CONSTITUTION PART IV &IV-A

Table of Contents

 INDIAN CONSTITUTION PART IV &IV-A

PART- IV

வழி நடத்தும் கொள்கைகள் (Directive Principles of State Policy)

(பிரிவுகள் 36-51)

கேள்வி 1). வழி நடத்தும் கொள்கைகள் என்றால் என்ன?

பதில்:-

மத்திய, மாநில அரசுகள் ஆட்சி நடத்தும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய கொள்கைகள் வழி நடத்தும் கொள்கைகளாகும். இவை பற்றிய விளக்கங்கள் பிரிவுகள் 36-51இல் காணலாம்.

கேள்வி 2). அடிப்படை உரிமைகளுக்கும் வழி நடத்தும் கொள்கை களுக்கும் உள்ள வேற்றுமைகள் யாவை?

பதில்:-

அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது அதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்லலாம். வழி நடத்தும் கொள்கை களைப் பின்பற்றவில்லை என்று அரசுகளுக்கு எதிராக நீதி மன்றம் செல்ல முடியாது.

அடிப்படை உரிமைகள் அரசியல் சம்பந்தமானவைகள்; வழி நடத்தும் கொள்கைகள் பொருளாதார சமுதாய முரண்பாடுகளை நீக்கத் தோன்றியவை. உண்மையான மக்கள் நலன் காக்கும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியவை வழி நடத்தும் கொள்கைகளாகும்.

கேள்வி 3). வழி நடத்தும் கொள்கைகளில் முக்கியமானவற்றை விவரிக்கவும்?.

பதில்:-

a) எல்லாக் குடிமக்களுக்கும் ஓரளவு தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை அளித்தல்.

b) பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைத்தல்,

c) ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான

வேலைக்கு நிகரான ஊதியம் அளித்தல்,

d) இளைஞர்கள், குழந்தைகளைச் சுரண்டலில் இருந்து பாதுகாத்தல்; அவர்கள் நல்ல முறையில் வளரவும் வாழவும் நடவடிக்கை எடுத்தல்,

e) சம வாய்ப்பு அடிப்படையில் நீதியை மேம்படுத்தல்; ஏழைகளுக்கு இலவசச் சட்ட உதவி (Free legal Aid) அளித்தல்; தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தில் பங்களித்தல்.

f) ஊராட்சி மன்றங்களை ஏற்படுத்தி தகுந்த முறையில்அதிகாரம் பகிர்வளித்தல்.

g) படிப்பதற்கு, வேலை செய்வதற்கு, அடிப்படை உரிமை அளித்தல்; வேலை வாய்ப்பற்றோர், முதியோர், ஊனமுற்றோர் இவர்களுக்கு உதவுதல். நியாயமான, மனிதத் தன்மையுடன் கூடிய தொழில் முறை சூழ்நிலைகளை ஏற்படுத்துதல். மகப்பேறு நிவாரணம் அளித்தல். பல்வேறு வகையான தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், தேவையான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்புகள் கிடைக்குமாறு தகுந்த சட்டங்கள் நிறைவேற்றுதல். கிராமப்புறங்களில் தனிப்பட்ட முறையிலோ கூட்டுறவு முறையிலோ குடிசைத் தொழிலை வளர்த்தல்.

h)எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டங்கள் ஏற்படுத்துதல், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவைகளை அறிவியல் நவீன முறைப்படி செயல்படுத்தல். கால்நடைகள் கொல்லப்படுவதைத் தடுத்தல்.

i)14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவசக்கல்வி அளித்தல்,

j) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் நலிந்தோர்களுடைய கல்வி, பொருளாதாரத் திறன்களை வளர்த்தல், அவர் களை சமூக அநீதிகளிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல்.

K) காடு, வனவிலங்குகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களைப் பாதுகாத்தல்,

l) நீதித் துறையை அரசு நிர்வாகத்திலிருந்து பிரித்தல்.

m) மக்களுக்குத் தகுந்த சத்துணவு கிடைக்குமாறு செய்தல்; அதன் மூலம் தகுந்த ஆரோக்கியத்தை வளர்த்தல். போதைப் பொருட்கள் உபயோகிப்பதை தடை செய்தல். மது விலக்கை அமுல் படுத்துதல்.

n) ஞாபகச் சின்னங்கள் (Monuments) மற்றும் கலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாத்தல்.

(o) பன்னாட்டு அமைதி, பாதுகாப்புக்கு உதவுதல்.

 

PART – 4 (A)

அடிப்படைக் கடமைகள்

(Fundamental Duties)

(பிரிவு 51 [அ])

கேள்வி 1). இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் எந்தத் திருத்தம் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது?

பதில் :-

42அவது திருத்தம் மூலமாக 1976இல் கொண்டு வரப்பட்டது.

கேள்வி 2). அடிப்படைக் கடமைகளில் சிலவற்றைக் குறிப்பிடுக.

பதில் :-

(a) அரசியலமைப்புச் சட்டம், அதன் உயரிய கொள்கைகள், அதைச் சார்ந்த நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் முதலியவற்றிற்கு மதிப்பளித்தல்.

(b) இந்திய சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக விளங்கிய உயரிய கொள்கைகளை மதித்து நடத்தல்.

c) இந்திய இறையாண்மையையும் (Sovereignty), ஒற்றுமையை யும் (Unity), ஒருங்கிணைப்பையும் (Integrity) பாதுகாத்தல்,

(d) நாட்டைப் பாதுகாத்தலும், தேவைப்பட்ட நேரத்தில்

நாட்டிற்குச் சேவை செய்தலும்.

e) மதம், மொழி, பிராந்தியம் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து எல்லாத் தரப்பு மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்தல். பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்தல். பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை விட்டு விடுதல்.

(f) பாரம்பரியமிக்க ஒருங்கிணைந்த இந்தியப் பண்பாட்டை

(Composite culture)ப் பாதுகாத்தல்.

(g) காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்கு, பறவையினங்கள் போன்றவைகளைத் தன்னகத்தே கொண்ட சுற்றுப்புறச் சூழல்களைப் பேணிப் பாதுகாத்தல்; உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல்.

(h) அறிவியல் சார்ந்த எண்ணங்கள் (Scientific Temper),

மனித நேயம் (Humanity), தீராய்ந்து நோக்கும் பார்வை, சீர்திருத்தஎண்ணங்கள் (Spirit of Inquiry and Reform) கொண்டிருத்தல்,

(i) பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல். வன்முறைகள்,தீவிர வாதங்களைக் கைவிடல். (Abjure Violence)

(j) தனிப்பட்ட மற்றும் பொதுச் செயல்களில் உயரிய நிலை (Excellence) அடைதல். இதன் மூலம் நாட்டின் செயல் திறனை அபரிமிதமாக வளர்த்தல்.

(k) பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் ஆறிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள தங்களது குழந்தைகளுக்குக் கல்வி அளித்தல்.

கேள்வி 3). அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறுபவர்களைத் தண்டிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா?

பதில் :- இல்லை.

 

நமது மையத்தின் முக்கிய நோக்கம் நேர்மையான அரசு பணியாளர்களை உருவாக்குவதே நமது நோக்கம்…

மேலும் தகவலுக்கு….

 

 

INDIAN CONSTITUTION PART IV &IV-A
PART- IV

Directive Principles of State Policy

(Sections 36-51)

Question 1). What are Guiding Principles?

Answer:-

The guiding principles are the principles to be observed when the central and state governments are running the government. Explanations of these can be found in Sections 36-51.

Question 2). What are the differences between fundamental rights and guiding principles?

Answer:-

When fundamental rights are affected, you can go to court against it. Courts cannot go against governments for not following guiding principles.

Fundamental rights are political in nature; Guiding policies were intended to eliminate economic and social conflicts. Guiding principles are what a government should consider to protect the true welfare of the people.

Question 3). Describe the important guiding principles?.

Answer:-

a) To provide a somewhat self-sufficient life to all citizens.

b) Reducing economic volatility,

c) Same for males and females

Paying commensurate work,

d) Protection of youth and children from exploitation; Taking steps to help them grow and live well,

e) Promotion of justice on the basis of equal opportunity; Providing free legal aid to the poor; Contributing to workers in factory management.

f) Establishment of panchayat councils and proper devolution of powers.

c) Same for males and females

Paying commensurate work,

d) Protection of youth and children from exploitation; Taking steps to help them grow and live well,

e) Promotion of justice on the basis of equal opportunity; Providing free legal aid to the poor; Contributing to workers in factory management.

f) Establishment of panchayat councils and proper devolution of powers.

h)Establishment of uniform rights laws for all people, implementation of agriculture and animal husbandry according to modern scientific methods. Prevention of killing of cattle.

i) Free compulsory education for children below 14 years of age;

j) Development of educational and economic skills of the downtrodden tribal people and the vulnerable, protecting them from social injustices and exploitation.

K) Conservation of forest, wildlife and environment,

l) Separation of Judiciary from Public Administration.

m) Ensuring access to adequate nutrition for the population; thereby promoting proper health. Prohibition of drug use. Enforcement of liquor exemption.

n) Protection of monuments and places of art historical importance.

(o) Contribute to international peace and security.

PART – 4 (A)

Basic Duties

(Fundamental Duties)

(Section 51 [a])

Question 1). Fundamental duties of citizens of India were brought into the Constitution by which amendment?

Answer :-

It was brought in 1976 through the 42nd Amendment.

Question 2). Mention some of the basic duties.

Answer :-

(a) Respect for the Constitution, its highest principles, its institutions, National Flag, National Anthem etc.

(b) Upholding the noble ideals which inspired the Indian freedom struggle.

c) Protection of Indian Sovereignty, Unity and Integrity,

(d) Defense of the country, in times of need

Serving the country.

e) Fostering harmony and brotherhood among people of all walks of life across narrow boundaries of religion, language and region. A tribute to womanhood. Abandoning practices that denigrate the dignity of women.

(f) Traditional integrated Indian culture

(Composite culture) conservation.

(g) maintaining and protecting natural ecosystems such as forests, lakes, rivers, wild animals, birds etc.; Loving beings.

(h) Scientific Temper,

Humanity, Inquisitive Vision, Spirit of Inquiry and Reform,

(i) Protection of public property. Abandoning violence and radical arguments. (Abjure Violence)

(j) Attainment of excellence in personal and public actions. By doing this, the country’s operational capacity will be enhanced immensely.

(k) Parents or guardians educating their children between six and fourteen years of age.

Question 3). Is there room in the Constitution to punish those who fail to perform basic duties?

answer.

The main objective of our center is to create honest civil servants…

 

 

For more information…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply