாராளுமன்றம் சட்டம் மூலமாக நிர்வாகத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தலாம்.
ஒரு மாநிலத்துக்காகவோ அல்லது ஓரிரு மாநிலங்களுக்குக் கூட்டாகவோ நிர்வாகத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்படலாம். உச் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களுக்கு மேற் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி வழக்குகள் முறையீடுகள் நடத்த அதிகார வரம்பு இல்லையென சட்டம் இயற்றலாம்.
கேள்வி 2. தீர்ப்பாயங்கள் மற்ற எந்தெந்தத் துறைகளுக்கு ஏற்படுத்தலாம்?
பதில் :-
(பிரிவு 323B) தகுந்த அவைகள் (Appropriate legislature) கீழ்க்கண்ட துறைகளுக்காகத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தலாம்.
a) வரிகளின் விதிப்பு, தீர்மானிப்பு, வசூலிப்பது, ஒழுங்கு முறைபடுத்துவது; b) அந்நியச் செலாவணி (Foreign Exchange), சுங்கம் (Custom) வழியாக நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதிகள் c) தொழில், தொழிலாளர்கள் சார்ந்த பிரச்னைகள்; d) நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் (Acquisitions by the State); e) நகர்ப்புற சொத்து வரம்புகள்; f) பாராளுமன்ற- மாநில அவைகள் தேர்தல்; g) உணவுப் பொருட்கள் (Food stuffs) உற்பத்தி மற்றும் விநியோகம்: h) சொத்து உரிமை தாரர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள் பற்றியன
பகுதி – 15
தேர்தல்
(பிரிவுகள் 324-329)
தேர்தல்ஆணையர் மற்றும் குடியரசுத் தலைவரினால்.தேர்தல்
கேள்வி 1. தலைமைத் ஆணையர்கள் யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?
பதில் :-
குடியரசுத் தலைவர்
கேள்வி 2. தேர்தல் ஆணையத்தின் பணிகள் என்ன?
பதில் :-
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பாராளு மன்ற, மாநில இரு அவை உறுப்பினர்கள் ஆகியோரைத் தெரிவு செய்ய தேர்தல்கள் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தைச் சார்ந்ததாகும். இதற்காகப் பகுதி வாரியாக (Regionwise) ஆணையர்களை நியமித்து தேவையான வழிமுறை களை அளித்து, நெறிப்படுத்தி தேவையான கண்காணிப்புடன் தேர்தலை நடத்தும். தேர்தலுக்கு வேண்டிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி வரையறையை (Delimitation of Constituencies) மாற்றி அமைத்தல், பாராளுமன்ற மாநில இரு அவை உறுப்பினர்கள் தகுதியின்மை (Disqualification) பற்றிக் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் கருத்துத் தெரிவித்தல், அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அங்கீகாரம் அளித்தல், தேர்தல் செலவுகள் வரையறை நிர்ணயித்தல், சட்டத்திற்குப் புறம்பான செயல்களினால் தேர்தலை ஒத்திப் போடுதல் போன்றன தேர்தல் ஆணையத்தின் பணிகளாகும்.
3. நேர்தல் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்வது எவ்வாறு?
பதில் :- தலைமை நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் (Impeachment) செய்யும் முறையையே தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற தேர்த ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்யக் குடியரசுத் தலைவ ருக்கு தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரை வேண்டும்.
4. எந்தத் திருத்தத்தின் மூலமாக வாக்குரிமை வயது 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது?
பதில் :- 61ஆம் திருத்தத்தின்படி (1989).
கேள்வி 5. தேர்தல்களைப் பற்றிய சிறப்பம்சங்கள் யாவை?
பதில் :-
* மதம், இனம், ஜாதி, பாலின அடிப்படையில் ஒருவரை வாக்காளர் தகுதியிலிருந்து நீக்க முடியாது.
* 18 வயது நிறைந்த இந்தியக் குடிமகன் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. சட்டத்தினால் வாக்குரிமை தடை செய்யப்பட்டவர்களாக இருக்கக் கூடாது.
* வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி வரையறை மாற்றியமைத்தல் மற்றும் தேர்தல்கள் நடத்துதல் பற்றி மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம்; நீதிமன்றங்கள் இதில் தலையிடாது.
* தேர்தல் ஆணையர்களை நியமித்த பின்பு அவர்களுடைய ஊதியம் மற்றும் வசதிகளை அவர்களுக்குப் பாதகமாக மாற்ற முடியாது.
கேள்வி 6. இந்தியாவின் முதல் தேர்தல் கமிஷனர் யார்?
பதில் :- சுகுமார் சென்.
கேள்வி 7. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி வரையறையை மாற்றி அமைக்க (delimitation of constitution) யார் பரிந்துரை செய்ய வேண்டும்?
பதில் :- வரையறை மாற்று ஆணையம் (delimitation commission)