பல்வகைத் திறத்தன Miscellaneous

பகுதி – 19

பல்வகைத் திறத்தன (Miscellaneous)

(பிரிவுகள் 361-367)

கேள்வி 1. பகுதி 19 இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் யாவை?

பதில் :-

* குடியரசுத் தலைவரோ ஆளுநரோ தங்களுடைய பதவி காரணமாக ஆற்றிய கடமைகளுக்காகவும் அல்லது அதிகாரங்களை செயல்படுத்தியதற்காகவும் எந்த நீதிமன்றத்திலும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்லர்.

அதே நேரத்தில் பிரிவு 61இன் படி குடியரசுத் தலைவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் தருணத்தில் நீதி மன்றங்கள் தலையிடலாம். குடியரசுத் தலைவரோ அல்லது ஆளுநரோ அப்பதவி வகிக்கும் காலத்தில் அவர்கள் மீது குற்றவியல் சம்பந்தமான நடவடிக்கைகள் நீதிமன்றங்களில் எடுக்கவோ தொடரவோ முடியாது. ஆனால் உரிமையியல் (Civil) வழக்குகளைத் தொட்டு. முன் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே இது பற்றிய முழு விவரங்களையும் குடியரசுத் தலைவருக்கோ ஆளுநருக்கோ தெரிவிக்க வேண்டும்.

*குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பதவி வகிக்கும் காலத்தில் அவர்களைக் கைது செய்யவோ சிறைப் படுத்தவோ எந்த நீதிமன்றமும் ஆணை பிறப்பிக்க முடியாது.
* பாராளுமன்றம் மற்றும் மாநிலக் கீழ் அவை உறுப்பி னர்கள் பத்தாவது பட்டியலின் அடிப்படையில் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் பொழுது வருவாய் தரும் வேறு எந்த அரசியல் பதவியையும் தனது பதவிக் காலம் முடியும் வரையில் அல்லது மறுபடி தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் வகிக்க முடியாது.

* மத்திய, மாநில அரசுச் சட்டங்களுக்கு உட்படுத்தாமல் அல்லது அந்தச் சட்டங்களிலிருந்து மாறுபட்ட வகையங் களை, பெரிய துறைமுகங்கள், விமான நிலையங்களுக்கு தனிப்பட்ட விதிமுறைகள் குடியரசுத் தலைவர் கொண்டு வரலாம்.

* இந்தியா சுதந்திரம் அடையும் முன்னால் இந்திய அரசுக்கும் மன்னர்களுக்குமிடையில் நடந்த உடன்படிக்கை, ஒப்பந்தம் அல்லது உறுதிப்பாடுகளின் செயல்முறை பற்றிய விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது.

* பாராளுமன்ற, சட்டமன்ற நிகழ்ச்சிகளை அவதூறாக இன்றி கணிசமான அளவில் உண்மையுடன் செய்தித் தாள்களில் வெளியிடுவது மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. ஆனால் அவைகளில் நடக்கும் இரகசியமான கூட்டங்களின் நிகழ்ச்சிகளை வெளியிடுவ தற்கு இது பொருந்தாது.

கேள்வி 2. மன்னர் மானியம் எந்த திருத்தத்தால் ஒழிக்கப்பட்டது?

பதில் :- 26ஆவது திருத்தம் (1971).

பகுதி – 20

அரசியல் சட்டத் திருத்தம்

(Amendment of the Constitution

(பிரிவு 368)

கேள்வி 1. அரசியல் சட்டத்தைத் திருத்த யாருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது?

பதில் :-

பாராளுமன்றத்திற்கு.

கேள்வி 2. அரசியல் சட்டத்திருத்த பொதுவான முறை யாது?

பதில் :-

பாராளுமன்ற இரு அவைகளில் ஏதாவதொன்றில் சட்டத் திருத்த முன் வடிவு கொண்டு வரப்படலாம். அவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையாராலும், அவைகளி லிருந்து ஓட்டளிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களாலும் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும். இரண்டு அவைகளும் ஒப்புதல் அளித்த பின்பு. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்பு திருத்தம் சட்டமாகும்.

கேள்வி 3. எந்தெந்த வழிமுறைகளால் திருத்தங்களால் செய்யப்படலாம்?

பதில் :-

அரசியல் சட்டத்திருத்தங்கள் மூன்று வழிமுறைகளால் செய்யப்படலாம்.

அவைகள்:

a) சாதாரணப் பெரும்பான்மையுடன்: அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளைச் சாதாரணப் பெரும்பான்மையுடன் சட்டமாக்கலாம். எடுத்துக்காட்டாக மாநிலங்களில் மேலவை (egislative Councily ஏற்படுத்தவோ கமைக்கவோ (பிரிவு 169), மத்திய அரசு நேராட்சிப் பகுதிகளில் அவைகள் (Legislature) அல்லது அமைச்சர் குழு (Council of Ministers) ஏற்படுத்தவோ (பிரிவு 239அ) சாதாரணப் பெரும்பான்மையுடன் சட்டத்திருத்தம் செய்யப்படலாம். இத்தகைய திருத்தங்கள் பிரிவு 368இன் கீழ் வராது என்று அரசியல் சட்டமே குறிப்பிடுகிறது.

b) 2/3 பங்கு பெரும்பான்மையுடன்: அவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையராலும் அவைகளிலிருந்து ஓட்டளிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறை யாத உறுப்பினர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

c) மாநிலங்கள் அனுமதியுடன் மட்டுமே செய்யக் கூடிய திருத்தங்கள்: அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் செயலாக்கத்தில் மாநிலங்களுக்கு அதிக பங்குள்ளது. இத்தகைய பிரிவுகளைத் திருத்த வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் ஒப்புதலைத் தவிர பாதிக்குக் குறையாத மாநிலங்களிலுள்ள கீழ் அவைகளின் (State Assemblies) ஒப்புதலும் வேண்டும். அந்தப் பிரிவுகள் பின்வருமாறு:

குடியரசுத் தலைவர் தேர்தல் முறைகள் (பிரிவுகள் 54&55); ஒன்றியத்தின் நிர்வாக வரையறை (பிரிவு 73); மாநிலங்களின் நிர்வாக வரையறை (பிரிவு 162); மத்திய அரசு ஆட்சிப் பகுதிகளுக்கு உயர்நீதிமன்றங்களின் வரையறைகளை விரிவுபடுத்துதல் (பிரிவு 241).

* உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மத்திய மாநில அரசு களின் சட்டம் இயற்றும் உறவுகள்.

*ஏழாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் (Lists)

*பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும்

* 368ஆம் பிரிவில் கொடுக்கப்பட்ட விஷயங்கள்.

கேள்வி 4. அரசியல் சட்டத்திருத்தங்களுக்கும் பாராளுமன்றம் இயற்றும் மற்ற சட்டங்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன?

பதில் :-

பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதலுக்குச் செல்லும் மற்ற மசோதாக்களை (சட்ட முன் வடிவு) குடியரசுத் தலைவர் மறுபரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம்; அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி (Withholding. the Assent) வைக்கலாம். ஆனால் அரசியல் சட்டத்திருத்தங்களுக்குக் குடியரசுத் தலைவர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்.

இதைத் தவிர அரசியல் சட்டத் திருத்தங்கள் அவைகள் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு (Joint Sitting of both the houses) அனுப்பப்பட மாட்டாது.

கேள்வி 5. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களைப் பற்றிய நீதிமன்றங் களின் நிலை என்ன?

பதில் :-

சங்கரி பிரசாத் வழக்கிலும் (AIR 1951 SC 458) சஜ்ஜன்சிங் வழக்கிலும் (AIR 1965 SC 845) பாராளுமன்றத்திற்கு 368ஆம் பிரிவின் அடிப்படையில் அரசியல் சட்டத்திருத்தங்கள் செய்ய முழு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கோலக்நாத் (Golak Nath) வழக்கில் (AIR 1967 SC 1643), 6:5 என்ற விகிதத்தில் மாறான தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டம் பாகம் 3இல் கூறியுள்ள அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை; பிரிவு 368இல் கூறி யிருப்பவை: சட்டத்திருத்தங்கள் செய்வது பற்றிய வழிமுறைகளே யன்றி, பாராளுமன்றத்திற்கு இந்தப் பிரிவின் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் எல்லாப் பகுதிகளையும் திருத்த அதிகாரம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல் சட்டத் திருத்தங்களும், பிரிவு 13(2)இன் அடிப்படையில் ஒரு சட்டம் (Law) என்பதாகவே உள்ளது. இதன் விளக்கம் சட்டத்திருத்தங் களையும் நீதி மன்றங்கள், நீதி மறுஆய்வு (Judicial Review) செய்யலாம் என்பதாகும்.
1973இல் உச்சநீதிமன்றம், கேசவானந்தபாரதி வழக்கில் (ARR 1973 SC 1461) கோலக் நாத் முடிவை மறு ஆய்வு செய்தது. கோலக்நாத் முடிவுக்கு மாறாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி பிரிவு 368இல் குறிப்பிடப்படும் அரசியல் சட்டத்திருத்தங்கள், பிரிவு 13இல் குறிப்பிடப்படும் சட்டங்கள் அல்ல. திருத்தப்பட்ட பிரிவு 13(4) செல்லுபடியாகும் எனத் தெரிவித்தது. அடிப்படை உரிமைகளையும் மாற்ற பாராளுமன்றத்திற்கு உரிமை உள்ளது. ஆனால் அடிப்படைக் களங்களாகத் (Basic Structure) திகழ்பலை களைத் திருத்த முடியாது எனவும் தீர்ப்பளித்தது.

1976இல் கொண்டு வரப்பட்ட 42ஆம் திருத்தத்தின்படி, உட்பிரிவுகள் 368(4) & 368(5)ம் அரசியல் சட்டத்தில் சேர்க்கப் பட்டன. இதன் விளக்கம் பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வரையற்ற அதிகாரம் அரசியல் சட்டத்திலேயே உள்ளடக்கி யுள்ளது; சட்டத் திருத்தங்களில் நீதிமன்றங்கள் எவ்விதத்திலும் தலையிட முடியாது.

1980இல் தலைமை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட மினர்வா மில்ஸ் வழக்கில், இந்த இரு பிரிவுகளின் (368(4)&368 (5)) திருத்தங்களும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்ட மூலத்தில் பாராளுமன்றத்திற்கு வரை யறுக்கப்பட்ட திருத்த வரம்பு (The Limited Amending Power of Parliament) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நீதி மன்ற மறு ஆய்வு (Judicial Review) அதிகாரங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. இந்த இரண்டுக்கும் எதிரான சட்டத்திருத்தங்கள் 368(4)&368(5)) அடிப்படைக் களத்தை (Basic Structure) நகர்க்கிறது, எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேள்வி 6.நீதிமன்றங்கள் கூறும் அடிப்படைக் களங்கள் (Basic Structure) யாவை?

பதில் :-

அடிப்படைக் களங்கள் எவைகள் என்பன பற்றி முழுமை யான வரையறை இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு அம்சங்களை அடிப்படைக் களங்கள் என குறிப்பிட்டுள்ளன. அடிப்படைக் களங்களில் குறிப்பிடத் தக்கன

* அரசியல் சட்டத்தின் முதன்மை நிலை (Supremacy) * ஜனநாயக முறையும் குடியரசு முறையும்

*மதச்சார்பின்மை கூட்டாட்சி (Federalism)

* அரசு, அவைகள் (Legislature), நீதிமன்றங்கள் (Judiciary) இவைகளின் தனித்தனியான அதிகார வரம்புகளும் சுதந்திரத் தன்மையும் போன்றன.

கேள்வி 7. முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டது?

பதில் :-

1951இல் பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இவைகளில் ஒன்று பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான தனிப்பட்ட வகையங்கள் (Special Provisions) அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் (பிரிவு 15(4)). State of Madras V Chempakam Dorairajan AJR 1951, SC 226 வழங்கும் இந்தத் திட்டம் ஏற்படக் காரணங்களில் ஒன்று.

பகுதி – 21

தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்புப் பிரிவுகள் (Temporary, Transitional and Special Provisions)

(பிரிவுகள் 389-392)

கேள்வி 1. பிரிவு 370ன் படி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்து என்ன?

பதில் :-

ஜம்மு காஷ்மீரைப் பொறுத்த வரையில் ஒன்றியப் பட்டிய லிலும் ஒருங்கிணைந்த பட்டியலிலும் உள்ள எல்லா விஷயங் களைப் பற்றியும் பாராளுமன்றம் சட்டம் இயற்ற இயலாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தோடு கலந்தாலோசித்து எந்த விஷயங்கள் பற்றி சுதந்திரம் அடையுமுன் மத்திய அரசு (Dominion) அந்த மாநிலத்துக்குச் சட்டம் இயற்ற தகுதி உடையதாக இருந்ததோ, அதே விஷயங்களுடன் தொடர்பு கொண்டது தான் என குடியரசுத் தலைவர் முடிவு செய்தபின் தான் அந்த விஷயங் களைப் பற்றி பாராளுமன்றம் சட்டம் இயற்ற இயலும்.

ஜம்மு காஷ்மீருக்கென தனியான அரசியலமைப்பு இருப்ப தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அநேக பகுதிகள் குறிப்பாக மாநிலங்களைப் பற்றிய ஆறாவது பகுதி அம்மாநிலத் தீற்குப் பொருந்தாது.

கேள்வி 2.மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்து களை சுருங்கக் கூறுக.

பதில் :-

a. மஹாராஷ்டிரா குஜராத் மாநிலங்களைப் பொறுத்தவரையில் அம்மாநில ஆளுநர்கள் விதர்ப்பா, மரத்வாடா, சௌராஷ்ரா, கட்ச்போன்ற பின் தங்கிய பகுதிகளாகக் கருதப்படும் இடங்களுக்குத் தனிப்பட்ட வளர்ச்சி வாரியங்களை (Development Board ஏற்படுத்தலாம். அவைகளுடைய செயல்முறைகள் குறித்து ஆண்டு தோறும் மாநிலங்களின் கீழ் அவைகளில் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும்.

b. மாநில முழுமைக்கும் உண்டான தேவைகளையும் கருத்தில் கொண்டு மேலே கூறப்பட்ட வளர்ச்சி வாரியங்களுக்கு நிதி ஒதுக்கலாம். தொழில் கல்வி நிறுவனங்கள். வேலை வாய்ப்பு முதலியவை வளர்ச்சி வாரியங்கள் பகுதிகளில் முறையாக ஏற்படுத்த வேண்டும்.

மிசோராம், நாகாலந்து மாநிலங்களைப் பொறுத்த வரையில் அம்மாநிலங்களின் கீழ் அவைகள் (Legislative Assemblies) ஒப்புக் கொள்ளாத வரையில் பாராளுமன்றத்தின் சட்டங்கள் கீழ்க்கண்ட விஷயங்களைப் பாதிக்காது.

1 நாகர்கள் மீசோக்களின் மதம், சமூகப் பழக்க வழக்கங்கள்

i) நாகர்கள், மிசோக்களின் வழிவழி வரும் சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் நாகர்கள், மிசோக்களின் பழக்கவழக்கங்களுக்கு இயல் பாகச் செயல்பட்டு வரும் நீதிமன்ற முறைகள்

a)நிலம் உரிமை மற்றும் சொத்துரிமைகள் மாற்றுவது பற்றியும்

d) அஸ்ஸாம் மாநில பழங்குடியினர் பெரும்பான்மையராக வாழும் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கலாம்.

c) மணிப்பூர் மாநிலத்தில் மலைப் பகுதி மக்களின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

f) ஆந்திராவைப் பொறுத்தவரையில் அரசு வேலைகள். கல்வி வளர்ச்சி முதலியன எல்லாப் பகுதி மக்களுக்கும் நிரவி அமைய வேண்டி வெவ்வேறு பகுதி மக்களுக்கு வெவ்வேறு வகையான தகுதிகள் குறிப்பிடப்படலாம்.

B) அருணாசல பிரதேச ஆளுநர் சட்ட ஒழுங்கில் தனிக் கவனம் செலுத்துவார்.

 

மேலும் படிக்க….

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply