அரசியல் சட்டத்திருத்தங்கள்( 1-100 )

அரசியல் சட்டத்திருத்தங்கள் (முக்கியமான திருத்தங்களே குறிப்பிடப்படுகின்றன)

1ஆவது திருத்தம் (1951):

(திருத்தப்பட்ட பிரிவுகள் 15, 19, 31, 85, 87, 174, 176,341, 342, 372, 376) ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்

பட்டது. அடிப்படை உரிமைகளின் செயலாக்கத்தில் ஏற்பட்ட சில தடைகளை நீக்குவதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள்.

சட்டத்தின் முன் சமத்துவ உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை முதலியவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக தனிப்பட்ட முன்னுரிமை அளிக்க வழி வகுக்கப்பட்டது)

2ஆவது திருத்தம் (1952) (பிரிவு 81):

பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்வுக்குண்டான மக்கள் தொகை வரையறை நீக்கப்பட்டது.

3ஆவது திருத்தம் (1955) (ஏழாம் அட்டவணை):

மாநிலப் பட்டியலிலிருந்து (State List), ஒருங்கிணைந்த பட்டியலுக்குச் சில பொருட்கள் (Items) கொண்டு வரப்பட்டன. இதனால் மத்திய அரசு இவைகளின் மீது சட்டம் இயற்ற வழி வகுத்தது (ஒருங்கிணைந்த பட்டியல் – வரிசை எண் 33)

4ஆவது திருத்தம் (1955);

(பிரிவுகள் 31,31A,305 அட்டவணை ஒன்பது)

5ஆவது திருத்தம் (1955);

(பிரிவு 3) ஒரு மாநிலத்தின் பரப்பளவில் மாற்றம் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறை பற்றியது.

6ஆவது திருத்தம் (1956);

(பிரிபுகள் 269, 286 மற்றும் ஏழாம் அட்டவணை) மாநிலங்களுக் இடையே உண்டான விற்பனை வரியைப் பற்றியது. ஏழாம் அட்டவணையில் புதிதாகப் பொருட்கள் (lems) சேர்த்தல், மத்தியப் பட்டியல் வரிசை எண் 92A மாநிலப் பட்டியல் வரிசை எண் 54.

7ஆவது திருத்தம் (1955);

முதல் தடவையாக மிகப் பரந்த அளவில் பல்வேறு பிரிவு களிலும் அட்டவணைகளிலும் மாற்றம் செய்யப்பட்டன. முக்கிய மாக மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டதை முள்ளிட்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலாம் மற்றும் நான்காம் அட்டவணைகளில் பரந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

8ஆவது திருத்தம் (1960):

(பிரிவு 334) மக்களவை மாநில அவைகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்குண்டான இட ஒதுக்கீடு அடுத்த பத்தாண்டுக்கு நீடிக்கப்பட்டது.

9ஆவது திருத்தம் (1960):

(முதலாம் அட்டவணை) இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடத்த ஒப்பந்தங்களை முன்னிட்டு அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவிலிருந்து சில பகுதிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்ததால், திருத்தங்கள் செய்யப்பட்டன.

10ஆவது திருத்தம் (1961);

(பிரிவு 240 மற்றும் முதலாம் அட்டவணை) தாத்ரா நாகர் ஹவேலி

மத்திய அரசுப் பகுதியானதை முன்னிட்டு திருத்தம் செய்யப்பட்டது.

11ஆவது திருத்தம் (1961):

(பிரிவுகள் 66(1), 71(3), துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந் தெடுக்கப்படுவதற்கு இரு மன்றங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் (Joint Sirring of Both the Houses) தவிர்ப்பு. குடியரசுத் தலைவர்,துணைக் குடியரசுத் தலைவர் இருவரையும் தேர்ந்தெடுக்கு

வேண்டிய உறுப்பினர்களின் சிலர் பதவி காலியாக இருப்பதை வைத்து இருவர் தேர்தலும் செல்லுபடியாகாது என்ற நிலை நீக்கல்,

12ஆவது திருத்தம் (1962):

பிரிவு 240, அட்டவணை ஒன்று) கோவா, டாமன், டைய இந்தியாவோடு இணைந்து மத்திய அரசுப் பகுதியானதை ஒட்டி

13ஆவது திருத்தம் (1962):

(பிரிவு 371A சேர்க்கை). நாகலாந்து தனி மாநிலமாகியதை ஒட்டி திருத்தம் செய்யப்பட்டது. நாகலாத்தின் தனிப்பட்ட கலா சாரத்தைப் பாதுகாக்கத் தனியான அந்தஸ்து தரல்.

14ஆவது திருத்தம் (1962):

பிரிவுகள் 81, 239A) முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான புதுச் சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மத்திய அரசுப் பகுதிகளாதல்; மத்திய அரசுப் பகுதிகளாயிருந்த இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கோவா, டாமன் டையூ, புதுச்சேரி முதலியவைகளுக்கு சட்டசபைகள் ஏற்படுத்தல். மக்களவையில் மத்திய அரசுப் பகுதி களுக்கு பிரதிநிதிகள் 20லிருந்து 25 ஆக உயர்த்துதல்.

15ஆவது திருத்தம் (1963):

(பிரிவுகள் 124,128, 217, 222, 224, 224A, 311, 316 ஒன்றியப் பட்டியலில் 78ஆம் வரிசை எண்) உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்தல். அரசுப் பணியாளர் களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையில் மேல் முறையீட்டு வாய்ப்பை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தல்.

16ஆவது திருத்தம் (1963):

(பிரிவுகள் 19,84, 173, 3ஆவது அட்டவணை) இந்தியா வின் இறையாண்மை ஒருமைப்பாடு கருதி அடிப்படை உரிமை களில் தடைகள் ஏற்படுத்துதல்; பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தல் பற்றியது.

17ஆவது திருத்தம் (1964);

(பிரிவு 31அ, 9ஆம் அட்டவணை) நிலச் சொத்து (Estate) என்பதன் பொருள் விரிவாக்கம் செய்யப்பட்டது: நிலச் சீர்திருத்தம் பற்றிய 44 மாநிலச் சட்டங்கள் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

18ஆவது திருத்தம் (1966);

(பிரிவு 3) – பஞ்சாப், ஹரியானா என்ற இரு மாநிலங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்டது. மாநிலத்தையோ மத்திய ஆட்சிப் பகுதியையோ உருவாக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று கூறும் வகையில் பிரிவு 3இல் ஒரு விளக்கம் சேர்க்கப்பட்டது.

19ஆவது திருத்தம் (1988):

(பிரிவு 324) தேர்தல் குழுமத்தின் கடமைகளைப் பற்றிய விளக்கம்.

20வது திருத்தம் (1966):

பிரிவு 233அ சேர்க்கப்பட்டது. மாவட்ட நீதிபதிகளின் நியமனமும், அவர்கள் வழங்கும் தீர்ப்புரையும் இன்ன பிறவும் செல்லுபடியாகும் என்பது பற்றியது.

21ஆவது திருத்தம் (1967):

எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.

22ஆவது திருத்தம் (1969):

(பிரிவுகள் 2444,371B, 275) அஸ்ஸாம் மாநிலத்திற்குள் சுவாட்சி பெற்ற பகுதியாக மேகாலயாவைத் தோற்றுவித்தல்.

23ஆவது திருத்தம் (1970):

(பிரிவுகள் 330,332, 333, 334) தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்குண்டான ஒதுக்கீடுகள் அடுத்து பத்தாண்டு வரை நீட்டித்தல்.

24ஆவது திருத்தம் (1971);

(பிரிவுகள் 13, 168) அடிப்படை உரிமைகளைத் திருத்தம் செய்ய பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கோலக்காத் வழக்கில் (1967 SC 1643) உச்ச நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் விளைவை நீக்க இந்த திருக்கம் செய்யப்பட்டது. பிரிவு 13(4) புதிதாகச் சேர்க்கப்பட்டது. பிரிவுகள் 368(1)&(3)ம் சேர்க்கப் பட்டன. 368ம் பிரிவின் அடிப்படையில் செய்யப்படும் திருந்தல் களுக்குக் குடியரசுத் தலைவர் கண்டிப்பாக அனுமதி அளித்தே த் வேண்டும் எனவும் கொண்டு வரப்பட்டது.

25ஆவது திருத்தம் (1971):

(பிரிவு 31(2) திருத்தம்: 31(2A) 31C சேர்க்கப்பட்டன) அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு போத வில்லை என்று நீதிமன்றங்கள். கையகப்படுத்துவதைச் செல்லாதது என அறிவிக்க முடியாது; இழப்பீடு (Compensation) என்ற சொல்லுக்கு பதிலாகத் தொகை என்ற சொல் சேர்க்கப்பட்டது.

(பிரிவு 39{b}&(c)) வழிநடத்தும் கொள்கைகள் முன்னிட்டு நிலக் கையடக்கங்கள் செய்யப்பட்டால் அடிப்படை உரிமை களைப் பாதிக்கிறது என்று நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது.

26ஆவது திருத்தம் (1971):

(பிரிவுகள் 291,362 நீக்கப்பட்டன; பிரிவு 363A சேர்க்கப் பட்டது; பிரிவு 366(22) திருத்தம் செய்யப்பட்டது) பழைய மன்னர்களுக்கு அளித்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டது. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது.

27ஆவது திருத்தம் (1971):

(பிரிவுகள் 239A, 239B, 240, 371C) மிசோராமும் அருணாச்சலப் பிரதோமும் மத்திய அரசுப் பகுதிகளாக உருவாக்கப்பட்டன.

28ஆவது திருத்தம் (1972):

பழைய ICS அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் நீக்கப்பட்டன.

29ஆவது திருத்தம் (1972);

(ஒன்பதாவது அட்டவணை) கேரள மாதில் இரு நிலச்சீர் திருத்த சட்டங்கள் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

30ஆவது திருத்தம் (1972);

(பிரிவு 133(1)) வழக்கின் மதிப்பைப் பொறுத்து உச்ச நீதி மன்றத்தில் முறையிடும் (Appeal) நிலையை மாற்றி நுணுக்கமான சட்டத் தீராய்வுகள் (Substantial Question of Law) தேவைப்படும் வழக்குகளை அனுமதிக்கும் முறை ஏற்பட்டது.

31ஆவது திருத்தம் (1973);

(பிரிவுகள் 81, 330A, 332) மக்களவையில் தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 525லிருந்து 545 ஆக உயர்தல்,

32ஆவது திருத்தம் (1974);

(பிரிவு 371, அட்டவணை 7, பட்டியல் 1 எண் 63) ஆந்திர

மாநிலத்திற்கான ஆறு செயலாக்க முறைகள் (Programmes) ஏற்படுத்துதல்,

33ஆவது திருத்தம் (1974);

(பிரிவு 101.190) பாராளுமன்ற, மாநில அவைகளின் உறுப்பினர்களின் பதவி விலகல் மடல்கள் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில் மட்டும் ஏற்றல்

.

34ஆவது திருத்தம் (1974)

(9ஆம் அட்டவணை) 20 நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் சேர்க்கப்பட்டன.

35ஆவது திருத்தம் (1975);

(பிரிவுகள் 24, 80, 81) சிக்கிம் இந்தியாவின் ஒரு இணைந்த மாநிலமாக (Associate State)ச் சேர்தல்.

36ஆவது திருத்தம் (1975):

சிக்கிமை இந்தியாவுடன் ஒரு மாநிலமாகச் சேர்த்தல்.

37ஆவது திருத்தம் (1975):

மத்திய அரசுப் பகுதியான அருணாச்சல பிரதேசத்திற்கு ஓர் அலையும் அமைச்சரவையும் ஏற்படுத்துதல்.

38ஆவது திருத்தம் (1975):

(பிரிவுகள் 123,213, 239B, 352, 356, 359, 360) குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசர நிலைப் பிரகடனல் களையோ மற்றும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநராலோ பிறப்பிக்கப்படும் அவசர ஆணைகளையோ (Ordinances) நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய இயலாது.

39ஆவது திருத்தம் (1975):

(பிரிவு 71-திருத்தம்; பிரிவு 329A-சேர்க்கை) குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோரின் தேர்தல் பற்றிய வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்க இயலாது.

40ஆவது திருத்தம் (1976):

(பிரிவு 297, அட்டவணை 9) இந்திய நிலவரையின் நீர் எல்லைக்குள் (Territorial Waters) அல்லது கண்டத்தில் (Continental Shelf) அல்லது இந்தியாவின் பொருளாதார வள வரம்புக்குள் (Exclusive Economic Zone) இருக்கும் நிலங்கள் கனிமப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசுக்குச் சொந்தமெனல்; ஒன்பதாம் அட்டவணையில் 64 சட்டங்கள் சேர்த்தல்.

41ஆவது திருத்தம் (1976):

(பிரிவு 316) மாநிலத் தேர்வு ஆணைய உறுப்பினர்கள் வயது வரம்பு 60லிருந்து 62ஆக உயர்தல்.

42ஆவது திருத்தம் (1976):

சுதந்திர இந்தியாவில் மிக மிகப் பரந்தளவில் செய்யப்பட்ட திருத்தம் இது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அவசர நிலைப் பிரகடனத்தின் போது செய்யப்பட்டது. ஏறக்குறைய ஐம்பது பிரிவுகளிலும் மற்றும் முகப்புரை, அட்டவணைகளிலும் திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்யப்பட்டன. இந்த ஒரு திருத்தம் மட்டுமே ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் (Mini Constitution) என்று கூறப்படுகிறது. செய்யப்பட்ட திருத்தங் களில் பல கடுமையான விமரிசனங்களுக்குள்ளாகியது. அவசர நிலைப் பிரகடனம் முடிந்து 1977இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பொழுது செய்யப்பட்ட திருத்தங்களில் பல நீக்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

42ஆவது திருத்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் அடிப்படை சாராம்சம் கீழ்க்கண்டவைகளாகும். முகப்புரையில் சமதர்ம (Socialist) சமயச் சார்பற்ற (Secular) மற்றும் ஒருமைப் பாடு (Integrity) என்ற மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன. அடிப்படை உரிமைகளுக்குச் சில தடைகள் விதிக்கப்பட்டன. அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன. நீதித்துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.

திருத்தப்பட்டவைகள்: முகப்புரை, பிரிவுகள் 31c, 39,55, 74, 77, 81, 82, 83, 100, 102, 105, 118, 145, 166, 170, 172, 189, 191, 194, 208, 217, 225, 227, 228, 311, 312, 330, 352, 353, 356.357, 358, 359,366, 368, 371F, ஏழாம் அட்ட வணை. மாற்றப்பட்டவைகள்: (Substitution) பிரிவுகள் 103, 150, 192, 226; புதிதாகச் சேர்க்கப்பட்டன: 31D, 32A, 39A, 43A, 48A, SIA, 131A, 139, 144A, 226A, 228A, 257A, 323A, 323B.

43ஆவது திருத்தம் (1978):

பிரிவுகள் 31D, 32A, 131A, 144A, 226A, 228A நீக்கப்பட்டன. பிரிவுகள் 145, 226, 228, 366 திருத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத் தால் மாநிலச் சட்டங்களைத் தீராய்வு செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தால் மத்திய அரசு சட்டங்களைத் தீராய்வு செய்ய இயலாது என 42ஆவது திருத்தத்தால் ஏற்பட்ட நிலை நீக்கப்பட்டது. தேச விரோதச் சட்டங்கள் பிரிவு 31Dயிலிருந்து நீக்கப்பட்டன.

44ஆவது திருத்தம் (1979):

42ஆவது திருத்தத்தில் செய்யப்பட்ட சில பிறழ்வுகளைச் சரி செய்வது இதனுடைய முக்கிய நோக்கமாகும். தடுப்புக் காவல்தடைச் சட்டத்தின் கீழ் தனிநபரைக் கைதாக்கும் முறையைக் கடினப்படுத்துதல், சொத்துரிமையைப் பற்றி பிரிவு 31 நீக்கப்படுதல், இதை முன்னிட்டு பிரிவு 31A மற்றும் 3ICயில் மாற்றம் ஏற்படுத்துதல். குடியரசுத் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் விபகாரங்களை உட நீதிமன்றமே ஆய்வு செய்யும் (பிரிவு 71) என மறுபடியும் கொண்டு. வரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒரு விஷயத்தை அமைச்சு குழுவுக்கு மறு ஆய்வு செய்ய அனுப்பலாம். ஆனால் அமைச்சர் குழு மறு ஆய்வு செய்து அனுப்பினால் குடியரசுத் தலைவர் அவ்விஷயத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் (பிரிவு 74), மக்களவை, மாநிலங்களின் கீழ் அவையின் காலங்கள் ஆறாண்டி லிருந்து ஐந்தாண்டுகள் என பழைய நிலைக்குக் கொண்டு வரப் பட்டன. அவசர நிலையைப் பொறுத்தவரையில் (பிரிவு 3852) உன் நாட்டுக் குழப்பம் (Internal Disturbance) என்ற சொற்களை நீக்கி ஆயுதந் தாங்கிய கலவரம் (Ammed Rebellion) என்ற சொற்கள் சேர்க்கப் பட்டன. பிரிவு 356இல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் பிரகட (President’s Rule in a State) ஓராண்டுக்கு இல்லாமல் 6 மாதங்களுக்கு மட்டுமே முதல் முறையாக இருக்கும் என மாற்றப்பட்டது.

45ஆவது திருத்தம் (1980):

(பிரிவு 334) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 1990 வரை நீட்டிக்கப்பட்டது.

46ஆவது திருத்தம் (1983):

(பிரிவுகள் 269,286, 366, List I) விற்பனை வரி மாறுதல் பற்றியது.

47ஆவது திருத்தம் (1984):

(9ஆவது அட்டவணை) 14 நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

48ஆவது திருத்தம் (1984):

(பிரிவு 356) பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிக காலத்துக்கு நீட்டிக்க வழி செய்தது.

49ஆவது திருத்தம் (1985)

(பிரிவு 244, 5ம், 6ம் அட்டவணைகள்) திரிபுராவிலுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் மாவட்ட குழுமங்களுக்கு (District Council) ஆறாவது அட்டவணை மூலமாக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

50ஆவது திருத்தம் (1984):

பிரிவு 35) ஆயுதப் படையினர், காவல் துறையினர், உளவுப் பிரிவுகளில் வேலை செய்வோர், தொலை தொடர்பு பரிமாற்றம் செய்வோர் ஆகியோரது அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தல்,

51ஆவது திருத்தம் (1984):

(பிரிவுகள் 330,332) மேகாலயா, நாகாலந்து, அருணாசலப் பிரதேசம், மிசோராம் மாநிலங்களில் உள்ள அவைகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்தல்.

52ஆவது திருத்தம் (1985):

(பிரிவுகள் 101, 102, 190, 191 மற்றும் 10ஆவது அட்டவணை) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பாராளுமன்ற மாநில அவைகளின் உறுப்பினர்கள் கட்சி தாவுதலைத் தடை செய்யும் பொருட்டு எந்தெந்த காரணங்களினால் பதவி இழப்பார்கள் என்பதை விளக்கும் 10ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது.

53ஆவது திருத்தம் (1986);

(பிரிவு 371G) மத்திய அரசுக்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிசோராமின் மத சமூகப் பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கும் வகையில் பிரிவு 371G கொண்டு வரப்பட்டது. மிசோராம் ஒரு மாநிலமாக ஆகியது.

54ஆவது திருத்தம் (1986):

(பிரிவுகள் 125, 221 மற்றும் 2ஆம் அட்டவணை) உச்சநீதி மன்ற, உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டன. இரண்டாவது அட்டவணை பாகம் ஈயின் திருத்தத்தின் படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாத ஊதியம் ரூ. 10,000; மற்ற நீதிபதிகளின் ஊதியம் ரூ. 9000; உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் ரூ. 9000; மற்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 8000; எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்ட மூலமாக நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிரிவுகள் 125ம் 221ம் திருத்தப்பட்டன.

55ஆவது திருத்தம் (1988):

(பிரிவு 371-1H) அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிவு 371H சேர்க்கப்பட்டது. ஆளுாருக்கு சிறப்புரிமைகள் அளிக்கப்பட்டன. 30 உறுப்பினர் களுக்குக் குறையாத சட்ட சபை ஏற்படுத்தப்பட்டது.

56ஆவது திருத்தம் (1987):

(பிரிவு 371-1) கோவா தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. 40 உறுப்பினர்கள் கொண்டு சட்ட சபை ஏற்படுத்தப்பட்டது.

57ஆவது திருத்தம் (1987):

(பிரிவுகள் 330,332) நாகலாந்து, மேகாலயா, மிசோராம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு மக்களவையில் இட ஒதுக்கீடு செய்தலும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் சட்ட சபையிலும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்தலும் ஆகும்.

58ஆவது திருத்தம் (1987):

(பிரிவு 394/A சேர்க்கப்பட்டது) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பூர்வமான இந்தி மொழி பெயர்ப்பு வெளி யிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளித்தல்.

59ஆவது திருத்தம் (1988):

(பிரிவு 356 திருத்தப்பட்டது: பிரிவு 359A சேர்க்கப்பட்டது)

அவசரநிலைப் பிரகடனம் மூன்றாண்டுகள் வரை நடைமுறையில் இருக்கலாம். இது பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும். உள்நாட்டுக் குழப்பமும், அவசரநிலைப் பிரகடனம் பஞ்சாபில் செய்வதற்குக் காரணமாக இருக்கலாம்.

60ஆவது திருத்தம் (1988):

(பிரிவு 276) உள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் தொழில் வரியின் (Professional Tex) வரையறையை ரூ. 250லிருந்து ரூ.2500க்கு உயர்த்துதல்.

61ஆவது திருத்தம் (1988):

(பிரிவு 326) வாக்குரிமை அளிக்கும் வயது 21லிருந்து 18ஆகக் குறைத்தல்,

62ஆவது திருத்தம் (1989):

(பிரிவு 334) மத்திய மாநில அவைகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 2000 வரை நீடிப்பு.

63ஆவது திருத்தம் (1990):

பிரிவுகள் 356,359A) பஞ்சாப் மாநிலத்தில் நிலவிய கடின மான நிலைக்குத் தகுந்தவாறு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட பிரிவுகளை நீக்குதல். பஞ்சாபில் சுமூக நிலை ஏற்பட்டதை முன்னிட்டு இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

64ஆவது திருத்தம் (1990):

(பிரிவு 356) 1987இல் கொண்டு வரப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் மூன்றாண்டுகளிலிருந்து மூன்றரையாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

65ஆவது திருத்தம் (1990):

(பிரிவு 338) தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக தேசிய ஆணையம் நிறுவப்படல்: ‘பரந்த அதிகாரங்கள் அதற்கு அளிக்கப்படல்.

66ஆவது திருத்தம் (1990);

(9ஆவது அட்டவணை) 55 நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

 

67ஆவது திருத்தம் (1990):

(பிரிவு 356) பஞ்சாபில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை மூன்றரை ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு.

68ஆவது திருத்தம் (1991):

(பிரிவு 356) குடியரசுத் தலைவரின் ஆட்சியை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு,

69ஆவது திருத்தம் (1991):

(பிரிவுகள் 239AAம், 239ABம் சேர்க்கப்பட்டன) நேராட்சிப் பகுதியான தில்லியில் மாநில அவையும் அமைச்சர் குழுவும்

ஏற்படுத்துதல்.

70ஆவது திருத்தம் (1992);

(பிரிவு 54,368) மாநிலம் என்ற விளக்கத்தில் தில்லியையும் புதுச்சேரியையும் சேர்த்தல்.

71ஆவது திருத்தம் (1992):

(8ஆவது அட்டவணை) கொங்கணி, மணிப்பூரி மற்றும் நேபாளி மொழிகள் 8ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

72ஆவது திருத்தம் (1992):

(பிரிவு 332) திரிபுரா மாநில அவையில் பழங்குடி மக்களுக்குண்டான இட ஒதுக்கீடு பற்றியது.

73ஆவது திருத்தம் (1993):

(பாகம் 9, பிரிவுகள் 243, 243A லிருந்து 243-‘0’ மற்றும் 12ஆம் அட்டவணை இவை அனைத்தும் புதிதாகச் சேர்க்கப்பட்டன)
இந்தத் திருத்தம் ஒரு வரலாற்று முக்கியத் திருத்தமாகும். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஊராட்சி மன்றங்களின் அமைப்பு, செயல்முறைகள், அதிகாரங்கள் பற்றி விளக்கமான பகுதிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யப் பட்டன. இந்தத் திருத்தத்தின் மூலமாக 1956இல் நீக்கம் செய்யப் பட்ட பகுதி இன் இடம் திரப்பப்பட்டுள்ளது. புதிதாக 11ம் அட்டவணை சேர்க்கப்பட்டது.

74ஆவது திருத்தம் (1993)

(பாகம் 9A. பிரிவுகள் 2431யிலிருந்து 243 20 வரை மற்றும் 12ம் அட்டவளை இவை அணைத்தும் புதிதாகச் சேர்க்கப்பட்டன.)

பாகம் ‘ஐ அடியொட்டி நகராட்சி மன்றங்களின் அமைப்பு, செயல்முறைகள், அதிகாரங்கள் பற்றிய விளக்கமான பகுதிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யப்பட்டன. புதிதாக 12ம் அட்டவணை சேர்க்கப்பட்டது.

75ஆவது திருத்தம் (1994);

(பிரிவு 3238) வாடகை பற்றிய வழக்குகளை விசாரிப்பதற் கென்றே தனியாகத் தீர்ப்பாயங்கள் (Rent Tribunals) ஏற்படுத்தப் பட்டன. இவைகளின் தீர்ப்புகளை எதிர்த்த முறையீடுகள் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே செய்ய முடியும்.

76ஆவது திருத்தம் (1994);

(9ஆவது அட்டவணை) எண் 237A சேர்க்கப்பட்டது) தமிழ் நாடு அரசின் பின்தங்கிய வகுப்பினருக்கு 69% இட ஒதுக்கீடு செய்துள்ள சட்டம் ஒன்பதாம் அட்டவனையில் சேர்க்கப்படல், இதனால் இந்தச் சட்டம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படாமல் இருக்க வழி வகுக்கப்பட்டது.

78 ஆவது திருத்தம் (1995);

(9ம் அட்டவணை) 27 புதிய சட்டங்கள் 9ம் அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

79ஆவது திருத்தம் (2000):

(பிரிவு 334) தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு மத்திய மாநில அவைகளில் இட ஒதுக்கீடு 2010 வரை நீட்டித்தல்.

80ஆவது திருத்தம் (2000);

(பிரிவுகள் 269, 270, 272) மத்திய மாநில அரசுகள் வரி விதிப்பது மற்றும் வரி பங்கீடு பற்றியது.

81ஆவது திருத்தம் (2000);

(பிரிவு 16 உட்பிரிவு 4B சேர்த்தல்) தாழ்த்தப்பட்ட பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்ட முந்தைய வருட காலியிடங்கள் வருகிற ஆண்டுகளில் உள்ள 50% இட ஒதுக்கீடு வரையறைக்கு உட்படாமல் இருத்தல்.

82ஆவது திருத்தம் (2000):

(பிரிவு 335) தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் களுக்கு பதவி உயர்வின் போதும் தகுதிகளை நெகிழ்ச்சி செய்து கொள்ளலாம் எனல்.

83ஆவது திருத்தம் (2000);

(பிரிவு 243M) ஊராட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக

84ஆவது திருத்தம் (2002):

(பிரிவுகள் 55,81, 82, 170, 330,332) 2026க்கு பின்னால் எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கின்படி பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்குண்டான இடஒதுக்கீடு மாற்றப்படலாம்.

85ஆவது திருத்தம் (2002):

(பிரிவு 16, உட்பிரிவு 4A) (Effective From June 17, 1995) தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வரும் பொழுது அவர்களது பணி மூப்பு நிலையும் (Seniority) பாதுகாக்கப்படும்.

86ஆவது திருத்தம் (2002):

(பிரிவு 21A, 45, 51A, (k)) சேர்க்கப்பட்டன. பிரிவு 45 திருத்தப் பட்டது. கல்வி கற்கும் உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது (215). குழந்தையின் ஆறு வயதிலிருந்து 14 வயது வரை கல்வி வாய்ப்புகளை அளிக்க வேண்டியது. பெற்றோர் அல்லது பாதுகாவலரது கடமையாகும் (51A(k)). ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன்களையும் கல்வி வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர அரசு முயல வேண்டும்.

87ஆவது திருத்தம் (2003):

(பிரிவுகள் 81,82, 170, 330) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கென மக்களவையிலும், மாநில கீழ் அவைகளிலும் இருக்கும் இட ஒதுக்கீடு 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மாற்ற வேண்டியதில்லை. 2026க்குப் பிறகு வரும் சென்ஸல் அடிப்படையில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டும்.

88ஆவது திருத்தம் (2004):

(பிரிவு 268A. 270, 7ஆவது அட்டவணை) மத்திய அரசு சேவை வரி விதிப்பதும் அதை மத்திய, மாநில அரசுகள் பங்கீட்டு கொள்வதும் பற்றியன.

89ஆவது திருத்தம் (2003):

(பிரிவு 338,338A) பழங்குடி மக்கள் நலனுக்காக தேசிய ஆனையம் ஏற்படுத்துதல்: அதன் அமைப்பு செயல்முறைகள் அதிகாரங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்தல்.

90ஆவது திருத்தம் (2003);

(பிரிவு 332) அஸ்ஸாம் மாநில அவையில் போடோ பகுதியினரின் பிரதிநிதித்துவம் பற்றியது.

91ஆவது திருந்தம் (2004);

(பிரிவுகள் 75, 164, 361B மற்றும் 10ஆவது அட்டவணை) மத்திய அமைச்சர் குழுவின் அதிகபட்ச எண்ணிக்கை, மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும். ஒரு மாநிலத்தின் அமைச்சர் குழுவின் எண்னணிக்கை 12க்கு குறையா மலும் மாநிலத்தின் கீழவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை யில் 15%க்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஓர் உறுப்பினர் தகுதி இழந்தால், அவர் தளது சாதாரணமாக பதவி முடியும் காலம் வரையில் அல்லது மறுபடி யும் தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக சம்பளம் வரக் கூடிய பதவி வகிக்கக் கூடாது.

92ஆவது திருத்தம் (2004):

(8ஆவது அட்டவனை) போடோ, டோக்ரி, மைதிலி, சாத்தியி மொழிகள் எட்டாவது அட்டவனையில் சேர்க்கப்பட்டன.

93ஆவது திருத்தம் (2006);

(பிரிவு 15(5) சேர்க்கப்பட்டது) சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களைத் தவிர, அரசு நிதியுடளோ அல்லது நிதி யுதவி இல்லாமலேயோ நடக்கும் தனியார் கல்வி நிலையங் களிலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு உண்டு.

94ஆவது திருத்தம் (2006):

(பிரிவு 164) இத்திருத்தத்தின்படி சத்திஸ்கார், ஜார்க்கெண்ட், ம.பி., ஒரிஸ்ஸா மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலனைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சர் இருக்க வேண்டும்.

95ஆவது திருத்தம் (2010):

(பிரிவு 334) மக்களவையிலும் மாநிலங்களின் கீழ் அவை. யிலும் தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்புனர் இற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குண்டான இட ஒதுக்கீடு 2020 வரை நீட்டித்தல்.

96ஆவது திருத்தம் (செப்டம்பர் 2011):

எட்டாவது அட்டவணையில் ஓரியா என்ற சொல் ஒடியா என்ற சொல்லாக மாற்றப்பட்டது.

97ஆவது திருத்தம் (ஜனவரி 2012):

பாக 9B,பிரிவுகள் 243 ZHலிருந்து 243 Z[ வரை சேர்க்கப் பட்டன. பகுதி 4 (வழி நடத்தும் கொள்கைகள்)ல் பிரிவு 43ஆ சேர்க்கப்பட்டது)

பகுதி 9, 9.அ – இவைகளை அடியொட்டி கூட்டுறவுச் சங்கங் களின் அமைப்பு, செயல் முறைகள் பற்றிய விளக்கமான பகுதிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யப்பட்டன.

98ஆவது திருத்தம் (ஜனவரி 2013):

பிரிவு 371J சேர்க்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் கர்நாடகப் பகுதியை முன்னேற்றத் தேவையான நடவடிக்கை எடுக்க கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளித்தல்.

99ஆவது திருத்தம் (டிசம்பர் 2014)

National Judicinl Appointments Commission அமைவதற்கான சட்டத்திருத்தம்.

100ஆவது திருத்தம் (மே 2015)

பங்களாதேஷ் – இந்தியா இடையிலேயான Land Boundary Agreement.

குறிப்பு : மேலும் பல்வேறு விஷயங்களை பற்றிய அரசியல் சட்டத் திருத்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

read more…

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply