உட்பிரிவு -2
பாராளுமன்றம் (PARLIAMENT)
பிரிவுகள் (79-122)
பொது
கேள்வி 1. பாராளுமன்றம் எவைகளை உள்ளடக்கியது?
பதில் :-குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (Rajya Sabha), மக்களவை (Lok Sabha) என்ற மூன்றும் ஒருங்கிணைந்த அமைப்பு பாராளுமன்றம் ஆகும்.
இங்கிலாந்து அரசரைப் போல இந்தியக் குடியரசுத் தலைவரும் பாராளுமன்றத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறார்.
கேள்வி 2. மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் உண்டு?
பதில் :-மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 238 உறுப்பினர்களும், இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்து விளங்கும் நியமன உறுப்பினர்கள் 12 பேரும் இருப்பார்கள். குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்.
மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங் களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். நேராட்சிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறை பற்றி குடியரசுத் தலைவர் வழிமுறைகள் ஏற்படுத்துவார்.
கேள்வி 3. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
பதில் :-மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 530க்கு மிகைப்படாத உறுப்பினர்களும் மத்திய அரசு நேரடி ஆட்சிப் பகுதிகளிலிருந்து 20க்கு மிகைப்படாத உறுப்பினர்களும் இருப்பர். மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப் பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடும். 60 இலட்சத் துக்குக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலங்களைப் பொறுத்த வரையில் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இல்லை.
கேள்வி 4. தற்பொழுது மாநிலவாரியாக ஒதுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் களின் எண்ணிக்கை, எந்த ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பை (Census) அடிப்படையாகக் கொண்டது?
பதில் :-1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப் படையாகக் கொண்டது. 2026க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் மாநில வாரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும்.
கேள்வி 5. மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் எவ்வளவு?
பதில் :-மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை (Permanent Body) ஆகும். அது கலைக்கப்பட மாட்டாது. உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பகுதியினர் பதவி விலகுவார்கள். அதே அளவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மக்களவையின் உறுப்பினர்கள் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். ஆனால் அவசர நிலை (Emergency) அமலில் இருக்கும் பொழுது ஐந்தாண்டுகளுக்குப் பின்னாலும் சட்டம் மூலமாக அவையை ஒவ்வொரு ஆண்டாக நீடிக்கலாம். அவரச நிலை நீக்கப்பட்டபின்பு ஆறு மாதங்களுக்கு மேல் மக்களவை நீடித்திருக்கக் கூடாது. (ஏற்கெனவே ஐந்தாண்டு மூடிந்திருந்தால் மட்டும்)
கேள்வி 6. குடியரசுத் தலைவர் மக்களவையை ஐந்தாண்டு காலம் முடியுமுன்னே கலைக்க முடியுமா?
பதில் :-ஆம். அமைச்சரவையின் பரிந்துரையின்படி.
கேள்வி 7. மாநிலங்களவை உறுப்பினராக வேண்டிய தகுதிகள் யாவை?
பதில் :-இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 30 வயது நிரம்பியவ ராக இருக்க வேண்டும். எந்த மாநிலத்திலிருந்து போட்டியிடு கிறாரோ அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும். மன நிலை சரியில்லாதவராக இருக்கக் கூடாது. நொடிப்பு நிலையராக (Insolvent) இருக்கக் கூடாது. சட்டத்தின் அடிப்படையில் தகுதி யற்றவராக இருத்தல் கூடாது. அரசு ஊதியம் பெறக் கூடிய பதவி யில் இருக்கக் கூடாது. மத்திய மாநில அமைச்சர் பதவி, அரசு ஊதியம் பெறக் கூடிய பதவி எனக் கருதப்படவில்லை.
கேள்வி 8. மக்களவை உறுப்பினராக வேண்டிய தகுதிகள் யாவை?
பதில் :-25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும். பிற தகுதிகள் முந்தைய பதிலில் குறிப்பிட்டபடி இருக்க வேண்டும்.
பாராளுமன்ற அதிகாரிகள்
கேள்வி 1. மாநிலங்களவை (Rajya Sabha)த் தலைவர் யார்?
பதில் :-துணைக் குடியரசுத் தலைவரே தன் பதவியின் காரணமாக மாநிலங்களவையின் தலைவராக இருப்பார் (Ex-Officio Chairman of the Rajya Sabha).
கேள்வி 2. துணைத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
பதில் :- துணைத் தலைவர் அவையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கும் பொழுது துணைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கியதாகக் கருதப்படுவார். தானாகவே பதவி விலகல் செய்யலாம். தன் பதவி விலகல் மடலைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். தலைவர் பதவி காலியாக இருக்கும் பொழுதும் தலைவர் தன் பதவியில் செயலாற்ற முடியாத காலங்களில் துணைத் தலைவர், அவைத் தலைவராகப் பணியாற்றுவார்.
கேள்வி 3. துணைத் தலைவரைப் பதவியில் இருந்து நீக்க முடியுமா?
பதில் :-பதினான்கு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு கொண்டு வரும் தீர்மானம் அவையின் அப்போதைய உறுப்பினர்களின் பெரும்பான்மையரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேறினால் துணைத் தலைவர் பதவி இழந்ததாகக் கருதப்படுவார். தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் பொழுது அவர்கள் அவைத் தலைவராகச் செயல்படக் கூடாது.
கேள்வி 4. மக்களவைத் தலைவர் (Speaker) துணைத் தலைவர் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும் முறை செயல்பாடு குறித்து விளக்குக.
பதில் :- மக்களவை உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை அவைத் தலைவராகவும், மற்றொருவரை துணைத் தலைவ ராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். உறுப்பினர் பதவியை இழக்கும் பொழுது தங்களது பதவியையும் இழக்கிறார்கள். பணி விடுப்பு மடலை ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொள்ள வேண்டும், முந்தைய பதிலில் கொடுக்கப்பட்டவாறு இவர்களைப் பணி நீக்கம் செய்யலாம். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும் பொழுது இவர்கள் அவையின் தலைவராகச் செயல்படக் கூடாது. இவர்களது ஊதியத்தைப் பாராளுமன்றம் சட்டம் மூலமாகத் தீர்மானிக்கும். மக்களவை கலைக்கப்பட்டாலும் தேர்தலுக்குப் பின்னால் அமையும் அவையின் முதல் கூட்டம் வரை பழைய அவைத் தலைவர் தன் பதவியில் தொடருவார்.
மக்களவைத் தலைவர் பதவி காலியாக இருக்கும் பொழுதோ, அல்லது அவர் பதவி ஆற்றாத நிலையில் இருக்கும் பொழுதோ, துணைத் தலைவர், தலைவர் பதவியில் செயல்படு வார். இரு பதவிகளும் காலியாக இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் தலைவராகச் செயல்படுவார். இருவரும் பதவியில் இருந்தாலும், தலைவராகச் செயல்பட இயலாத நிலையில் அவையின் நியமன விதிகளைப் பின்பற்றி ஒருவர் தலைவராகச் செயல்படுவார்.
கேள்வி 5. பாராளுமன்றத்தின் செயலகம் (Secretariat) பற்றிக் குறிப்பிடுக.
பதில் :- ஒவ்வொரு அவைக்கும் தனித் தனிச் செயலகம் உண்டு (Lok Sabha Secretariat and Rajya Sabha Secretariat). செயலகத்தின் அலுவலர்கள் பணிவிதிகளைப் பற்றிப் பாராளுமன்றம் சட்டம் இயற்றும்வரையில் அவைத் தலைவரைக் கலந்தாலோசித்துக் குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட விதிகள் (Rules) நடைமுறையில் இருக்கும்.
கேள்வி 6. பாராளுமன்ற இரு அவைகளின் அதிகார வரையறை பற்றி ஒப்பிடுக.
பதில் :- பொதுவாக இரு அவைகளின் அதிகாரம் சமமாக இருந்த போதிலும் ஒவ்வொரு அவைக்கும் தனிப்பட்ட சில அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.நிதி மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே கொண்டு வரப் பட வேண்டும். நிதி மசோதாக்களில் மாற்றங்கள் செய்யவோ அனுமதி மறுக்கவோ மேலவைக்கு அதிகாரம் இல்லை. அமைச்சர் குழு மக்களவைக்கே கூட்டுப் பொறுப்பு வாய்ந்த வர்கள். ஒருங்கிணைந்த கூட்டத்தில் (Joint Sitting), அதிக எண்ணிக்கையின் காரணமாக வாக்கெடுப்பில் மக்களவையின் கையே ஓங்கி நிற்கும். அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் மக்களவையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.
இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேலவைக்குச் சில சிறப்புரிமைகள் உள்ளன. புதிதாக அனைத்திந்தியப் பணி (All India Service) உருவாக்க முதன் முதலில் மேலவையின் தீர்மானம் வழியான ஒப்புதல் தேவை. நாட்டின் நலனை முன்னிட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல் விஷயங்கள் மீது தற்காலிகமாக சட்டம் இயற்ற வேண்டுமென்றால் முதலில் மேலவையின் ஒப்புதல் தீர்மானம் வழியாகத் தேவை. அரசியல் சட்ட திருத்தங்களைப் பொறுத்த வரையில் ஒருங்கிணைந்த கூட்டம் (Joint Sitting) நடத்த அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. ஆதலால் மேலவையின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை.
கேள்வி 7. லோக் சபாவின் முதல் சபாநாயகர் யார்?
பதில் :-. GV. மாவ்லங்கர்.
பாராளுமன்றத்தின் செயல்முறைகள்
கேள்வி 1. பாராளுமன்றத்தின் செயல்முறைகளை விவரி.
பதில் :-இரு அவைகளிலும் உறுப்பினர்களாகச் செயல்படுமுன் குடியரசுத் தலைவர் முன்போ அல்லது அவரால் இதற்காக நியமிக்கப்பட்டவர் முன்போ மூன்றாவது அட்டவணையில் குறிப்பிட்டபடி உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவைத் தலைவருக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் ஏதாவது வாக்கெடுப்பில் இரு தரப்பினருக்கும் சமமான வாக்குகள் இருந்தால் அவைத் தலைவர் தனது வாக்கை (Casting Voteஅளிக்கலாம்.
அவைகளில் கூட்டம் நடத்த (Quorum) குறைந்தது பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தேவை. தேவையான உறுப்பினர்கள் இல்லாத போது அவையை ஒத்தி போட அவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
உறுப்பினர்களின் தகுதி இழப்பு
கேள்வி 1. உறுப்பினர்கள் பதவி இழப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
பதில் :-ஒருவர் ஓர் அவையில்தான் உறுப்பினராகச் செயல்பட முடியும். இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓர் அவை யில் உள்ள உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யசிறப்புரிமைக்கு முரண்பாடாகச் செயல்பட்டால் (Breach of Privilege) உறுப்பினர்களையோ அல்லாதவர்களையோ தண்டிக்க இரு அவைகளுக்கும் உரிமை உண்டு.
கேள்வி 2. சிறப்புரிமைக்கு முரண் (Breach of Privilege) எடுத்துக்காட்டு தருக.
பதில் :-பாராளுமன்றத்தையோ அதன் உறுப்பினர்கள், குழுக்கள் பற்றியோ தரக் குறைவாக எழுதுதல், பேசுதல்; பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி உண்மைக்கு முரணாகவோ, திரித்தோ எழுதுதல், பேசுதல்; பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக உறுப்பினர் களுக்கு கையூட்டு வழங்குதல், குழுக்களுக்கு முன்னால் பொய் சாட்சியமோ, உண்மையைத் திரித்தோ சொல்லல்; இன்னோ ரன்னவை சிறப்புரிமைக்கு முரணான செயலாகும்.
கேள்வி 3. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகளை நிர்ணயிப்பது யார்?
பதில் :-பாராளுமன்றமே சட்டம் மூலமாக நிர்ணயிக்கும்.
உட்பிரிவு -2
பாராளுமன்றம் (PARLIAMENT)
பிரிவுகள் (79-122)
பொது
கேள்வி 1. பாராளுமன்றம் எவைகளை உள்ளடக்கியது?
பதில் :- குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (Rajya Sabha), மக்களவை (Lok Sabha) என்ற மூன்றும் ஒருங்கிணைந்த அமைப்பு பாராளுமன்றம் ஆகும்.
இங்கிலாந்து அரசரைப் போல இந்தியக் குடியரசுத் தலைவரும் பாராளுமன்றத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறார்.
கேள்வி 2. மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் உண்டு?
பதில் :- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 238 உறுப்பினர்களும், இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்து விளங்கும் நியமன உறுப்பினர்கள் 12 பேரும் இருப்பார்கள். குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்.
மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங் களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். நேராட்சிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறை பற்றி குடியரசுத் தலைவர் வழிமுறைகள் ஏற்படுத்துவார்.
கேள்வி 3. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
பதில் :-மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 530க்கு மிகைப்படாத உறுப்பினர்களும் மத்திய அரசு நேரடி ஆட்சிப் பகுதிகளிலிருந்து 20க்கு மிகைப்படாத உறுப்பினர்களும் இருப்பர். மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப் பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடும். 60 இலட்சத் துக்குக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலங்களைப் பொறுத்த வரையில் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இல்லை.
கேள்வி 4. தற்பொழுது மாநிலவாரியாக ஒதுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் களின் எண்ணிக்கை, எந்த ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பை (Census) அடிப்படையாகக் கொண்டது?
பதில் :- 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப் படையாகக் கொண்டது. 2026க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் மாநில வாரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும்.
கேள்வி 5. மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் எவ்வளவு?
பதில் :- மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை (Permanent Body) ஆகும். அது கலைக்கப்பட மாட்டாது. உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பகுதியினர் பதவி விலகுவார்கள். அதே அளவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மக்களவையின் உறுப்பினர்கள் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். ஆனால் அவசர நிலை (Emergency) அமலில் இருக்கும் பொழுது ஐந்தாண்டுகளுக்குப் பின்னாலும் சட்டம் மூலமாக அவையை ஒவ்வொரு ஆண்டாக நீடிக்கலாம். அவரச நிலை நீக்கப்பட்டபின்பு ஆறு மாதங்களுக்கு மேல் மக்களவை நீடித்திருக்கக் கூடாது. (ஏற்கெனவே ஐந்தாண்டு மூடிந்திருந்தால் மட்டும்)
கேள்வி 6. குடியரசுத் தலைவர் மக்களவையை ஐந்தாண்டு காலம் முடியுமுன்னே கலைக்க முடியுமா?
ஆம். அமைச்சரவையின் பரிந்துரையின்படி.
கேள்வி 7. மாநிலங்களவை உறுப்பினராக வேண்டிய தகுதிகள் யாவை?
பதில் :- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 30 வயது நிரம்பியவ ராக இருக்க வேண்டும். எந்த மாநிலத்திலிருந்து போட்டியிடு கிறாரோ அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும். மன நிலை சரியில்லாதவராக இருக்கக் கூடாது. நொடிப்பு நிலையராக (Insolvent) இருக்கக் கூடாது. சட்டத்தின் அடிப்படையில் தகுதி யற்றவராக இருத்தல் கூடாது. அரசு ஊதியம் பெறக் கூடிய பதவி யில் இருக்கக் கூடாது. மத்திய மாநில அமைச்சர் பதவி, அரசு ஊதியம் பெறக் கூடிய பதவி எனக் கருதப்படவில்லை.
கேள்வி 8. மக்களவை உறுப்பினராக வேண்டிய தகுதிகள் யாவை?
பதில் :- 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும். பிற தகுதிகள் முந்தைய பதிலில் குறிப்பிட்டபடி இருக்க வேண்டும்.