உறுப்பினர்கள் தகுதி இழப்பு (பிரிவுகள் 190-193)
கேள்வி 1. ஒருவர் மாநிலங்களின் இரு அவைகளிலும் ஒரே நேரத்தில் உறுப்பினராகச் செயல்பட முடியுமா?
பதில் :-
முடியாது. ஒருவர் இரு அவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓர் அவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அதே மாதிரி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங் களில் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியாது.
கேள்வி 2. அவையின் அனுமதி இன்றி ஓர் உறுப்பினர் அவை நடவடிக்கை களில் கலந்து கொள்ளாமல் எத்தனை நாள் இருக்கலாம்?
பதில் :-
அறுபது நாட்கள். நான்கு நாட்களுக்கு மேல் அவை ஒத்தி போடப்பட்டிருந்தால் அந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 3. உறுப்பினர் தகுதியை ஒருவர் இழப்பது எவ்வாறு?
பதில் :-
மத்திய அரசு, மாநில அரசுகளில் ஊதியம் பெறக் கூடிய பதவி வகித்தாலோ, மனநிலை சரியில்லாதவர் என்று நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டாலோ, நொடிப்பு நிலையராக இருந்தாலோ உறுப்பினர் பதவியை இழப்பார். அதே மாதிரி இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டாலும், தானே விரும்பி மற்ற நாட்டுக் குடிமகனாக மாறினாலும், அயல்நாட்டிற்கு விசுவாசத்துடன் இருந்தாலும், நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு சட்டப்படி தகுதி அற்றவராக இருந்தாலும் தனது உறுப்பினர் பதவியை இழப்பார். பத்தாவது அட்டவணைப்படியும் ஒருவர் கட்சித் தாவல் செய்யும் பொழுது பதவியை இழப்பார்.
ஓர் உறுப்பினர் பதவியிலிருந்து தானே விலகிக் கொள்வதாக அவைத் தலைவருக்கு மடல் எழுதி, உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் தீர ஆய்ந்த பின்பு பதவி விலகல் மடல் தாமாகவே முன் வந்து அளித்தது அல்ல என்ற முடிவுக்கு அவைத் தலைவர் வந்தால் பதவி விலகல் மடல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 4. அவை உறுப்பினர் பதவிக்குத் தகுதி அற்றவர் என முடிவு செய்பவர் யார்?
பதில் :-
தேர்தல் ஆணையத்தைக் கலந்தாலோசித்து ஆளுநர் முடிவு செய்வார்.அவைகளின் மற்றும் உறுப்பினர்களின்
தனிச் சலுகைகள் (பிரிவுகள் 194-195) தனி வகுத்துள்ள விதிமுறைகள் வரையறைக்குட்பட்டும் உறுப்பினர்
களுக்கு அவைகளில் முழுப் பேச்சுரிமை உள்ளது.
1. மாநில அவைகளின் உறுப்பினர்களுக்குண்டான உரிமைகள் (Special Privileges) என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், அவைகள்
அவைகளில் பேசியவற்றை வைத்தோ, வாக்குரிமை அளித்த விதம் பற்றியோ உறுப்பினர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டமன்ற அதிகாரத்துடன் வெளியிடப்படும் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாது.
உறுப்பினர்களின் ஊதியம், படிகள் பற்றி அவைகளே நிர்ணயித்துக் கொள்ளும்.
சட்டமியற்றும் முறை (Legislative Procedure)
(பிரிவுகள் 196-201)
கேள்வி 1. மாநில அவைகளில் மசோதாக்கள் கொண்டு வரும் முறை பற்றி விவரி.
பதில் :-
பண மசோதாக்கள் மாநிலங்களின் கீழ் அவையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும். மற்ற மசோதாக்கள் மாநிலங்களின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் கொண்டு வரப்படலாம். மசோதாக்கள் (Bills) அரசாலும், தனிப்பட்ட உறுப்பினர்களாலும் கொண்டு வரப்படலாம். ஒரு மசோதா சட்டமாவதற்கு இரு மன்றங்கள் இருந்தால், இரண்டின் ஒப்புதலும் தேவை. சட்டமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் (Due to Prorogation) நிலுவையிலுள்ள மசோதாக்கள் செயல் இழக்காது. ஆனால் சட்டமன்றம் கலைக்கப்பட்டால் சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு மேலவையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள், சட்டமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள், செயல்திறன் இழக்கும். ஆனால் மூதல் நிலையில் மேலவையில் நிலுவையுடன் இருக்கும் மசோதாக்கள் செயல்திறன் இழக்காது.
கேள்வி 2. பண மசோதா தவிர மற்ற மசோதாக்களில் மேலவையின் அதிகாரங்கள் யாவை?
பதில் :-
சட்ட மன்றத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு மசோதா மேலவைக்கு வந்தால், மேலவை அதற்கு ஒப்புதல் தரலாம் அல்லது மறுக்கலாம் அல்லது திருத்தங்களுடன் ஒப்புதலைத் தெரிவிக்கலாம். ஆனால் மூன்று மாதங்களுக்குள் ஒப்புதலைப் பற்றி தனது மூடிவைத் தெரிவிக்க வேண்டும். இதன் பின் அந்த மசோதாவை மேலவை குறிப்பிட்ட திருத்தங்களை அனுமதித்தோ அனுமதிக்காமலோ கீழவை ஒப்புதல் அளித்து இரண்டாம் முறையாக மேலவைக்கு அனுப்பலாம். மேலவை மறுபடியும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தாலோ, ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கத் தவறினாலோ, திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்தாலோ சட்டமன்றம் இரண்டாவது தடவையாக அனுப்பிய வடிவுடன் மேலவையின் எந்தெந்த திருத்தங்களுக்கு சட்ட மன்றமும் உடன்பாடாக உள்ளதோ அந்தத் திருத்தங்களுடன் சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெற்று வழிமுறைகளின்படி சட்டமாகும்.
கேள்வி 3. பண மசோதா என்றால் என்ன?
பதில் :-
கீழ்க்கண்ட விஷயங்களில் எல்லாவற்றையும் அல்லது ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ கொண்டு விளங்குவது பண மசோதா ஆகும்.
வரி விதிப்பது, நீக்குவது, குறைப்பது, மாற்றி அமைப்பது அல்லது ஒழுங்குபடுத்துவது; அரசு கடன் வாங்குவது, காப்பு (Guarantee) அளிப்பது, அரசின் நிதி பற்றிய கடமைகளின் சட்டங் களைத் திருத்துவது எதிர்பாராச் செலவுகளின் நிதி – இவற்றைப் பாதுகாப்பதும், இவை பற்றியன; ஒருங்கிணைந்த நிதி, இவற்றிலிருந்து பணம் எடுப்பதும், இவற்றில் பணம் சேர்ப்பதும் பற்றியன: ஒருங்கிணைந்த நிதியிலிருந்து துறைகளுக்குப் பணம் எடுத்தல்; ஒதுக்கப்பட்ட நிதியின் வரையறையில் மாற்றம் செய்தல் போன்றன.
கேள்வி 4 .பண மசோதாவைப் பற்றிய சிறப்பம்சங்கள் யாவை?
பதில் :-
பண மசோதா கீழவையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.
கிழவை ஒப்புதல் அளித்த பின்பு பணமசோதா மேலவையின் பரிந்துரைக்காக அனுப்பப்படும். பதினான்கு நாட்களுக்குள் மேலவை தங்களது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். மசோதாவை முழுமையாகவோ, ஒரு பகுதியையோ ஏற்கவோ மறுப்புத் தெரிவிக்கவோ மேலவை செய்யலாம். ஆனால் மேலவையின் பரிந்துரைகளை முழுமை யாகவோ ஒரு பகுதியையோ ஏற்கவோ மறுக்கவோ கிழவைக்கு அதிகாரம் உண்டு. கீழவை விரும்பியவாறே பண மசோதா சட்டமாகும். மேலவை பதினான்கு நாட்களுக்குள் தனது பரிந்துரையை அனுப்பா விட்டாலும் கீழவை விரும்பியவாறே சட்டமாகும்.
i) ஒரு மசோதா பணமசோதாவா எனத் தீர்மானிப்பவர் கீழவைத் தலைவரே; அவர் சான்றிதழ் தந்த பின்னரே மேலவைக்கோ அல்லது ஆளுநருக்கோ பணமசோதா அனுப்பப்படும்.
iv) ஆளுநரின் பரிந்துரையுடன் தான் பணமசோதா அவையில் கொண்டு வரப்பட வேண்டும்.
கேள்வி 5. மசோதாக்களைப் பொறுத்த வரையில் ஆளுநரின் அதிகாரங்கள் யாவை?
பதில் :-
அவைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்குப் பின்பே சட்டமாகும்.தனக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதல் தருவதை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஒரு மசோதா அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வழியில் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தில் மாறுதல் ஏற்படுத்தும் என்று ஆளுநர் கருதினால் இத்தகைய மசோதாக்களை குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கு அனுப்பலாம். பொதுவாக ஒரு மசோதா மைய அட்டவணையில் உள்ள விஷயங்களைத் தொட்டுச் செல்வதாக ஆளுநர் கருதினாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புலாம்.
பண மசோதாவைத் தவிர மற்ற மசோதாக்களாக இருக்கும் பட்சத்தில் ஆளுநர் மசோதாவை செய்திகளுடன் மாநில அவைகளுக்கு மறு ஆய்வு செய்வதற்கு திருப்பி அனுப்பலாம். மசோதாவைத் திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலேயோ மாநில அவைகள் ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்க மாட்டார்.
குடியரசுத் தலைவர் தனக்கு அனுப்பப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறலாம் அல்லது பண மசோதாவைத் தவிர மற்ற மசோதாக்களாக இருக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் மசோதாக்களை செய்திகளுடன் மாநில அவைகளுக்கு மறு ஆய்வு செய்வதற்கு திருப்பி அனுப்புமாறு ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; திருப்பி அனுப்பப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மசோதாக்களைத் திருத்தங்களுடனோ திருத்தங்கள் இல்லாம லேயோ மாநில அவைகள் ஒப்புதல் அளித்து ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் மறு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.
நிதி பற்றிய நடைமுறைகள் (பிரிவுகள் 202-207)
கேள்வி 1. ஆண்டு வரவு செலவு அறிக்கை (பட்ஜெட்)யில் பொது வாகக் குறிப்பிடப்படுவன யாவை?
பதில் :-
குறிப்பிடப்பட்ட ஆண்டில் மாநில அரசால் எதிர்பார்க்கப்படும். வரவு செலவினங்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கி யிருக்கும்.
மாநில ஒருங்கிணைந்த நிதி (Consolidated Fund of the State) மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி (Charged Expenditure)யில் செய்ய விருக்கும் செலவினங்களின் விவரங்கள் இருக்கும். அவசர கால நிதி (Contingency fund) பற்றிய விவரமும் இருக்கும்.
மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) வருவாய் செலவினங்கள் (Revenue Expenditure) பற்றிய விவரங்கள் தனித் தனியாகக் கொடுக்கப்படும். உள் கட்டமைப்புச் செலவுகள் (Infrastructure Development) மூலதனச் செலவினங்களில் வரும். அன்றாடச் செலவுகள் (ஊதியம் மற்றப் படிகள் போன்றன) வருவாய் செலவினங்கள் (Revenue Expenditure) ஆகும்.
கேள்வி 2. ஒதுக்கப்பட்ட நிதியில் (Charged Expenditure) காட்டப்படும் செலவினங்கள் யாவை?
பதில் :-
அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஓட்டெடுப்பு மூலம் அவையின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் சில அமைப்புகளின் சுதந்திரத் தன்மையைக் கருதி அவைகளுக்கு உண்டான செலவினங்களை ஓட்டெடுப்புக்கு உட்படுத்தாமல் அவைகள் ஒப்புதல் அளிக்கும். இவை ஒதுக்கீட்டுச் செலவினங்கள் எனப்படும். ஆளால் இச்செலவினங்களைப் பற்றி அவையில் கருத்துரையாடல்கள் நடத்தலாம். ஒதுக்கப்பட்ட குறிப்பிடத்தக்கன: நிதியில் காட்டப்படும் செலவினங்களில்
1) ஆளுநரின் ஊதியம் அவரது அலுவலக செலவினங்கள்;
(ii) கீழவைத் தலைவர், உதவித் தலைவர். மேலவைத் தலைவர், உதவித் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருடைய ஊதியம், படிகள் முதலியன;
(iii) மாநில அரசுகள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்கள்; iv) நீதிமன்றங்கள் அல்லது அதற்கு இணையான அமைப்புகள் வழங்கும் தீர்ப்புகளின் அடிப்படையில் செய்ய வேண்டிய செலவினங்கள் போன்றன.
கேள்வி 3. ஆண்டு வரவு செலவு அறிக்கை பொதுவாக எவ்வாறு கொண்டு வரப்படுகிறது?
பதில் :-
ஒன்றோ பல துறைகளுக்கோ சேர்ந்து ஒரு நிதித் தேவை (Demand for grant) இருக்கும். ஆளுநரின் பரிந்துரையின் படியேvநிதித் தேவை அவையில் கொண்டு வரப்படும். அரசுக்குத் தேவை யான நிதியை ஒதுக்கீட்டு மசோதா மூலமாகப் (Appropriation bill) பெற வேண்டும்.
நிதி ஆண்டு நடக்கும் பொழுது துறைகளுக்கு அதிகப்படியாக நிதி தேவைப்பட்டால், அவைகள் மூலமாகத் தான் பெற வேண்டும். மிகவும் அவசரமான காலத்தில் துறையில் நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் அவசர கால நிதியிலிருந்து (Contingency fund) எடுத்துக் கொள்ளலாம். பின் அவையின் ஒப்புதல் பெற்று, அந்த நிதியைத் திரும்ப அவசர கால நிதியில் சேர்க்கலாம்.
கேள்வி 4. ஒதுக்கீட்டு மசோதாவுக்கும் (Appropriation Bill) நிதி மசோதாவுக்கும் (Finance Bill) உண்டான முக்கியமான வேற்றுமை யாது?
பதில் :-
துறைகளுக்கு வேண்டிய செலவினங்களுக்காக ஒருங் கிணைந்த நிதியிலிருந்து சட்டம் மூலமாக ஒதுக்கீடு செய்ய வழி வகுப்பது ஒதுக்கீட்டு மசோதா ஆகும். வரி விதிப்பது; நீக்குவது; கடன் வாங்குவது, பொது நிதி (Public Account) நிர்வகிப்பது போன்றவை நிதி மசோதாவில் உள்ளடங்கும். 5. பகுதி நிதி அளித்தல் (Vote on Account) என்றால் என்ன? பொதுவாக வரவு செலவு அறிக்கை (பட்ஜெட்) பிப்ரவரி திங்கள் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படும். அவைகள் தீராய்வு செய்து தங்களது ஒப்புதலைத் தர மே மாதம் ஆகி விடும். ஆதலால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குண்டான செலவுகளைச் செய்ய அவைகள் தற்காலிகமாக அரசு நிர்வாகத் துக்கு ஒப்புதல் அளிக்கும். இது பகுதி நிதி அளித்தல் எனப்படும்.
கேள்வி 6. பண மசோதாக்களின் சிறப்பம்சங்கள் யாவை?
பதில் :-
பண மசோதாக்கள் மாநிலங்களின் கீழவையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும். ஆளுநரின் பரிந்துரையுடன் தான் மசோதா கொண்டு வரப்பட வேண்டும். ஒரு மசோதா, பண மசோதாவா இல்லையா என்பதை முடிவு செய்பவர் கீழவைத் தலைவர் ஆவார்.
மேலும் படிக்க…