உட்பிரிவு – 3
குடியரசுத் தலைவருக்கு அவசர ஆணைகள் (Ordinances) பிறப்பிக்கும் அதிகாரங்கள்
(Sifley-123)
1. குடியரசுத் தலைவர் எப்பொழுது அவசா ஆணைகள் பிறப்பிக் கலாம்? அதன் தொடர்பான மற்ற செயல்கள் யாவை?
பதில் :- பாராளுமன்றக் கூட்டத் தொடர் இல்லாத காலங்களில், அவசியத் தேவை உள்ளது எனக் குடியரசுத் தலைவர் கருதினால் சட்டத்திற்கு இணையான அவசர ஆணைகள், பாராளுமன்றம் சட்டம் இயற்ற வல்ல விஷயங்கள் மீது, பிறப்பிக்கலாம். ஆனால் இவைகளை அடுத்து பாராளுமன்றம் கூடிய உடன் அவைகளில் சமர்ப்பிக்க வேண்டும். இரு அவைகள் ஒப்புதல் அளிக்கத் தவறினாலோ அல்லது ஆறு வாரங்களுக்குள் அவசர ஆணைகள் வேண்டாம் எனப் பாராளுமன்றம் தீர்மானித்தாலும், அவசர ஆணைகள் நடைமுறையில் இருக்காது. குடியரசுத் தலைவர் விரும்பினால் எப்பொழுது வேண்டுமென்றாலும் அவசர ஆணை களை செயல்படுத்தப்படுவதிலிருந்து நீக்கம் செய்யலாம்.
உட்பிரிவு – 4
உச்ச நீதிமன்றம் (Supreme Court)
(பிரிவுகள் 124-147)
கேள்வி 1. உச்ச நீதிமன்றம் எங்குள்ளது?
பதில் :- அதற்குக் கிளைகள் உண்டா? இந்திய நீதித் துறையின் தலைமைப் பீடமாக விளங்கும் உச்ச நீதிமன்றம் தில்லியில் உள்ளது. தலைமை நீதிபதி (Chief Justice of India) குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் அவ்வப்போது மற்ற இடங்களிலும் கூட ஏற்பாடு செய்யலாம்.
கேள்வி 2. உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
பதில் :- தலைமை நீதிபதியும் மற்றைய 30 நீதிபதிகளும் உள்ளனர்.
கேள்வி 3. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?
பதில் :-தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தலைமை நீதிபதி மற்றும் ஒரு சில மூத்த நீதிபதிகளையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு (Collegium) அளிக்கும் பரிந்துரையின் படி, குடியரசுத் தலைவர் மற்ற நீதிபதிகளை நியமிக்கிறார். சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களையும் கலந்தாலோசிக்கலாம்.
தலைமை நீதிபதி பதவி காலியாக இருக்கும் பொழுது, குடியரசுத் தலைவர் தற்காலிகமாக ஒரு நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கலாம். குறுகிய காலத்துக்குத் தற்காலிகமாக நீதிபதிகள் நியமிக்கப்படலாம். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்ற அழைக்கலாம்.
கேள்வி 4. உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவருக்கு வேண்டிய தகுதிகள் யாவை?
பதில் :-இந்தியக் குடியாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக இருந்திடல் வேண்டும் அல்லது தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் வழக்கறிஞராக இருந்திடல் வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் கருத்தில் ஒரு திறன்மிக்க வழக்கியல் அறிஞராக (A Distinguished Jurist) இருந்திடல் வேண்டும்.
கேள்வி 5. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உறுதிமொழி (Oath அளிப்பவர் யார்?
பதில் :- குடியரசுத் தலைவர்.
கேள்வி 6. தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் மாத ஊதியம் எவ்வளவு?
பதில் :-தலைமை நீதிபதிக்கு ரூபாய் ஒரு இலட்சம். மற்றநீதிபதிகளுக்கு ரூ.90,000/-
கேள்வி 7. உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக வரவேண்டிய (Original Jurisdiction) வழக்குகள் யாவை?
பதில் :- மத்திய அரசுக்கும், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையே உள்ள வழக்குகள், மத்திய அரசும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒரு பக்கமும், ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மறுபக்கமும் உள்ள வழக்குகள், மாநிலங்களுக்கிடையே உள்ள வழக்குகள் இவைகள் நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்குத் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒரு சில வழக்குகள் மேற்கூறிய வரம்புக்கு உட்படாது. குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டம் ஆரம்பிக்கும் முன்னாலேயே ஏற்பட்ட ஒப்பந்தம், சன்னத் அடிப்படையில் உண்டான வழக்குகள், நதிநீர்த் தகராறுகள் (பிரிவு 262), நிதி ஆணையத் துக்கு உட்பட்ட விஷயங்கள் (பிரிவு 280), மைய, மாநில அரசுகளுக்கிடையே பங்கீட்டுக் கொள்ளும் ஓய்வூதியம் போன்றன (290).
கேள்வி 8.உரிமையியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு அதிகாரங்கள் யாவை?
பதில் :-உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது தானாகவோ அல்லது வழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலோ அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தகுதியானது (A Fit Case For Appeal) என்று சான்றிதழ் தர வேண்டும். அந்த வழக்கில் இன்னும் சட்டம் தீராய்ந்து தீர்ப்பளிக்க (The Case Involving a substantial Question of Law) வேண்டுமென எண்ணினாலும், உயர் நீதிமன்றம் ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் ஆய்வது உகந்தது எனக் கருதினாலும் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகளைப் பரிந்துரை செய்யலாம்.
கேள்வி 9. குற்றவியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மேல் முறை மீட்டு அதிகாரங்கள் (Appellate Jurisdiction) பற்றிக் கூறுக.
பதில் :-கீழ் நீதிமன்றத்தில் (Sessions Court) விடுதலை செய்யப் பட்டவருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கும் போதும், உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்துக்குத் தடை விதித்துத் தானே விசாரித்து மரண தண்டனை அளித்த போதும் வழக்கு மேல்முறையீட்டுக்குத் தகுந்தது என்று உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தபோதும் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரலாம்.
கேள்வி 10. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி (Special Petition) பெறுவது ஏன்?
பதில் :- மேல்முறையீட்டுக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் கூறியிருந்தாலும் எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரிக்காது. வழக்கு விசாரிக்கப்பட வேண்டி, கட்சிக்காரர்கள் சிறப்பு அனுமதி கோரி (Special leave petition) விண்ணப்பிக்கலாம். அதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவோ மறுக்கவோ செய்யலாம். அனுமதித்தால்தான் வழக்கு மேலே தொடரும். இராணுவப் படையினர் தொடர்புடைய சட்டங்கள் சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் தீர்ப்பாயங்களிலிருந்து (Court Martial) வரும் பொழுது இந்த விதி பொருந்துவதில்லை.
கேள்வி 11. உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பையே மறு ஆய்வு (Review) செய்ய முடியுமா?
பதில் :-ஆம் (பிரிவு 137)
கேள்வி 12. குறை நீக்கும் விண்ணப்பம் (Curative Petition) என்றால் என்ன?
பதில் :- தனது தீர்ப்புகளையோ உத்தரவுகளையோ மறு ஆய்வு செய்ய உச்சநீதி மன்றத்திற்கு உரிமை உண்டு.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளில் வெளிப்படையாகக் குறை இருப்பதாக வழக்கின் ஒரு கட்சியாளர் நினைத்தால் அந்தக் குறையை நீக்குவதற்காக குறை நீக்கும் விண்ணப்பம் மூலமாக வழக்குத் தொடரலாம்.
கேள்வி 13. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பு (Advisory Jurisdiction) பற்றிக் கூறுக.
பதில் :-ஒரு முக்கியமான பொது விஷயத்தைப் பற்றி சட்ட ரீதியாக சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு எழுமானால் அந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பது நல்லது என்று நினைத் தால், அவர் பிரிவு 143இன்படி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கோரலாம்.
அதே போல் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையில் மத்திய அரசுக்கும் அல்லது மாநிலங்களுக்குமிடையே கருத்து வேறுபட் டால் குடியரசுத் தலைவர் அந்த விஷயத்தைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கோரலாம்.
கேள்வி 14. நீதி மறுஆய்வு (Judicial Review) என்றால் என்ன?
பதில் :- மத்திய, மாநில மன்றங்களினால் இயற்றப்பட்ட சட்டங் களோ அல்லது அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளோ அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதாகக் கருதப் பட்டால் தகுந்த நீதிமன்றங்கள் அவைகளை வழக்குகளின் மூலமாக மறு ஆய்வு (Review) செய்யும். முரணாக இருக்கும் பட்சத்தில் சட்டங்களையோ ஆணைகளையோ நடைமுறையில் செயல்படுத்துவதை நிறுத்தும்.
கேள்வி 15. நீதி மன்றங்களின் தனித்தன்மை (Independence of Judiciary) எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
பதில் :-நீதிபதிகளின் ஊதியம், ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund) B (Charged Expendititure)una, அளிக்கப்படுகிறது. நீதிபதிகளின் பதவி நீக்கத் (Impeachment) தீர்மான காலங்களில் அவைகளில் கருத்துரையாடல் (Discussion) நடக்கும். கருத்துரையாடல் நடக்கும் சமயம் தவிர, மற்ற நேரங் களில் அவைகளில் உறுப்பினர்கள் நீதிபதிகளின் நடத்தை, செயல் முறைகளைப் பற்றி குறை கூறக் கூடாது. நீதிபதிகள் பதவியில் நியமிக்கப்பட்ட பின்பு அவர்களது சம்பளம் ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை அவர்களுக்குப் பாதகமாக மாற்ற முடியாது.
கேள்வி 16. நீதிபதிகளைப் பதவி நீக்கம் (Removal) செய்ய முடியுமா?
பதில் :- நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை (Proved misbehaviour) அல்லது திறமையின்மை காரணமாக ஒரு நீதிபதியைப் பதவியி லிருந்து விலக்கலாம். இதற்காகக் கொண்டு வரப்படும் தீர்மானம் பாராளுமன்ற இரு அவைகளிலும், அவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினராலும் கருத்துரையாடலில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அதன்பின் குடியரசுத் தலைவர் இதற்கான ஆணை (Order) பிறப்பிப்பார்.
குற்றச்சாட்டு எம்முறையில் அவைகளில் கொண்டு வரப்பட வேண்டும் மற்றும் குற்றச்சாட்டின் மீதான விசாரணை எம்முறை யில் நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்றம் சட்டம் மூலமாக வரையறை செய்யலாம்.
கேள்வி 17. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வழக்குரைஞராகப் பணியாற்றலாமா?
பதில் :- இந்தியாவிற்குள் நீதிமன்றங்களிலோ அல்லது இதைப் போன்ற நிறுவனங்களிலோ (Authority) வழக்குரைஞராகப் பணியாற்ற முடியாது.
கேள்வி 18, உச்ச நீதிமன்றத்தின் மற்ற சிறப்பம்சங்கள் யாவை?
பதில் :- உச்ச நீதிமன்றம் ஓர் ஆவணங்களின் இருப்பிடமாகும் (Court of record). காலங்காலமாக இந்திய நீதிமன்றங்கள் தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முன்னுதாரணமாக (Precedent) மேற்கோள் காட்டிட இது வழி வகுக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், ஆணைகள் இந்தியாவின் எல்லா நீதிமன்றங்களையும் மற்றும் எல்லா நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும். நிர்வாகத் துறையின் எல்லாப் பிரிவுகளும் நீதித் துறையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆணைகளை நடைமுறைப்படுத்த தேவைப்பட்ட உதவிகளைச் செய்யும். உச்ச நீதிமன்றத்தைப் பற்றித் தவறான கருத்துகளை தெரிவிப்பவர்களைத் தண்டிக்க நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது.
பாராளுமன்றம் சட்டம் மூலமாக ஒன்றியப் பட்டியலில் உள்ள விஷயங்களைப் பற்றி கூடுதல் அதிகாரங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கலாம். மாநிலங்கள் விரும்பினால், இது போல் கூடுதல் அதிகாரங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கலாம்.
ஒரே மாதிரியான சட்டத் தீர்வை எதிர் நோக்கி பல்வேறு வழக்குகள் பல்வேறு உயர்நீதி மன்றங்களில் நடந்து கொண்டிருந் தால் உச்ச நீதிமன்றம் அவைகளை உயர்நீதி மன்றங்களிலிருந்து தன்னிடம் மாற்றி, ஒருங்கிணைந்த வழக்காக நடத்தி தீர்வு காணலாம்.
கேள்வி 19. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு ஆனை (Writ) பற்றிக் குறிப்பிடுக
பதில் :- இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளின் பாது காப்பின் தலைமை இடம் என உச்ச நீதிமன்றத்தைக் குறிப்பிடலாம். ஆள் கொணர்விக்கும் ஆணை (Habeas Corpus), செயலுறுத்தும் ஆணை (Mandamas), தகுதி முறை விளவும் ஆணை (Quo Warranto), தடை விதிக்கும் ஆணை (Prohibition) மற்றும் நெறி முறை உறுத்தும் (Certiorari) போன்ற சிறப்பு ஆணைகள் மூலம் சம்பத்தப்பட்ட நிர்வாகங்களுக்கு ஆணை இடும்.
கேள்வி 20. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தைப் பற்றிய அம்சங்கள் யாவை?
பதில் :- குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் நடைமுறைகளையும் ஒழுங்குபடுத்து வதற்காக விதிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செலவுகள், அந்த நீதிமன்ற அலுவலர்கள் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உட்பட எல்லாச் செலவுகள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட நிதியாக (Charged expenditure) அளிக்கப்படும்.
கேள்வி 21.சுதந்திர இந்தியாவில் உச்ச நீதிமன்ற முதல் தலைமை நீதிபதி யார்?
பதில் :- நீதிபதி K.L. கானியா.
கேள்வி 22. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
பதில் :-நீதிபதி M. பாத்திமா பீவி.
உட்பிரிவு – 5
தலைமைக் கணக்காயர் (Comptroller and Auditor General of India)
(பிரிவுகள் 148-151)
கேள்வி 1. தலைமைக் கணக்காயர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
பதில் :-அவரைப் பதவி நீக்கம் செய்வது எவ்வாறு? குடியரசுத் தலைவரினால். பணியில் அமர்ந்த பின்பு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் பொழுது கடைப் பிடிக்க வேண்டிய அதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
கேள்வி 2. தலைமைக் கணக்காயரின் யாவை?
பதில் :- கடமைகளும் அதிகாரங்களும்
மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் பாராளுமன்றச் சட்டத்தி னால் குறிப்பிடப்படும் அமைப்புகள் முதலியனவற்றின் வரவு. செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்வார். ஆண்டு தோறும் மைய அரசின் செலவுகளைத் தணிக்கை செய்வதைப் பற்றிய அறிக்கையை குடியரசுத் தலைவருக்கும், மாநிலங்களைப் பற்றிய அறிக்கையை ஆளுநருக்கும் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கைகள் பாராளுமன்றத்திலோ மாநில அவைகளிலோ சமர்ப்பிக்கப்படும்.
கேள்வி 3. தலைமைக் கணக்காயர் அமைப்பின் மற்ற அம்சங்கள் யாவை?
பதில் :- உச்சநீதி மன்ற நீதிபதிக்கு இணையான மாத ஊதியம் தலைமைக் கணக்காயர் பெறுவார். பணியில் அமர்ந்த பின் தலைமைக் கணக்காயரின் ஊதியம் மற்றும் பணி விதிகள், ஓய்வூதியம், ஓய்வு பெறும் வயது மூதலியன அவருக்குப் பாதக மாக மாற்றியமைக்கப்பட மாட்டாது. தலைமைக் கணக்காயர் பதவியிலிருந்து விலகிய பின்பு மத்திய, மாநில அரசின் மற்றப் பதவிகள் வகிக்க முடியாது. தலைமைக் கணக்காயர் அமைப்பில் அலுவல் புரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் இன்னோரன்ளவை ஒதுக்கப் பட்ட நிதியிலிருந்து செலவழிக்கப்படும்.
மத்திய மாநில அரசுகளின் வரவு, செலவுக் கணக்குகள் எந்த மாதிரி வடிவத்தில் காக்கப்பட வேண்டும் என்பதைத் தலைமைக் கணக்காயரின் பரிந்துரையைக் கணக்கில் கொண்டு குடியரசுத் தலைவர் முடிவு செய்வார்.