(Legislative Power of the Governor) (பிரிவு 213)

Table of Contents

பொதுவான வழிமுறைகள் (பிரிவுகள் 208-212)

கேள்வி 1. மாநில அவைகள் நடத்தும் முறைகள் யாவை?

பதில் :-

அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு மாநில அவைகள் தங்களுக்கென மாநில அவைகளை நடத்தும் வழிமுறைகளையும், நிதி வரவு செலவு சம்பந்தமான ஒழுங்கு முறைகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இரு அவைகள் இருக்கும் மாநிலங்களில் ஆளுநர் இரு அவைத் தலைவர்களையும் கலந்தாலோசித்து இரு அவைகளுக்கிடையே தொடர்புகளுக்கான வழிமுறை விதிகளை ஏற்படுத்துவார்.

கேள்வி 2. மாநில அவைகளில் நடைமுறையில் இருக்கும் மொழி யாது?

பதில் :-

பொதுவாக மாநில அலுவல் மொழியோ அல்லது இந்தியோ அல்லது ஆங்கிலமோ நடைமுறையில் பயன்படுத்தப்படும். மிசோராம், அருணாசலப்பிரதேசம், கோவா போன்ற மாநிலங் களில் ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம்.
ஓர் உறுப்பினர் அவையில் நடைமுறையில் இருக்கும் மொழியில் பேச முடியாவிட்டால், அவைத் தலைவர் அனுமதி யுடன் தன் தாய்மொழியில் அவையில் பேசலாம்.

கேள்வி 3.நீதித்துறை மற்றும் சட்டமன்றங்களின் தனித்தன்மை (Independence) எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

பதில் :-

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கடமையைச் செயல்படுத்தும் விதம் பற்றி மாநில அவைகள் விவாதிக்காது; அதே போன்று மாநில அவைகளின் மற்றும் அதன் அதிகாரிகளின் அவை சம்பந்தப்பட்ட செயல்முறைகளில் நீதிமன்றம் தலையிடாது.

உட்பிரிவு – 4

ஆளுநரின் சட்டமியற்றும் அதிகாரங்கள் (Legislative Power of the Governor)

(பிரிவு 213)

கேள்வி 1.ஆளுநர் எப்பொழுது அவசர ஆணைகள் (Ordinance) பிறப்பிக்கலாம்? அதன் தொடர்பான மற்ற செயல்கள் யாவை?

பதில் :-

மாநில அவைகளின் கூட்டத் தொடர் இல்லாத காலங்களில், மிகவும் இன்றியமையாதது என்று ஆளுநர் கருதினால் சட்டத்திற்கு இணையான அவசர ஆணைகள் பிறப்பிக்கலாம்.

தீராய்வு செய்தே ஆளுநர் அவசர ஆணைகள் பிறப்பிப்பார். அவசர ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு மசோதாவாக இருக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவரின் மூன் அனுமதி வேண்டியிருந்தாலோ, குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்ப வேண்டியதாக இருந்தாலோ, அரசியலமைப்புச் சட்டத் திற்குப் புறம்பானதாக இருப்பதாகக் கருதினாலோ, இருந்தாலோ. அவசர ஆணைக்கு ஆளுநர், குடியரசுத் தலைவரின் அறிவுரை

இல்லாமல் ஒப்புதல் அளிக்க மாட்டார். ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட அவசர ஆணைகள், அவைகள் கூடிய உடன் சமர்ப்பிக்கப்படும். அவைகள் ஆறு வாரங் சுளுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டாலோ, அவைகள் அவசர ஆணையை மறுத்து ஒப்புதல் அளித்தாலோ, அவசர ஆணை செயல் தன்மை இழந்து விடும். ஆளுநரும் அவசர ஆணையை எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். 2. மாநில அரசுகள் அவசரச் சட்டங்கள் (ordinances):

பிறப்பிப்பது பற்றி உச்சநீதி மன்றத்தின் கருத்து என்ன? மாநிலங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அவைகளுக்கே உண்டு. மிகவும் இன்றியமையாத நேரத்தில், மாநில அவைகளின் கூட்டத் தொடர்கள் இல்லாத நேரத்தில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும். ஒரே விஷயத்தைப் பற்றிய அவசரச் சட்டங்களை சிற்சில மாறுதல்க ளுடன் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது நிர்வாகத்துக்கு (Executive) அளிக்கப்பட்டுள்ள அதிகார எல்லையைத் தாண்டுவ தாகும். மாநில அவைகளின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும் (D.C. Wadhwa Vs State of Bihar (1987) ISCC 378).

உட்பிரிவு 5

உயர்நீதி மன்றங்கள் (High Courts)

(பிரிவுகள் 214-231)

கேள்வி 1. இந்தியாவில் எத்தனை உயர்நீதி மன்றங்கள் உள்ளன?

பதில் :- ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் உயர்நீதி மன்றம் இருக்கும், ஆனால் பாராளுமன்றம் இயற்றும் சட்டம் மூலமாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக ஓர் உயர்நீதிமன்றம் செயல்பட லாம்; ஒரு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தின் வரம்பை, நேராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்தலாம். நேராட்சிப் பகுதிக்கும் தனியான உயர்நீதிமன்றம் இருக்கலாம். தற்போதைய உயர்நீதி மன்றங்களின் எண்ணிக்கை 24. ஒவ்வொரு உயர்நீதிமன்றத் திலும் ஒரு தலைமை நீதிபதியும் தேவையான மற்ற நீதிபதிகளும் இருப்பார்கள்.

கேள்வி 2]கடைசியாக ஆரம்பிக்கப்பட்ட மூன்று உயர்நீதிமன்றங்கள் எவை?

பதில் :- மேகாலயா, மணிப்பூர், திரிபுரா (2013ஆம் ஆண்டு)

கேள்வி 3. நான்கு மாநிலங்களுக்காக இயங்கும் நீதிமன்றம் யாது?

பதில் :- கௌஹாத்தியிலிருந்து இயங்கும் கௌஹாத்தி உயர்நீதிமன்றம். அஸ்ஸாம், மிசோராம், நாகாலாந்து, அருணாசலப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்காக இயங்குகிறது.

கேள்வி 4. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் மத்திய அரசு நேராட்சிப் பகுதிகளுக்காக இயங்கும் உயர்நீதி மன்றங்கள் எவை? எவை?

பதில் :- பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் – பஞ்சாப், ஹரியானா மற்றும் மைய அரசுப் பகுதியான சண்டிகார். பம்பாய் உயர்நீதி மன்றம் – மஹாராஷ்டிரா, கோவா கல்கத்தா உயர்நீதி மன்றம் – மேற்கு வங்காளம், அந்தமான்

தீவுகள் சென்னை உயர்நீதி மன்றம் – தமிழ்நாடு, புதுச்சேரி குஜராத் – குஜராத், டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி கேரளா – கேரளா, இலட்சத் தீவு.

கேள்வி 5. எந்த முன்னாள் மத்திய அரசுப் பகுதிக்குத் தனியாக உயர்நீதி மன்றம் உள்ளது?

பதில் :- தில்லி.

கேள்வி 6. எந்தெந்த உயர்நீதிமன்றங்கள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன?

பதில் :- கல்கத்தா, பம்பாய், சென்னை.

கேள்வி 7. உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பது யார்?

பதில் :- மாநில ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (Chief) Justice of India) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் குடியரகத் தலைவர் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளை (கூடுதல் மற்றும் தற்காலிக நீதிபதிகளையும் சேர்த்து) உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, மாநில ஆளுர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

கேள்வி 8. உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக வேண்டிய தகுதிகள் யாவை?

பதில் :- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இந்தியாவில் பத்து ஆண்டுகள் நீதி சம்பந்தமான (Judicial office) பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களிலோ தொடர்ந்து பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகச் செயல்பட்டிருக்க வேண்டும். தீர்ப்பாயங்களில் உறுப்பினர்களாக (Members of Tribunal) செயல்பட்ட காலங்களும் சிறப்பான சட்ட அறிவு மத்திய அரசு, மாநில அரசு பதவிகளில் இருந்த காலங் களும் இந்தப் பத்தாண்டுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேள்வி 9. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதி களுக்கும் மாத ஊதியம் எவ்வளவு?

பதில் :- தலைமை நீதிபதியின் மாத ஊதியம் ரூ. 90,000/- ஆகும். மற்ற நீதிபதிகள் ஊதியம் ரூ. 80,000/- ஆகும்.

கேள்வி 10. உயர்நீதி மன்ற நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவி வகிக்கலாம்? தலைமை நீதிபதி 65 வயது வரை பதவி வகிக்கலாம். மற்ற நீதிபதிகள் 62 வயது வரை பதவி வகிக்கலாம்.

கேள்வி 11. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மறுபடியும் உயர்நீதி மன்றத்தில் நியமனம் செய்ய முடியுமா?

பதில் :- முடியும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன்.

கேள்வி 12. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு வழக்குரைஞ ராகப் பணியாற்றலாமா?

பதில் :- முடியும். தலைமை நீதிமன்றத்திலும், தான் பணியாற்றாத மற்ற உயர்நீதி மன்றங்களிலும் வழக்குரைஞராகப் பணியாற்றலாம்.

கேள்வி 13.உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய முடியுமா?

பதில் :- முடியும்.நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமை யின்மை ஆகிய காரணங்களை முன்னிட்டு குற்றச்சாட்டுகள் மூலமாக (By Impeachment) பதவி நீக்கம் செய்யலாம். தலைமை நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கேள்வி 14. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பதவி உறுதிமொழி (Oath or affirmation) அளிப்பவர் யார்?

பதில் :- ஆளுநர்.

கேள்வி 15. உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவி விலகல் மடலை யாருக்கு அனுப்ப வேண்டும்?

பதில் :- குடியரசுத் தலைவருக்கு.

கேள்வி 16. ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியை மற்ற உயர்நீதி மன்றங்களுக்கு மாற்ற முடியுமா?

பதில் :- முடியும். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து மாறுதல் செய்யலாம்.

கேள்வி 17.உயர்நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரங்கள் | சிறப்பம்சங் களைக் குறிப்பிடுக.

பதில் :-

உயர்நீதிமன்ற வரம்புக்குட்பட்ட பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் (Tribunals) மீதான மேற்பார்வையை (Superintendence) உயர்நீதி மன்றம் கைக் கொள்ளும். தனக்குக் கீழ் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக் கொன்றில் அரசியலமைப்புச் சட்ட நுணுக்க தீராய்வு (Substantial Question of law needing the interpretation of the constitution) வேண்டுமெனக் கருதினால் உயர்நீதி மன்றம் அந்த வழக்கைக் கீழ் மன்றங்களிலிருந்து மாற்றித் தானே விசாரிக்கும். உயர்நீதி மன்றம் தானே தீர்ப்பளிக்கலாம் அல்லது தனது கருத்தைத் தெரிவித்து வழக்கை மேலே தொடருமாறு கீழ் நீதிமன்றத்துக்கு ஆணையிடலாம்.

உயர்நீதிமன்ற அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமிக்கும் அதிகாரம் அதன் தலைமை நீதிபதிக்கு உண்டு. புதிதாக நியமிக்கும் ஆட்களை பொதுத் தேர்வு ஆணையம் மூலமாக எடுக்குமாறு ஆளுநர் கூறலாம். உயர்நீதிமன்ற அதிகாரிகள் அலுவலர்களின் பணி விதிமுறைகளுக்காகத் தனியாகச் சட்டம் இயற்றும் வரையில் உயர்நீதி மன்றமே இதற்காக விதிமுறை களை வகுத்துக் கொள்ளும். இருந்த போதிலும் சம்பளம், படிகள், விடுமுறை, ஓய்வூதியம் பற்றிய விதிமுறைகளுக்கு ஆளுநர் ஒப்புதலும் தேவை.

உச்ச நீதிமன்றத்தைப் போல உயர்நீதிமன்றத்திற்கும் சிறப்பு ஆணை (Writ) அதிகாரம் உண்டு. இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலாக மாநில அளவில் செயல் படுவது உயர்நீதிமன்றம் ஆகும். ஆட்கொணர்விக்கும் (Habeas Corpus), செயலுறுத்தும் (Mandamus), தடை விதிக்கும் (Prohibition), தகுதி முறை வினவும் (Quo-Warranto) மற்றும் நெறிமுறை உறுத்தும் (Certiorari) நீதிப் பேராணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இருக்கிறது.

உயர்நீதிமன்றம், நீதிமன்ற ஆவணங்களின் இருப்பிடமாகும். (Court of Record). அதன் வரையறைக்குட்பட்ட கீழ்நிதி மன்றங்கள் அதன் தீர்ப்புகளின் வழி வழக்குகளை ஆய்வு செய்யும்.

உயர்நீதி மன்றத்தின் தனித்துவத் தன்மைக்கு களங்கம் விளைவிப்பவர்களைத் தண்டிக்க உயர்நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. உயர்நீதிமன்ற அதிகாரிகள், மற்றும் அலுவலர்களின் ஊதியம் முதலியன உட்பட உயர்நீதிமன்றத்தின் எல்லா நிர்வாகச் செலவுகளும் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து (Charged Expenditure) செலவழிக்கப் படும்.

கேள்வி 18.ஓர் உயர்நீதிமன்றத்தின் தேவையான எண்ணிக்கையை யார் முடிவு செய்வார்?

பதில் :-

நீதிபதிகளின்அவ்வப்போது குடியரசுத் தலைவர் முடிவு செய்வார்.

கேள்வி 19.உயர்நீதி மன்றத்தின் சிறப்பு ஆணை (Writ) பிறப்பிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விடப் பரவலானதா?

பதில் :-

ஆம்.உச்சநீதி மன்றம் பகுதி மூன்றில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறல் பற்றி மட்டும்தான் சிறப்பு ஆணைகள் பிறப்பிக்கலாம். ஆனால் உயர்நீதிமன்றம் அடிப் படை உரிமைகள் தவிர மற்ற சட்ட உரிமைகள் (legal rights) மீதும் சிறப்பு ஆணைகள் பிறப்பிக்கலாம்.

 

உட்பிரிவு 6

மாவட்ட நிலை நீதிமன்றங்கள்

(பிரிவுகள் 233-237)

கேள்வி 1. மாவட்ட நிலை நீதிமன்றங்களின் அமைப்பு யாது?

பதில் :-

மாவட்ட அளவில் நீதிபதிகள் நான்கு நிலைகளில் இருப்பார்கள். மாவட்டத் தலைமையிடத்தில் இருப்பவர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஆவர். அவருக்குக் கீழ் அடுத்த நிலையில் இருப்பவர்கள் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் ஆவர். இவர்களுக்கு அடுத்த இரண்டு நிலையி லுள்ளவர்கள் உரிமையியலுக்கும் குற்றவிய லுக்கும் தனித்தனியாக இருப்பார்கள். முதுநிலை நீதிபதிகளும் (Senior Judges), இளநிலை நீதிபதிகளும் (Junior Judges) இருப்பார்கள்.
மாவட்டத் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் பல தரப்பட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகளாகச் செயல்படுவார்கள். நீதிமன்றங்களின் பிரிவுகளில், குடும்பநல நீதிமன்றங்கள், கூடுதல் முதன்மை பெருநகர்க் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள். கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், சிறுவழக்கு நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள், வாடகைப் பிரச்னை தீர்ப்பாயங்கள் போன்றன குறிப்பிடத்தக்கன.

கேள்வி 2. மாவட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர் யார்? நியமிக்கப்பட வேண்டிய தகுதிகள் யாவை?

பதில் :-

ஒரு மாநிலத்தில் மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி களைத் தேர்ந்தெடுப்பது, நியமனம் செய்வது, பதவி உயர்வு செய்வது முதலியன அந்த மாநிலத்திற்கு அதிகார வரம்புள்ள உயர்நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து அந்த மாநில ஆளுநரால் செய்யப்பட வேண்டும்.

கூடுதல் மாவட்ட நீதிபதிகளின் ஒரு பகுதியினர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்குக் குறைந்தது ஏழாண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும். மைய அரசு, மாநில அரசு பதவி வகிப்பவர்களாக இருக்கக் கூடாது.

கேள்வி 3. மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகளைத் தவிர மற்ற நிலைகளில் உள்ள நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்படு கிறார்கள்?

பதில் :-

உயர்நீதிமன்றத்தையும், மாநிலத் தேர்வாணையையும்  கலந்தாலோசித்து ஆளுநர் நியமிப்பார்.

கேள்வி 4. மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்து உயர்நீதிமன்றங்களின் அதிகாரங்கள் எவை?

பதில் :-

பிரிவு 227 இதைப் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கிறது. உயர்நீதிமன்ற வரம்புக்குட்பட்ட பகுதியில் உள்ள எல்லா மாவட்ட மற்றும் அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் (Tribunals) மீதான மேற்பார்வையை உயர்நீதிமன்றம் கைக் கொள்ளும். கீழ்மன்றங்களிலிருந்து தேவையான அறிக்கை களைப் பெற்றுக் கொள்ளலாம். அவைகளின் நடவடிக்கைகளை யும், நடைமுறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான பொது விதி களையும், படிவங்களையும் குறித்துரைக்கலாம். நீதிமன்ற அலுவலர்களால் பராமரிக்கப்பட வேண்டிய புத்தகங்கள், பதிவுகள் மற்றும் கணக்குகள் பற்றிய படிவங்களை எடுத்துரைக் கலாம். இதைத் தவிர மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் நியமனம், பதவி இட மாற்றம், விடுப்பு பெறுதல், இவைகளைச் சார்ந்த அதிகாரங்கள் உயர்நீதிமன்றத்தில் இருக்கும்.

கேள்வி 5. மாவட்ட நிலை நீதிமன்றங்களை ஏற்படுத்துவது யார்?

பதில் :- உயர்நீதிமன்றத்தைக் கலந்து மாநில அரசு ஏற்படுத்தும். ஆனால் பிரிவு 247இன் படி ஒன்றியப் பட்டியலில் குறிப்பிட் டுள்ள விஷயங்களின் மீது கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

 

மேலும் படிக்க….

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply