CONSTITUTION PART -V [THE UNION]

Table of Contents

பகுதி -5

ஒன்றியம் (The Union)

(பிரிவுகள் 52-151)

உட்பிரிவு – 1 (நிர்வாகம்)

(பிரிவுகள் 52-78)

குடியரசுத் தலைவரும்

துணைக் குடியரசுத் தலைவரும்

கேள்வி 1. முப்படைகளின் தலைமைத் தளபதி (Supreme Commander) யார்?

பதில் :- குடியரசுத் தலைவர்.

கேள்வி 2. குடியரசுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறர்?

பதில் :- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமுள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள். மாநிலங்களின் சட்டசபைலில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாகக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். (குடியரசுத் தலைவர் அல்லது ரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது)

கேள்வி 3. மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட புதுச்சேரி மற்றும் தில்லி சட்டசபை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

பதில் :- ஆம்.70ஆம் திருத்தப்படி (1992) வாக்களிக்க முடியும்.

கேள்வி 4. குடியரசுத் தலைவரின் தேர்தல் முறையை சற்று விவரிக்கவும்,

பதில் :- பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பும், மாநில சட்ட சபைகள் உறுப்பினர்களின் மொத்த ஒருங்கிணைந்த ஓட்டு மதிப்பும் சமம். மாநில உறுப்பினர்களின் வாக்குச் சீட்டின் மதிப்பு அந்தந்த மாநிலத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், மக்கட் தொகையையும் பொறுத்து மாறுபடும் (Proportional Representation) ஒற்றை மாற்று வாக்குச் சீட்டு (SingleTransferable vote) முறைப்படி தேர்தல் நடக்கும்.

கேள்வி 5. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?

பதில் :- டாக்டர் இராஜேந்திர பிரசாத்.

கேள்வி 6. இரண்டு முறை (10 ஆண்டுகள்) குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் யார்?

பதில் :- டாக்டர் இராஜேந்திர பிரசாத். (1952-1962)

கேள்வி 7. தத்துவக் குடியரசுத் தலைவர் (Philosopher President)என்றழைக்கப்படுபவர் யார்?

பதில் :- டாக்டர் இராதாகிருஷ்ணன் (1962-67)

கேள்வி 8. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் எவ்வளவு வருடம்?

பதில் :- ஐந்து வருடம். ஆனால் பதவிக் காலம் முடிந்த பின்னாலும் அடுத்து வரும் குடியரசுத் தலைவர் பதவியேற்கும் வரை அவர் பதவியில் தொடர வேண்டும்.

ஐந்தாண்டுகள் முடியும் முன்பே அடுத்த குடியரசுத் தலை வரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும்.

கேள்வி 9. குடியரசுத் தலைவராகப் போட்டியிட ஒருவருக்கு வேண்டிய தகுதிகள் யாவை? வயது வரம்பு உள்ளதா?

பதில் :- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியவராகவும், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கத் தகுதி பெற்றவ ராகவும் இருக்க வேண்டும். அரசோ, அரசு சார்ந்த நிறுவனங் களிலோ ஊதியம் பெறக் கூடிய பதவி வகிக்கக் கூடாது. ஆனால்ஏற்கெனவே குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய மாநில அமைச்சர் பதவி வகிப்பவராக இருந்தால் குடியரசுத் தலைவராகத் தடையில்லை. குடியரசு தலைவ ராவதற்கு உச்ச வயது வரம்பு இல்லை.

கேள்வி 10. குடியரசுத் தலைவர் தன் பதவி விலகல் மடலை யாருக்கு அனுப்ப வேண்டும்?

பதில் :-துணைக் குடியரசுத் தலைவருக்கு, அவர் மக்களவைத் தலைவ ருக்கு (Speaker) இச் செய்தியை உடனடியாகத் தெரிவிப்பார்.

கேள்வி 11.குடியரசுத் தலைவர் பதவியை ஒருவர் எத்தனை முறைவகிக்கலாம்?

பதில் :- எத்தனை முறை வேண்டுமாளாலும் வகிக்கலாம். ஒருவர் குடியரசுத் தலைவர் ஆன பின்பு அவரது ஊதியம் மற்றும் படிகள் குறைக்கப்பட மாட்டாது.

கேள்வி 12. குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பவர் யார்?

பதில் :-உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி; அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த மூத்த நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். குடியரசுத் தலைவரான உடன் மத்திய மாநில அவை களில் உறுப்பினராக இருந்தால் அந்த உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கருதப்படுவார்.

கேள்வி 13. குடியரசுத் தலைவரின் நிர்வாக சம்பந்தமான (Executive or Administative) அதிகாரங்கள் எவை?

பதில் :-அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பாளராக இருப்பவர் குடியரசுத் தலைவர். நேரடியாகவோ அல்லது அவருக்குக் கீழ்ப் பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மூலமாகவோ ஆட்சி நடத்து வார். மக்களவையின் பெரும்பான்மைக் கட்சித் தலைவரை பிரதம மந்திரியாக நியமிக்கிறார். பிரதம மந்திரியின் ஆலோசனை யின் பேரில் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார். ஆளுநர்கள், முதன்மைச் சட்ட அதிகாரி (Attomcy General), தலைமை கணக்காயர் (CAG), உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் இரண்டிலும் உள்ள அனைத்து நீதியரசர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், தூதுவர்கள் (Ambassadors or High Commissioners) ஆகியோரை நியமனம் செய்கிறார். மத்திய அரசில் எடுக்கப்படும் முடிவுகள் குடியரசுத் தலைவரின் பெயரால் எடுக்கப்படுகின்றன. முக்கிய ஒப்பந்தங்கள், வெளிநாடுகளுடன் உடன்படிக்கை, குடியரசுத் தலைவரின் பெயரால் செய்யப்படுகிறது.

கேள்வி 14. பாதுகாப்புத் துறையைப் பொறுத்த வரையில் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் என்ன?

பதில் :-முப்படைகளின் தலைமைத் தளபதி குடியரசுத் தலைவர். மற்ற நாடுகளுடன் போர்ப் பிரகடனம் செய்வதோ அல்லது அமைதி ஒப்பந்தம் செய்வதோ குடியரசுத் தலைவரால் செய்யப் படுகிறது. முப்படைத் தளபதிகளை நியமிப்பதும் குடியரசுத் தலைவரே.

கேள்வி 15. குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் யாவை?

பதில் :-பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர், மக்களவை, மேலவை என்ற மூன்றையும் உள்ளடக்கியது ஆகும். எனவே குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றம் சம்பந்தமாக பரவலான அதிகாரங்கள் உண்டு. பாராளுமன்றத்தினால் ஒப்புதல் அளிக்கப் பட்ட மசோதாக்கள் அவரின் அனுமதி பெற்ற பின்பே சட்ட மாகும். பொதுத் தேர்தல் முடிந்து புதிதாக அமைக்கப்பட்ட அவையின் முதல் கூட்டத் தொடரிலும் ஒவ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் பாராளுமன்ற இரு அவைகள் இணைந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். இதைத் தவிர எந்த நேரத் திலும் பாராளுமன்ற அவைகளைக் கூட்டி அதில் உரையாற்ற குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு. அவருக்கு பாராளு மன்றத்தை எந்த நேரத்திலும் கூட்டவோ (Summon) காலவரை யறையின்றி ஒத்தி போடவோ (Prorogue) அல்லது மக்களவையைக் கலைக்கவோ (dissolution) உரிமையுண்டு. ஆறு மாத இடை வெளிக்குள் பாராளுமன்றக் கூட்டங்கள் நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரு அவைகளின் இணக்கம் இல்லாததால் ஒரு மசோதா சட்டமாவதில் தடங்கல் ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் இரு அவைகள் இணைந்த கூட்டத்தை (Joint Sitting) கூட்டலாம். மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்திகள் (Messages) அனுப்பலாம்.

கேள்வி 16. குடியரசுத்தலைவருக்கு நிதித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் எவை?

பதில் :-குடியரசுத் தலைவர் பெயரால் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கை (Budget) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பண மசோதா அவரது அனுமதியுடன் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவர் நிதிக் குழுவை அமைக்கிறார். (பிரிவு 280) எதிர்பாராத செலவுகளுக்கு அவசர கால நிதியிலிருந்து பணம் எடுக்கக் குடியரசுத் தலைவர் அனுமதி வேண்டும்.

கேள்வி 17. நீதித் துறை சம்பந்தப்பட்ட குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் | (Dispensation of lustice) எவை?

பதில் :-  பாதுகாப்புத் துறை நீதிமன்றங்கள் (Court Martial) அளித்த

தீர்ப்பின்படி தண்டனை பெற்றவர்கள், பாராளுமன்றம் இயற்றும்

சட்டங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றவர்கள் மற்றும்

மரண தண்டனை பெற்றவர்கள் இவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு

குடியரசுத் தலைவர் தண்டனையைக் குறைக்கலாம்.

ஒருவரின் தண்டனையை மன்னித்து, தண்டனையை முழுமையாக நீக்க முடியும் (Pardon). கடுமையான தண்டனைக்குப் பதிலாகத் தீவிரம் குறைந்த தண்டனையாக மாற்றலாம். (Commutation) (எ.கா. மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக மாற்றலாம்). தண்டனையின் காலத்தைக் குறைக்கலாம் (Remission). தண்டனையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்தி போடலாம் (Reprieve or suspend).

கேள்வி 18. அவசர நிலையில் (Emergency) குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் எவை?

பதில் :-அமைச்சரவையின் எழுத்து பூர்வ ஒப்புதலுடன் அவசர நிலைப்பிரகடனம் செய்யலாம் (பிரிவு 352). ஒரு மாநிலத்தின் ஆட்சியை நேரடியாகத் தன் நிர்வாகத்துக் கீழ் கொண்டு வரலாம்.

கேள்வி 19. குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா?

பதில் :-அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டால் (Violation of the Constitution) அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு (Impeachment) பாராளுமன்றத்தினால் நீக்கப்படலாம் (பிரிவு 56(1) Proviso(b))

கேள்வி 20. பதவி நீக்கம் (Impeachment) செய்யும் முறை யாது?

பதில் :- பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொரு அவை, குடியரசுத் தலைவர் அரசியல் சட்டத்திற்கு முரண்பாடாகச் செயல்படு கிறார் என்று குற்றம் சாட்டலாம். குற்றங்களை ஒரு தீர்மானம் மூலமாக (Resolution) பதினான்கு நாட்கள் வரையறை கொடுத்து அவையின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் தீர்மானம் கொண்டு வருவதற்கும் நான்கில் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை.

ஓர் அவை முதலில் தீர்மானம் கொண்டு வந்தால், மற்ற அவை குற்றச்சாட்டை தானே விசாரிக்கும். அல்லது விசாரிக்கப் பட நடவடிக்கை எடுக்கும். குற்றச்சாட்டுகளை எதிர்த்து விசாரணையில் குடியரசுத் தலைவர் நேரடியாகவோ பிறர் மூல மாகவோ பதிலளிக்க உரிமை உண்டு. விசாரணைக்குப் பின்பு குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என இரண்டாவது அவை யிலும் மூன்றினுக்கு இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்நாளிலிருந்து குடியரசுத் தலைவர் பதவி இழந்ததாகக் கருதப்படுவார்.

 

Question 1. Who is the Supreme Commander of the three armies?

Answer :- President.

Question 2. President is elected by whom?

Answer :- Elected Members of both the Houses of Parliament. The President is elected by the elected members of the States’ Assemblies. (President of the Republic or members appointed by the Ral have no voting rights)

Question 3. Can the members of Puducherry and Delhi Assembly under the direct rule of the Central Government vote in the Presidential election?

Answer :- Yes. As per 70th Amendment (1992) voting can be done.

Question 4. Briefly describe the system of election of the President of the Republic.

Answer :- The total vote value of the members of both Houses of Parliament is equal to the total combined vote value of the members of the State Legislatures. The value of the ballots of the members of the state varies depending on the number of members and the amount of the respective state (Proportional Representation).

Question 5. Who was the first President of India?

Answer :- Dr. Rajendra Prasad.

read more,,,,

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply