Emergency Provisions(352-360)

பகுதி – 18

அவசர நிலை வகையங்கள் (Emergency Provisions)

பிரிவுகள் 352-360)

கேள்வி 1. அரசியலமைப்புச் சட்டம் விவரிக்கும் அவசர நிலைகள் யாவை?

பதில் :-

தேசிய அவசர நிலை (National Emergency) (பிரிவு 352), அரசியல் சட்ட ரீதியாக மாநிலங்கள் நிர்வாகம் நடத்த இயலாத நிலை (Failure of Constitutional Machinery in a State) (பிரிவு 356) மற்றும் நிதி நெருக்கடி (Financial Emergency) (பிரிவு 360) ஆகும்.

கேள்வி 2. அவசர நிலை யாரால் பிரகடனம் (Proclamation) செய்யப் படும்?

பதில் :- குடியரசுத் தலைவரினால்.

கேள்வி 3.எந்ததெந்தக் காரணங்களுக்காக அவசர நிலை கொண்டு வரப்படலாம்?

பதில் :-

போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு (External Aggression) அல்லது ஆயுதந் தாங்கிய கலவரம் (Armed Rebellion) இவைகளி னால் இந்தியாவோ, இந்தியாவின் ஒரு பகுதியோ கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குடியரசுத் தலைவர் ஒரு முடிவுக்கு வந்தால் இந்தியா முழுமைக்கும் அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கும் மட்டும் அவசர நிலை பிரகடனம் (Proclamation of Emergency) செய்யலாம்.
போர். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, தீவிரக் கலவரம் வருவ தற்கு முன்னால் கூட அதன் அறிகுறிகளை நோக்கி அத்தகைய ஆபத்து உள்ளது எனக் குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம்.

ஒரு பிரகடனத்தை மாற்றியமைக்கவோ அல்லது நீக்கவோ அடுத்த பிரகடனத்தால் செய்யலாம்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பம் போன்றவை களால் ஒரு மாநிலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது மத்திய அரசின் கடமையாகும்.

கேள்வி 4. குடியரசுத் தலைவர் சுயமாகவே அவசர நிலை பிரகடனம் செய்ய முடியுமா?

பதில் :-

இல்லை. பிரதம மந்திரியும் அமைச்சர் குழுவும் (Cabinet) அவசர நிலை இருப்பதாக முடிவு எடுத்து அதை எழுத்து மூலமாகக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்த பின்புதான் குடியரசுத் தலைவர் அவசர நிலை பிரகடனம் செய்ய முடியும்.

கேள்வி 5. அவசர நிலை பிரகடனத்துக்குப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையா?

பதில் :-

ஆம். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஒரு மாதத் துக்குள் பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் தீர்மானம் வழியாகத் (By Resolutions) தேவை. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில் மக்களவை கலைக்கப்பட்டிருந்தாலோ பிரகடனம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள் மக்களவை சுலைக்கப் பட்டாலோ மக்களவை கூடிய பின்பு ஒரு மாதத்துக்குள் அதன் ஒப்புதல் பெற வேண்டும். மாநில அவை (Rajya Sabha) ஒரு நிரந்தர அமைப்பாதலால் ஒரு மாதத்துக்குள் அதன் ஒப்புதலோ அல்லது எதிர்மாறான முடிவோ தெரிந்து விடும். இரண்டாவது அவையின் தீர்மான நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு அவச நிலை அமலில் இருக்கும். இதே முறையைப் பின்பற்றி ஆறாறு மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கலாம்.

அவைகளில் கொண்டு வரப்படும் தீர்மானம் அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோராலும், அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றுக்கு இரண்டு பேராலும் ஆதரிக்கப் பட வேண்டும்.

கேள்வி 6. ஓர் அவசர நிலைப் பிரகடனம் செயலில் இருக்கும் பொழுது மற்றொரு பிரகடனம் செய்ய முடியுமா?

பதில் :-

ஆம். வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு அவசர நிலைப் பிரகடளம் ஒரே நேரத்தில் செய்யப்படலாம்.

கேள்வி 7. அவசர நிலை எவ்வாறு ரத்து செய்யப்படலாம்?

பதில் :-

அவசர நிலை நீட்டிக்காத வரையில் குறிப்பிட்ட ஆறு மாதங்கள் முடியும் பொழுது தானாகவே ரத்து செய்யப்படும். அல்லது மக்களவையின் ஒப்புதலுடன் வரும் தீர்மானத்தின் அடிப் படையில் குடியரசுத் தலைவர் அவசர நிலை ரத்து செய்வார்.

மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட, அவையின் உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கேள்வி 8. அவசர நிலைப் பிரகடனத்தின் விளைவுகள் யாவை?

பதில் :-

a) மத்திய அரசு நிர்வாகத்திலிருந்து எந்த மாநில நிர்வாகத் துக்கும் இந்த மாதிரி நிர்வாகம் பண்ண வேண்டும் என்று எடுத் துரைக்கலாம்.

b) ஒன்றியப் பட்டியலில் (Union List) இல்லாத விஷயங்கள் மீதும் வரி விதிக்கவோ அல்லது அதற்கு இணையான அதிகாரங்கள் கொள்ளவோ மத்திய அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு வழி செய்ய பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கும்.

C) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரும் வருவாயை இருவருக்கிடையில் பகிர்ந்தளிக்கும் முறையில் (Distribution of Revenges) மாறுதல் செய்ய அவசர நிலைப் பிரகடனக் காலத்தில் (நிதி ஆண்டு முடியும் வரையில்) குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதற்கான உத்தரவை, உத்தரவு பிறப்பித்த பின்பு மிக விரைவில் பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
d) அவசர நிலை அமலில் இருக்கும் பொழுது மக்களவை யின் பதவிக் காலத்தை ஒவ்வொரு ஆண்டாக நீட்டிக்கலாம். ஆனால் அவசர நிலை முடிந்த ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது. (பிரிவு 83-2).

கேள்வி 9. அவசர நிலை அமுலில் இருக்கும் பொழுது அடிப்படை உரிமைகளின் நிலை என்ன?

பதில் :-

போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் அவசர நிலை அமலில் இருக்கும் பொழுது சுதந்திர உரிமைகள் (பிரிவு 19) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம். இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் அவசர நிலை இருக்கும் பொழுது, அப்பகுதியில் நடக்கும் செயல்களுக்கு ஆதரவாக அவசர நிலை இல்லாத ஒரு பகுதியிலிருந்து செயல்பட்டால் அங்கும் சுதந்திர உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

பகுதி 3இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் (பிரிவு 20 மற்றும் 21 தவிர) மீறல்களைக் குறித்து நீதிமன்றங் களுக்குச் செல்ல முடியாது. ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்குகள் அவசர நிலை அமலில் இருக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும்.

கேள்வி 10. மாநில அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு உண்டாள அதிகாரங்கள் யாவை?

பதில் :-

பிரிவு 356 இதைப் பற்றி விளக்கம் அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டப்படி நடக்க இயலாமல் இருக்கின்றது என அந்த மாநில ஆளுநரின் அறிக்கை மூலமாகவோ அல்லது மற்றபடியாகவோ குடியரசுத் தலைவர் அறிந்து அந்தக் கருத்துக்கு இசைந்தால் அந்த மாநிலத்தில் பிரகடனம் மூலமாக:

1) அந்த மாநில அரசின் குறிப்பிட்ட அல்லது எல்லா அதிகாரங்கள் மற்றும் ஆளுநரால் செயல்படுத்தக் கூடிய குறிப்பிடப்பட்ட அல்லது எல்லா அதிகாரங்களையும் தானே எடுத்துக் கொள்ளலாம்;
a)அந்த மாநில அவைகளின் அதிகாரங்கள் அனைத்தை யும் நாடாளுமன்றத்தால் அல்லது அதன் அதிகாரம் பெற்றவர்களால் செயல்படுத்தப்படும் என அறிவிக்கலாம்.

ஆ) மேல் கூறியவற்றைச் செயல்படுத்தும் மூலமாக அந்த மாநிலத்தின் ஓர் அமைப்பையோ அல்லது நிறுவனத் தையோ பொறுத்த வரையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையையோ அல்லது ஒரு பகுதியையோ தற்காலிகமாக செயல்படுத்த இயலாது என நிறுத்தி வைக்கலாம். குறிப்பாக மாநில அவையைக் அலைக்கலாம் அல்லது செயல்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

ii) இந்த பிரகடனத்தால் அந்த மாநிலத்திலுள்ள உயர்நீதி மன்றத்தின் எந்த அதிகாரங்களும் பாதிக்கப்படாது. iii) இந்த மாதிரிப் பிரகடனங்களுக்கு எல்லாம் இரண்டு மாதத்திற்குள் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்; ஒப்புதல்அளித்த பின்பு பிரகடனம் அறிவித்த நாளிலிருந்து ஆறு மாத காலம் வரை அது செயல் முறையில் இருக்கும். ஆறாறு மாதங்கனாக மூன்றாண்டுகள் வரை பிரகடனம் நீடிக்கப்படலாம்.ஆனால் பாராளுமன்றம் ஓராண்டுக்கு மேல் பிரகடனத்தை நீடிக்க வேண்டுமானால் ஒன்று அந்த மாநிலத்தின் முழுமைக்கோ அல்லது ஒரு பகுதியிலோ அல்லது இந்தியா முழுமைக்கோ அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றொன்று அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்துவது சிரமமாக உள்ளது; அதனால் பிரகடனம் தொடர வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் சான்று தர வேண்டும்.

iv) ஒரு பிரகடனத்தில் மாற்றம் செய்யவோ அல்லது அதை நீக்கவோ (Revocation) மற்றொரு பிரகடனத்தால் செய்யலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசிலிருந்து அனுப்பப்படும் ஆணைகளை மாநிலங்கள் நிறை வேற்றத் தவறினால் அம்மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் வழி ஆட்சி நடத்த இயலவில்லை எனக் குடியரசுத் தலைவர் கருதி அதற்கான செயல்முறைகளைப் பின்பற்றலாம்.

கேள்வி 11. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் மற்ற அம்சங்கள் யாவை?

பதில் :-

மாநிலத்தில் வரி விதிக்கவும், மாநில ஒருங்கிணைந்த நிதிழு லிருந்து செலவழிக்கவும் பாராளுமன்றம் சட்டம் மூலமாக வழி வகை செய்யலாம். பாராளுமன்றம் கூடாத சமயங்களில் குடியரசுத் தலைவரே தற்காலிகமாக நிதி ஒதுக்கீடு செய்யலாம்.

கேள்வி 12. எஸ்.ஆர். பொம்மை வழக்கின் (1994) 3SCCI முக்கியத்துவம் என்ன?

பதில் :-

கர்நாடகா முதலமைச்சராக இருந்த பொம்மையின் அமைச்ச ரவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்ததை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம், பிரிவு 356ஐ உபயோகப் படுத்தும் பொழுது கவனிக்க வேண்டியவைகளைப் பற்றி விளக்கமாகத் தீர்ப்பளித்தது. பிரிவு 356இல் கொடுக்கப்பட் டிருக்கும் அதிகாரம் தனித்துவம் வாய்ந்தது. அது மிகவும் அரிதாக உபயோகிக்கப்பட வேண்டும். மாநில அமைச்சரவை யைக் கலைக்க உத்தரவிடும் ஆணையைப் பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளிக்குமுன் மாற்ற முடியாத செயல்கள் {Irreversible Actions) எடுக்கக் கூடாது. பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தாலும் நீதிமன்றங்கள் அமைச்சரவைக் கலைப்பை வழக்குகள் மூலமாக மறு ஆய்வு செய்யலாம்.

நிர்வாக ஒழுங்கீனம், ஊழல், நிதி நெருக்கடி போன்ற காரணங் களால் அமைச்சரவையை நீக்க முடியாது. ஆளுகின்ற கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கும் பொழுதும், கீழவையில் அமைச்சரவை வாக்கெடுப்பில் தோற்காத வரையிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படாது. மாநிலத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தோற்றாலும் ஆட்சி கலைக்கப்பட மாட்டாது.

கேள்வி 13.நிதி நெருக்கடி (Financial Emergency) எப்பொழுது பிரகடனம் செய்யப்படலாம்? அதன் விளைவுகள் யாவை?

பதில் :-

இந்தியா முழுமையிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ நிதியின் நிலைப்பாட்டிலோ அல்லது நம்பகத் தன்மையிலோ,பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் குடியரசுத் தலைவர் ஒரு முடிவுக்கு வந்தால் இந்தியாவின் முழுமைக்கோ ஒரு பகுதியிலோ நிதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம் (பிரிவு 360). பிரகடனம் செய்யப்பட்ட இரு மாதங்களுக்குள் பாராளுமன்ற இரு அவை களின் ஒப்புதல் பெற வேண்டும். மக்களவை ஏற்கெனவே கலைக்கப்பட்டிருந்தாலோ அல்லது இந்த இரு மாதங்களுக்குள் கலைக்கப்பட்டாலோ புதிய மக்களவை மாதத்துக்குள் அதன் ஒப்புதல் தேவை. கூடிய மேற்படி பிரடகனத்தால் ஏற்படும் விளைவுகள்:

மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய நிதிக் கொள்கைகள் பற்றி மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கட்டளையிடலாம். இது ஊழியர்களின் ஊதியத்தைக் குறைப்பன பற்றியும் இருக்கும். பண மசோதாக்கள் சட்ட சபைகளில் கொண்டு வருமுன் குடியரசுத் தலைவரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் கூறலாம். இதே போன்று மத்திய அரசும் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரு பகுதியினர் ஊதியத்தைக் குறைக் கலாம். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் கூடக் குறைக்கப்படலாம்.

கேள்வி 14.இந்தியக் குடியரசில் தேசிய அவசர நிலை இதுநாள் வரை எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளன?

பதில் :-

மூன்று முறை. 1962 (இந்திய-சீனாப் போர்). 1971 (இந்திய பாகிஸ்தான் போர்) மற்றும் 1975 (உள்நாட்டுக் குழப்பம்). இந்திய – சீனாப் போரை ஒட்டி 1962இல் கொண்டு வரப்பட்ட அவசர நிலை 1968 ஜனவரி 10ஆம் தேதி வரை நீடித்திருந்தது.

கேள்வி 15, நிதி நெருக்கடி நிலை இது நாள் வரை அறிவிக்கப்பட்டுள்ளதா?

பதில் :- இல்லை.

மேலும் படிக்க…

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply