INDIAN CONSTITUTION ARTICLE 21-35
கேள்வி 1.கைது செய்யப்படுபவர்களின் அடிப்படை உரிமைகள் யாது?
பதில்:-
யார் கைது செய்யப்பட்டாலும் அவர் கைது செய்யப்பட்ட காரணத்தை அவருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கவோ, அமர்த்திக் கொள்ளவோ அதிகாரம் உண்டு. ஆனால் இந்த இரண்டு உரிமைகளும் நாட்டின் எதிரிகளுக்கும் (Enemy Alien) தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கும் (Preventive Detention) கிடையாது.
கைது செய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதியின் உத்தரவின்படிதான் கைதை நீடிக்க முடியும்.
கேள்வி 2. தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் உரிமைகள் யாது?
பதில்:-
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை மூன்று மாதங்கள் வரை காவலில் வைக்கலாம். அதற்குள் அவர் காவலை நீட்டிப்பது பற்றி உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக உள்ளவர்கள் இருக்கும் ஆலோசனைக் குழுமம் (Advisory Board) முடிவு எடுக்கும்.
கேள்வி 3. எந்த அடிப்படை உரிமை, அடிப்படை உரிமைகளில் மிக உயர்ந்த தாகக் கருதப்படுகிறது?
பதில்:-
ஒரு மனிதனின் உயிரையோ, சுதந்திரத்தையோ சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிக்க முடியாது எனக் கூறும் பிரிவு 21 தான்.
கேள்வி 4. பிரிவு 21 இன் நிலை பற்றி உச்ச நீதிமன்றத்தின் பொதுவான கருத்து என்ன?
பிரிவு 21,உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் உரிமை (Animal Existence) மட்டும் கொண்டானதல்ல. முறையான வாழ்வுக்குண்டான உரிமையையும் உள்ளடக்கும். சுதந்திர உரிமையைப் பற்றிய விளக்கங்களும் பல்வேறு கூறுகளைக் (Facets) கொண்டதாக விளங்க வேண்டும்.
மேனகா காந்தி வழக்கு (பாஸ்போர்ட் நிறுத்தம் பற்றியது). ஒலேகா டெல்லிஸ் வழக்கு (வாழ்வதற்கு உரிமை பற்றியது), சுனில் பத்ரா வழக்கு (கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிரானது) (Right Against Torture) போன்ற பல்வேறு வழக்குகளில் மனித உரிமைகளின் பல்வேறு நிலைக்களன்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரிவு 21ன்படி உச்ச நீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
கேள்வி 5). பிரிவு – 20 மற்றும் 21இன் மற்றொரு முக்கியத்துவம் என்ன?
பதில்:-
அவசர நிலைப் பிரகடனத்தின் போதும், இந்த இரு உரிமை களைப் பறிக்க இயலாது.
கேள்வி 6. கல்வியைப் பற்றிய அடிப்படை உரிமை யாது?
பதில்:-
ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அரசு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்கும். இது 86ஆவது திருத்தத்தின்படி (2002ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்டது (Article 21A).
கேள்வி 7).சுரண்டலை (Exploitation)ப் பற்றிய உரிமைகளைக் கூறுக?.
பதில்:-
மனித உயிரினங்களை வாங்குவது, விற்பது, பிச்சை யெடுப்பது மற்றும் இது போன்ற கட்டாயத் தொழிலில் (Forced labour) ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற் சாலைகளில் அல்லது சுரங்கங்களில் அல்லது அபாயகரமான தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
கேள்வி 8). பொதுநலத்திற்காகக் கட்டாய சேவை செய்யுமாறு அரசு நிர்ப்பந்திக்கலாமா?
பதில்:-
நிர்ப்பந்திக்கலாம். ஆனால் மதம், இனம், ஜாதி, வகுப்பு அடிப்படையில் வித்தியாசம் காட்டக் கூடாது.
கேள்வி 9). மத விஷயங்களைப் பொறுத்த அடிப்படை உரிமைகள் யாது?
பதில்:-
சட்ட ஒழுங்கு, ஒழுக்கம், ஆரோக்கியம் முதலிய வரையறைக் குட்பட்டு ஒவ்வொரு குடிமகனும் தன் மனச்சாட்சிப்படி எந்த மதத்தையும் பின்பற்றலாம்; அதைப் பரப்பலாம். அரசு ஒரு மதத்தின் பொருளாதார, அரசியல், நிதி சம்பந்தப்பட்ட ஆனால் மத சம்பந்தப்படாத செய்கைகளை ஒழுங்குபடுத்தலாம் (பிரிவு 25); மத சம்பந்தப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் செய்யலாம். இந்து மதம் சார்ந்த மத நிலையங்களை இந்து மதத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் திறந்து வைக்கலாம். ஒவ்வொரு மதப் பிரிவிளரும் தங்களுக்கு வேண்டியவாறு மத சம்பந்தப்பட்ட நிலையங்களை தாங்களாகவே நிர்வகித்துக் கொள்ளலாம்; சொத்துக்கள் வாங்கிக் கொள்ளலாம்; சட்டத்திற்குட்பட்டு அந்த சொத்தை நிர்வசித்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட மதத்துக்காகவோ அல்லது மதத்தின் ஒரு பிரிவுக்கோ வரி செலுத்துமாறு யாரையும் வற்புறுத்த முடியாது.
கேள்வி 10). கல்வி நிலையங்களில் மதபோதனை உண்டா?
பதில்:-
அரசு மற்றும் அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் மத போதனை செய்யக் கூடாது; ஆனால் ஓர் அறக்கட்டளை (Endowment) அல்லது பொறுப்பாண்மையின் கீழ் ஒரு நிறுவனம் மதபோதனை செய்வது அவசியமாகும் என்பதன் அடிப்படை யில் இயங்கி வந்தால், அரசு நிதி உதவி பெற்றாலும் மத போதனை செய்வதில் தடையில்லை. அரசினால் அங்கீகரிக்கப் பட்ட அல்லது அரசு நிதியினால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களை மதவழிபாட்டிற்கோ மதபோதனைக்கோ (18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள்), அல்லது அவர்களுடைய காப்பாளர்கள் (மாணவர்கள் 18 வயதிற்குட்பட்டிருந்தால்) சம்மதமின்றி உட்படுத்தக் கூடாது.
கேள்வி 11). பண்பாடு, கல்வி பற்றிய பொதுவான அடிப்படை உரிமைகள் யாது?
பதில்:-
இந்தியா முழுமையிலோ அல்லது ஒரு பகுதியிலோ வாழும் இந்தியக் குடிமக்களுக்கு தங்களுடைய தனிப்பட்ட மொழி, எழுத்து வடிவம், பண்பாடு இவைகளைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. அரசு சார்ந்த அல்லது அரசு நிதி பெறுகிற கல்வி நிலையங்களில் மதம், இனம், சாதி, மொழி இவைகளின் அடிப்படையில் மட்டுமே இந்தியக் குடிமக்கள் எவருக்குமே அனுமதி மறுக்கக் கூடாது.
கேள்வி 12). கல்வி நிலையங்கள் நடத்த சிறுபான்மையினருக்குள்ள உரிமை என்ன?
பதில்:-
மத, மொழி சிறுபான்மையினர் அவர்களுக்கு வேண்டிய கல்வி நிலையங்களை ஆரம்பிக்க, நடத்த உரிமை உண்டு. அரசு நிதி உதவி அளிக்கும் பொழுது சிறுபான்மையினர் கல்வி நிலையங் களுக்கு பாரபட்சம் காட்டக் கூடாது.(பிரிவு-30)
கேள்வி 13. சொத்துரிமை அடிப்படை உரிமையா?
பதில்:-
இல்லை. 1978க்குப் பிறகு (44ஆவது திருத்தப்படி) சொத்துரிமை ஒரு சட்ட உரிமை (Legal Right) மட்டுமே. அடிப் படை உரிமை ஆக இருக்கும் பொழுது வழக்குகளை உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றங்களுக்கு மட்டும் எடுத்துச் சொல்லலாம். தற்பொழுது கீழ்நீதி மன்றங்களுக்கும் எடுத்துச் செல்லலாம். அடிப்படை உரிமையாக இருக்கும் பொழுது அரசு கைப்பற்றும் நிலங்களுக்கு மார்க்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் போதும்.
கேள்வி 14). பிரிவு 32ன்படி உச்ச நீதிமன்றம் மூலமாக பெறக் கூடிய அரசியல் சட்டமைப்புத் தீராய்வுகள் என்ன?
பதில் :-
ஆட்கொணர்விக்கும் ஆணை (Habeas Corpus), செயலுறுத்தும் ஆணை (Mandamus), தடையுறுத்தும் ஆணை (Prohibition), தகுதி முறை விளவும் ஆணை (Quo Warranto) மற்றும் நெறிமுறை உணர்த்தும் ஆணை (Certiorari) ஆகும்.
கேள்வி 15). அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்கத் தடை உண்டா?
பதில்:-
இராணுவம், பொது அமைதியையும் நிலை நாட்ட உதவும் காவல் துறை, ஒற்றர் இலாகா (Intelligence Gathering Institutions) மேற்கண்ட துறைகளுக்கு உதவிடும் தகவல் தொடர்பு (Telecommunications) துறைகள் இவற்றில் வேலை செய்வோருக்கு அடிப்படை உரிமைகளைத் தடை செய்யவோ, முழுமையாக நீக்கம் செய்யவோ சட்டம் மூலம் செய்திடலாம். இராணுவச் சட்டம் அமலில் இருக்கும் இடங்களிலும் உரிமைகள் தடை செய்யப்படலாம். (பிரிவு 33, 34)
கேள்வி16). ஆட்கொணர்விக்கும் ஆணை (Habeas Corpus) என்றால் என்ன?
பதில் :-
ஹேபிஸ் கார்பஸ் என்பதன் நேரடியான பொருள் ஆனை நேராகக் கொணர் என்பதாகும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரையோ, தவறான முறையில் அடைபட்டுக் கிடக்கும் ஒருநபரையோ உச்ச நீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் முன் அவரைக் கொனர்ந்து அவர் சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப் பட்டுள்ளாரா என்று அறிய உதவிடும் ஆணை ஹேபியஸ் கார்பஸ் ஆகும்.
கேள்வி 17). செயலுறுத்தும் ஆணை (Mandamus}யை விவரி?
பதில்:-
Mandamus என்றால் ஆணையிடுதல் என்று பொருளாகும். அரசுத் துறையோ அல்லது அரசு சார்ந்த நிறுவளமோ சட்டத் துக்குப் புறம்பானதாகச் செயல்படுகிறது என்று நீதிமன்றத்தால் கருதப்பட்டால் சட்டத்திற்குட்பட்ட பணியைச் செய்யுமாறு ஆணையிடுதல் Mandamus ஆகும்.
கேள்வி 18), தடையுறுத்தும் ஆணை (Prohibition) என்றால் என்ன?
பதில்:-
ஒரு நீதிமன்றம் தனது வரையறைக்குட்படாத ஒரு வழக்கை விசாரித்தால் அந்த நீதிமன்றத்திற்கு மேலே உள்ள நீதிமன்றம் அந்த வழக்கிற்கு தடையிடும் ஆணைக்கு பெயர் தடையுறுத்தும் ஆணை (Prohibition) ஆகும்.
Mandamus’இல் ஒரு செயலைச் செய்யுமாறு நீதிமன்றம்உத்தரவிடும்; ‘Prohibition’இல் ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு உத்தரவிடும்.
கேள்வி19). தகுதிமுறை வினவும் ஆணை (Quo Warranto) என்றால் என்ன?
பதில்:-
ஒருவர் ஓர் அரசு அல்லது அரசு சார்ந்த அல்லது அரசு நிதி பெறும் நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணி நியமனம் செய்யப்பட்டிருந்தால் அவரை அந்த பணியைச் செய்யாதிருக்கக் கூறும் உத்தரவு Quo Wattanto ஆகும்.
கேள்வி 20). நெறிமுறை உணர்த்தும் (Certiorari) ஆணை என்றால் என்ன?
பதில் :-
ஒரு மேல் நீதிமன்றம் தனக்குக் கீழ்ப்பட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது அதற்கு இணையான அமைப்புக்கோ (Quasi Judicial) ஆனை பிறப்பிப்பது நெறிமுறை உணர்த்தும் ஆணை ஆகும்.
கேள்வி 21). பொதுமக்கள் நலன் வழக்கு (Public Interest Litigation)என்றால் என்ன?
பதில்:-
அரசோ, அரசைச் சார்ந்த நிறுவனங்களோ அல்லது வேறு எந்த அமைப்போ மக்கள் சம்பந்தமான கடமையிலிருந்து தவறி னால் அல்லது அரசியல் சட்டம் மற்ற சட்டங்களுக்குப் புறம்பாக நடந்தால் போதிய அளவு உரிமை உள்ள தனிப்பட்ட மனிதர் களோ அல்லது அமைப்புகளோ ஏழைகள், படிக்காதவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள், பொதுமக்கள் சார்பாக நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகள் தொடரலாம்; இவ்வழக்குகள் PIL என்றழைக்கப்படு கின்றன.
கேள்வி 22).எந்த வருடத்திலிருந்து இவ்வகை வழக்குகள் பிரபலமாகத் தொடங்கின?
பதில்:-
1982இல் நீதியரசர் பகவதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பொழுது ஓர் அஞ்சலட்டை மூலமாகவே குடிமக்கள் தரப்பிலிருந்து நியாயம் கோரியபோது உச்ச நீதிமன்றம் அதை ஒரு வழக்காக ஏற்றுக் கொண்டது.
கேள்வி 23). தகவல் அறியும் உரிமைச் சட்டம் (The Right to InformationAct) எந்த நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது?
பதில்:-
அக்டோபர் – 12, 2005.
கேள்வி 24). இந்தியக் குடியுரிமை பெறாதவர்களுக்கும் (non citizens) கிடைக்கக் கூடிய அடிப்படைஉரிமைகளின் பிரிவுகள் யாவை?
பதில்:-
பிரிவுகள் 14, 20-22, 23, 25 மற்றும் 32.
கேள்வி 25). பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்மஸ்ரீ போன்ற பட்டங்களை அளிப்பதற்குத் தடை உண்டா?
பதில்:-
இல்லை. இவைகள் பிரிவு 18இன் கீழ் வரவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நமது மையத்தின் முக்கிய நோக்கம் நேர்மையான அரசு பணியாளர்களை உருவாக்குவதே நமது நோக்கம்…
மேலும் தகவலுக்கு…மேலும் தகவலுக்கு…