Legislative methods
சட்டமியற்றும் முறைகள்
கேள்வி 1. பண மசோதா (Money Bill) தவிர மற்ற மசோதாக்கள் சட்டமாகும் முறையைத் தெளிவுபடுத்துக.
பதில் :- மசோதாக்கள் அரசாலும் (அமைச்சர்கள் மூலமாக) தனிப் பட்ட உறுப்பினர்கள் மூலமாகவும் (Private Members Bill) ஏதாவது ஓர் அவையில் கொண்டு வரப்படலாம்.
முதல் நிலையில் (First Stage) மசோதா கொண்டு வர அவையின் அனுமதி கோரப்படும் (Leave for introduction of the bill). அனுமதி அளிக்கும் பட்சத்தில் மசோதா அரசு நாளேட்டில் (Official Gazette) வெளியிடப்படும். மசோதா, தேவைப்பட்டால் ஒரு தேர்ந்தெடுத்த அவைக் குழுவுக்கு (Select Committee of the House) அல்லது இரு அவைகள் ஒருங்கிணைந்த ஒரு குழுவுக்கோ (Joint Select Committee of the Houses) அனுப்பப் படலாம். தேவை எனக்கருதினால் பொது மக்கள் கருத்தையும் கோரலாம். குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் அரசின் முடிவுப்படி மசோதா திருத்தப்பட்டு அவையில் கொண்டு வரப்படும். அவையும் அதைத் தீராய்வு செய்து மசோதாவுக்கு அனுமதி அளிக்கும். அனுமதி அளிக்கப்பட்ட மசோதா அடுத்த அவைக்கு அனுப்பப் படும். அடுத்த அவை அந்த மசோதாவை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். திருத்தத்துடன் அனுமதி அளிக்கலாம் அல்லது முதல் அவை செய்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டு மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாம் அல்லது முதல் அவை, திருத்தப்பட்ட மசோதாவை (Amended Version) இரு அவைகள் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு (Joint Sitting of both the House) அனுப்பலாம். ஒருங்கிணைந்த கூட்டத்தில் அனுமதி கிடைத்தால் மசோதாவுக்கு இரு அவைகளின் அனுமதி கிடைத்ததாகக் கருதப்படும்.
இரு அவைகளாலும் ஏற்கப்பட்ட மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் அளித்த உடனே மசோதா சட்டமாகும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாகக் கூறலாம். அல்லது மறு ஆய்வு செய்யுமாறு அவைக்குத் திருப்பி அனுப்பலாம். அவைகளால் மறு ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதலுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால் அவர் அந்த மசோதாவுக்கு அனுமதி (Asit) கொடுத்தாக வேண்டும்.
கேள்வி 2. அவைகள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்படும் பொழுதோ, மக்களவை: கலைக்கப்படும் பொழுதோ நிலுவையிலுள்ள மசோதாக்களின் நிலை என்ன?
பதில் :- அவைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படும் பொழுது இரு அவைகளிலும் நிலுவையிலுள்ள மசோதாக்கள் காலாவதி யாகி விடாது. மக்களவைக்கு வராமல் மேலவையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மக்களவை கலைக்கப் பட்டாலும் காலாவதியாகி விடாது. ஆனால் மக்களவை கலைக்கப் பட்டால் ஏற்கனவே மக்களவையில் நிலுவையில் இருந்த மசோதாக்களும், மக்களவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மேலவையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்களும் காலாவதியாகி விடும்.
கருதினால் பொது மக்கள் கருத்தையும் கோரலாம். குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் அரசின் முடிவுப்படி மசோதா திருத்தப்பட்டு அவையில் கொண்டு வரப்படும். அவையும் அதைத் தீராய்வு செய்து மசோதாவுக்கு அனுமதி அளிக்கும். அனுமதி அளிக்கப்பட்ட மசோதா அடுத்த அவைக்கு அனுப்பப் படும். அடுத்த அவை அந்த மசோதாவை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். திருத்தத்துடன் அனுமதி அளிக்கலாம் அல்லது முதல் அவை செய்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டு மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாம் அல்லது முதல் அவை, திருத்தப்பட்ட மசோதாவை (Amended Version) இரு அவைகள் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு (Joint Sitting of both the House) அனுப்பலாம். ஒருங்கிணைந்த கூட்டத்தில் அனுமதி கிடைத்தால் மசோதாவுக்கு இரு அவைகளின் அனுமதி கிடைத்ததாகக் கருதப்படும்.
இரு அவைகளாலும் ஏற்கப்பட்ட மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் அளித்த உடனே மசோதா சட்டமாகும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாகக் கூறலாம். அல்லது மறு ஆய்வு செய்யுமாறு அவைக்குத் திருப்பி அனுப்பலாம். அவைகளால் மறு ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதலுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால் அவர் அந்த மசோதாவுக்கு அனுமதி (Asit) கொடுத்தாக வேண்டும்.
கேள்வி 3. மசோதாக்களுக்காக இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் எப்பொழுது குடியரசுத் தலைவரால் கூட்டப்படும்?
பதில் :- ஒரு மசோதா ஓர் அவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மறு அவையினால் நிராகரிக்கப்பட்டாலோ, மசோதாவில் ஓர் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களுக்கு மற்றொரு அவை ஒப்புதல் அளிக்கா விட்டாலோ, மசோதாவுக்கு ஒப்புதல் ஓர் அவை ஆறு மாதங்களுக்குள் தராவிட்டாலோ மசோத ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு அனுப்பப்படும். இந்த வழிமுறைகள் நிதி மசோதாவுக்குப் பொருந்தாது.
கேள்வி 4. பண மசோதா என்றால் என்ன?
பதில் :- கீழ்க்கண்ட பொருட்களில் ஒன்றைப் பற்றியேனும் பலவைப் பற்றியேனும் மட்டுமே ஒரு மசோதா பரிந்துரை கொண்டிருந்தால் அது பண மசோதா என்றழைக்கப்படும்.
வசி விதித்தல் (Imposition), நீக்குதல் (Abolition), அளவைக்குறைத்தல் (Remission), மாற்றம் செய்தல், வரிமுறையை
ஒழுங்குபடுத்துதல் (Regulation of Tax) முதலியன.
கடன் வாங்கும் முறைகள், அரசு சார்பில் பணம் பற்றிய உறுதி அளித்தல் (Giving of Guarantee), நிதிக் கட்டுப்பாடு பற்றிய சட்ட திருத்தங்கள் முதலியன. ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் எதிர்பாரா செலவுகள் நிதிகளைப் பராமரித்தல்; இவைகளிலிருந்து பணம் எடுத்தல், போடுதல். கட்டாயச் செலவு நிதி (Charged Expenditure)யைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியன. ஒன்றிய அல்லது மாநிலங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
கேள்வி 5. ஒரு மசோதா, பண மசோதாவா என முடிவு செய்பவர் யார்?
பதில் :- மக்களவைத் தலைவர் (Speaker) & பண மசோதாவின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக. பண மசோதா மக்களவையில் மட்டும் தான் கொண்டு வரப்பட வேண்டும். அவையில் கொண்டு வருமுன் குடியரசுத் தலைவரின் பரிந்துரை வேண்டும்.
இரு அவைகள் ஒருங்கிணைந்த குழுவுக்கு (Joint Select Committee of Both The Houses) அனுப்பப்பட மாட்டாது. இரு அவைகள் ஒருங்கினைந்த கூட்டத்துக்கும் அனுப்பப்பட மாட்டாது.
மக்களவையின் ஒப்புதலுக்குப் பிறகு பண மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவை தங்களது ஒப்புதலையோ, பரிந்துரைகளையோ 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். மக்களவை பரிந்துரைகளை ஏற்று மறுபடியும் ஒப்புதல் அளிக்கலாம். பரிந்துரைகளை நிராகரிக்கவும் செய்யலாம். சுருங்கக் கூறின் பண மசோதாவைப் பொறுத்த வரையில் மக்களவை மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரங்கள் கொண்டுள்ளது.
இரு அவை ஒப்புதலுக்குப் பிறகு பன மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அளிக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாகத் தெரிவிக் கலாம். செய்திகள் (Message for Reconsideration) அனுப்புவதில்லை.
கேள்வி 7. சட்டம் இயற்றும் அதிகாரப் பரவலாக்கம் (Subordinate Legislation) என்றால் என்ன?
பதில் :- சட்டம் இயற்றும் பொறுப்பு பாராளுமன்றம் / மாநில அவை களைச் சார்ந்தது. ஆனால் அன்றாட அரசு இயந்திரம் இயங்க ஆயிரக்கணக்கான விரிவான சட்டங்கள் தேவை. இவைகளை முழுமையாக இயற்றவோ திருத்தம் செய்யவோ அவைகளுக்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் அவைகள் ஒரு பொருள் பற்றிய முக்கியமான விவரங்கள் கொண்ட ஆனால் மேலெழுந்த வாரியாக (Containing Broad Principles) சட்டங்கள் இயற்றும். விரிவான விதிமுறைகள், விளக்கங்கள் பற்றிச் சட்டம் இயற்ற அரசு இயந்திரத்துக்கு (Executive) அவைகள் உரிமை அளிக்கும். அதன் அடிப்படையில் அரசு நிர்வாகம் சட்டம் அல்லது விதிமுறைகள் இயற்றும். இதற்கு Subordinate Legislation அல்லது Delegated Legislation என்று பெயர்.
நிதி பற்றிய தடைமுறைகள்
கேள்வி 1. அரசியலமைப்புச் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளதா?
பதில் :- இல்லை. அது ஆண்டு நிதி அறிக்கை (Annual Finarcial Salement) என்றே குறிப்பிடப்படுகிறது.
கேள்வி 2. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வரவு செலவினங்கள் எவை?
பதில் :-ஒருங்கிணைக்கப்பட்ட நிதி (Consolidated Fund), ஒதுக்கப் பட்ட திதி (Charged Expenditure) இவைகளின் செலவினங்கள் பற்றி இருக்கும். எதிர்பாரா செலவுகள் நிதி (Contingency Fund)க்கும் பணம் ஒதுக்கப்படும்.
கேள்வி 3. பண ஒதுக்கீடு மசோதா (Appropriation Bill) என்றால் என்ன?
பதில் :-குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் சமர்ப்பிக்கப் படும் நிதிக் கோரிக்கைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிதி (Consolidated Fund)யிலிருந்து பணம் ஒதுக்கீடு சட்டம் மூலமாகச் செய்ய வேண்டும். இதற்குண்டான மசோதா பண ஒதுக்கீடு மசோதா (Appropriation Bill) எனப்படும். ஒதுக்கப்பட்ட நிதியின் மீதான திருத்தங்கள் அவைகளில் கொண்டு வரக் கூடாது.
கேள்வி 4. நிதி மசோதா (Finance Bill) என்றால் என்ன?
பதில் :- அடுத்த நிதியாண்டில் புதிதாக விதிக்க, குறைக்கப் போகும் வரிகளைப் பற்றிய பரிந்துரைகள் கொண்ட மசோதா, நிதி மசோதா (Finance Bill) எனப்படும்.
கேள்வி 5. ஒருங்கிணைந்த நிதி (Consolidated fund of India) என்றால் என்ன?
பதில் :- மத்திய அரசுக்கு வரும் எல்லா வருவாய்களும், எழுப்பப் பட்ட கடன்களும், திருப்பி அளிக்கப்பட்ட கடன்களும் ஒருங் கிணைந்த நிதியில் சேர்க்கப்படும். மத்திய அரசு வரிகளிலிருந்து மாநிலங்களுக்குச் சேரும் தொகை இதில் அடங்காது.
கேள்வி 6. கட்டாயச் செலவு நிதி அல்லது ஓதுக்கப்பட்ட நிதி (Charged Expenditure) என்றால் என்ன? அது வாக்கெடுப்பு (Voted) Expenditure) நிதியிலிருந்து எவ்வாறு மாறுபட்டுள்ளது?
பதில் :- அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு ரூபாயும் செலவிட மக்களவையின் அனுமதி, வாக்கு (Vote) மூலமாகத் தேவை. ஆனால் சில குறிப்பிட்ட செலவினங்களைப் பற்றி மக்களவை கருத்துரையாடல் செய்தாலும் வாக்கு மூலமாக அனுமதி தேவை யில்லை. ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இவைகளுக்குப் பணம் ஒதுக்கப்படும். இவை ஒதுக்கப்பட்ட நிதி என்றழைக்கப்படும்.
குடியரசுத் தலைவர் ஊதியம் அவரது அலுவலகச் செலவுகள், இரு அவைத் தலைவர், துணைத் தலைவர் ஊதியம், தலைமை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம், ஓய்வூதியம், தலைமைக் கணக்காயர் (C&AG) ஊதியம் ஓய்வூதியம் முதலானவை மற்றும் அரசின் கடன்களுக்கும் வட்டிகளுக்கும் தேவையான செலவினங்கள் இன்னோரன்னவை ஒதுக்கப்பட்ட செலவினங்கள் (Charged Expenditure) ஆகும்.
இந்திய அரசின் சில அமைப்புகளின் தனித்துவத்தை மனதில் கொண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து செலவுகள் செய்யப்படுகின்றன.
கேள்வி 7. அவசர கால நிதி (Contingency Fund) என்றால் என்ன?
பதில் :- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத எதிர்பாராத செலவினங்கள் சில நேரத்தில் ஏற்படும். பாராளுமன்றக் கூட்டத் தொடரும் இருக் காத நிலையில் அரசின் பொறுப்பில் இருக்கும் அவசர கால நிதியி விருந்து அமைச்சங்கள் பணம் பெறலாம். இதற்கென ஏறக் குறைய ரூபாய் 500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும். பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமானவுடன் முறையாக இப்பணத்தை மக்களவையின் அனுமதியுடன் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எடுத்து அவசர கால நிதியில் திரும்பச் சேர்க்கப்படும்.
கேள்வி 8. பொது நிதி என்றால் என்ன?
பதில் :-அரசு அதிகாரிகளாலோ, நீதிமன்றங்கள் போன்ற (Public Account) வைகளாலோ பொது மக்களிடமிருந்து பெறப்படும் பொதுப் பணங்கள் பொது நிதியில் சேர்க்கப்படும்.
கேள்வி 9. பகுதி நிதி அளித்தல் (Vote on Accomt) என்றால் என்ன?
பதில் :- பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி திங்கள் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படும். பின் அமைச்சகம் வாரியாக துறை சார்ந்த அவைக் குழுக்களால் (Department Rclated Parliamentary Standing Committee) தீராய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் அவைகளில் சமர்ப்பிக்கப்படும். பின் அவைகளில் கருத்துரையாடலுக்குப் பின் அவைகள் வாக்கெடுப்பு நடத்தி அனுமதி அளிக்கும். இந்தச் செயல் முறை முடிய மே இறுதியாகி விடும். இதுவரை வேண்டிய செலவினங்களுக்காக பாராளுமன்றம் மூன்று அல்லது நான்கு மாதச் செலவை விகிதப்படியாக (Proportionate) அனுமதிக்கும். இது பகுதி நிதி அளித்தல் எனப்படும்.
கேள்வி 10. அதிகத் தேவையைப் (Supplementary Demands For Grants) பூர்த்தி செய்வது எவ்வாறு?
பதில் :- துறைகளில் (Ministries or Departments), ஒரு குறிப்பிட்ட சேவைக்கோ (Services) செலவினங்களுக்கோ (lterns of Expenditure) ஓர் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக நிதி தேவை யானால் பாராளுமன்றத்தை அணுகலாம். இதற்கு அதிக தேவையைப் பூர்த்தி செய்தல் (Supplementary Demands for Grans) எனப்படும்.
கேள்வி 11.மறு ஒதுக்கீடு (Reappropriation) என்றால் என்ன?
பதில் :- பட்ஜெட்டில் ஒவ்வொரு வகையான சேவை அல்லது செலவினங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட் டிருக்கும். ஒரு குறிப்பிட்ட சேவைக்கு அதிகப்படியான பணம் தேவையென்றால் சற்றுக் குறைந்த தேவையுள்ள, துறையி லுள்ள மற்றொரு சேவையிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள லாம். இதற்கு மறு ஒதுக்கீடு என்று பெயர்.
கேள்வி 12. வெட்டுத் தீர்மானங்கள் (Cut Motions) என்றால் என்ன?
பதில் :- அரசின் வரவு செலவுத் திட்டங்களை (Budget Proposals) எதிர்த்து உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வரலாம். கொள்கை அளவிலோ (Policy Cut), செலவைக் குறைக்கும் வகையிலோ (Economy Cut), பெயரளவிலோ (Token Cut) வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வரலாம்.
கேள்வி 13. மக்களவை வேறு என்னென்ன வகையான செலவுகளுக்கு அனுமதி தரலாம்?
பதில் :- வரையறுத்துக் கூற முடியாத தன்மையுள்ள சேவைக்கும், எந்த நிதி ஆண்டும் சம்பந்தப்படாத ஒரு சேவைக்கும் அனுமதி தரலாம் (பிரிவு 116).
கேள்வி 14. பட்ஜெட்டைப் பொறுத்தவரையில் ‘guillotine’ என்றால் என்ன?
பதில் :- பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாட்களில் பல்வேறு துறை களின் நிதித் தேவைகளை (Demands for grants) முறையான விவாதம் இல்லாமல் ஒட்டு மொத்தமாக அவைகள் அனுமதி அளிப்பது கில்லட்டின் என்றழைக்கப்படும்.
கேள்வி 13. மக்களவை வேறு என்னென்ன வகையான செலவுகளுக்கு அனுமதி தரலாம்?
பதில் :- வரையறுத்துக் கூற முடியாத தன்மையுள்ள சேவைக்கும், எந்த நிதி ஆண்டும் சம்பந்தப்படாத ஒரு சேவைக்கும் அனுமதி தரலாம் (பிரிவு 116).
கேள்வி 14. பட்ஜெட்டைப் பொறுத்தவரையில் ‘guillotine’ என்றால் என்ன?
பதில் :- பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாட்களில் பல்வேறு துறை களின் நிதித் தேவைகளை (Demands for grants) முறையான விவாதம் இல்லாமல் ஒட்டு மொத்தமாக அவைகள் அனுமதி அளிப்பது கில்லட்டின் என்றழைக்கப்படும்.