COMMITTEES OF PARLIAMENT

Table of Contents

பாராளுமன்ற நடைமுறைகள்

 

கேள்வி 1. அவைகளில் கேள்வி நேரம் (Question Hour) எப்பொழுது இருக்கும்?

பதில் :- பகல் 11 முதல் 12 வரை.

 

கேள்வி 2. கேள்விகள் எத்தனை வகைப்படும்?

பதில் :- அவைகளை விளக்கு. கேள்விகள் விண்மீன் குறியிட்ட கேள்விகள் (Starred Ques tions), விண்மீன் குறியிடாத கேள்விகள் (Unstarred Questions) என இருவகைப்படும்.

விண்மீன் குறியிட்ட கேள்விகள் ஒரு நாளில் 20 கேள்விகள் இருக்கும். அமைச்சர்கள் இந்தக் கேள்விகளுக்கு அவையில் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும். உறுப்பினர்கள் அமைச்ச ரிடம் விளக்கங்கள், கேள்விகள் (Supplementaries) கேட்கலாம்.

கேள்விகளை அனுமதிக்கவோ மறுக்கவோ அவைத் தலைவர் களுக்கு உரிமை உண்டு.

 

கேள்வி 3.குறுகிய கால வரையறைக் கேள்விகள் (Short Notice Questions) என்றால் என்ன?

பதில் :- உறுப்பினர்கள் கேள்விகளைப் பத்து நாட்களுக்கு முன்னால் கேட்க வேண்டும். ஆனால் முக்கியமான பொது நிகழ்வுகளைப் Matters of Urgent Public Importance) பற்றி பத்து நாட்கள் வரையறை கொடுக்க முடியாவிட்டால் உறுப்பினர்கள் குறுகிய கால் கால வரையறைக் கேள்விகள் கேட்கலாம்.

 

கேள்வி 4. ஜிரோ அவர்’ (Zero Hour) என்றால் என்ன ?

பதில் :- கேள்வி நேரம் (11 AM. To 12 AM) முடிந்த உடன் உள்ள ஒரு மணி நேரம் (12 Noon to 1.00 PM) Zero hour என்றழைக்கப் படும். இது Zero hour-இல் (Zero hour at 12.00 Noon) ஆரம் பிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் குறிப்பாக மிகவும் முக்கிய பொது விஷயங்களைப் பற்றி உறுப்பினர்கள்

அவையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம்.

 

கேள்வி 5. ஒத்தி வைப்புத் தீர்மானம் (Adjournment Motion) என்றால் என்ன?

பதில் :- மிகவும் முக்கியமான பொது விஷயத்தைப் பற்றிக் கருத்துரை யாடல் வேண்டும்; அதற்காக அவையை ஒத்திப் போட வேண்டும். என்று 50க்கும் குறையாத உறுப்பினர்களால் கொண்டு வரப் படும் தீர்மானம் ஒத்தி வைப்புத் தீர்மானம் ஆகும். அவை தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுத்தால், கருத்துரையாடல் நடக்கும்; பின் வாக்கெடுப்பும் இருக்கும். பொதுவாக ஒத்தி வைப்புத் தீர்மானம் அரசின் செயல்பாடுகளின் குறைகளை எடுத்துக் காட்டுவதால் அரசு தீர்மானத்தைத் தீவிரமாக எதிர்க்கும்.

 

கேள்வி 6. கவன ஈர்ப்புத் தீர்மானம் (Calling Attention Motion) என்றால் என்ன?

பதில் :- இதுவும் அண்மையில் நடந்த மிகவும் முக்கியமான பொது விஷயத்தைப் பற்றி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு உண்டான ஒரு வழியாகும். ஒத்தி வைப்புத் தீர்மானத்தைப் போல முறை யான கருத்துரையாடல் வாக்கெடுப்பு கிடையாது.

கவன ஈர்ப்புத் தீர்மானம் அவையில் அனுமதிக்கப்பட்ட பின்பு பேசப்படும் பொருளுக்கு உண்டான துறையைச் சார்ந்த அமைச்சர் ஒரு சிறிய விளக்கவுரை அளிப்பார். உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கலாம். அமைச்சர் பதிலளிப்பார். ஒரு நாளில் அதிகப்படியாக இரண்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்களை மட்டுமே அவை ஆலோசிக்கும்.

 

கேள்வி 7. அரை மணி நேரக் கருத்துரையாடல் (Half an hour discussion) என்றால் என்ன?

பதில் :- அண்மையில் கேட்கப்பட்ட விண்மீன் குறியிட்ட அல்லது குறியிடாத கேள்விகளின் அடிப்படையில் முக்கியமான பொது விஷயங்களைப் பற்றி அரைமணி நேரக் கருத்துரையாடல் நடத்து மாறு உறுப்பினர்கள் கோரலாம். பொதுவாக வாரத்தில் மூன்று நாட்கள் மன்றத்தின் கடைசி அரைமணி நேரம் இதற்காக ஒதுக்கப்படும். உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிப்பார்.

 

கேள்வி 8. மக்களவையில் விதி 377இன் கீழ் கேட்கப்படும் விஷயம் பற்றிக் கூறுக.

பதில் :- கேள்விகள், குறுகிய கால வரையறைக் கேள்விகள், கவன ஈர்ப்புத் தீர்மானம் மற்றும் தீர்மானங்களில் கேட்க முடியாத

விஷயங்களை மேலே கண்ட விதியின்படி அவையில் எழுப்பலாம்.

மத்திய அரசு சம்பந்தப்பட்ட, ஏற்கனவே அந்தக் கூட்டத் தொடரில் கேட்கப்படாத, நீதி மன்றங்களில் நிலுவையில் இல்லாத விஷயங்கள் பற்றி அவையில் கொண்டு வரப்படலாம். ஆனால் விஷயம் ஒரே ஒரு பொருளைக் கொண்டதாக இருக்க வேண்டும். பொதுவாக எழுத்து மூலமாக, சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒரு மாதத்துக்குள் உறுப்பினருக்குப் பதில் அளிப்பார்.

பாராளுமன்றக் குழுக்கள் (Committees of Parliament)

 

கேள்வி 1. பாராளுமன்றக் குழுக்களின் வகைகளைக் கூறுக.

பதில் :- பாராளுமன்றத்துக்கு வரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இரு அவைகளும் முழுமையாகக் கூடிக் கருத்துரையாடல் செய்வது என்பது இயலாத செயல். ஆதலால் அவைத் தலைவர் களால் அல்லது அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களைக் கொண்ட சிறு குழுக்கள் குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி தீராய்வு செய்து அவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.குழுக்களை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட நிரந்தரக் குழுக்கள் (Standing Committees) (எ.கா) பொதுநிதித் தணிக்கைக் குழு (Public Accounts Committee), வரவு செலவுக் கொள்கை மதிப்பீட்டுக் குழு (Estimates Committee) போன்றவை.

துறைகள் சம்பந்தமான குழுக்கள் (Department related Parliamentary Committees) நாலைந்து துறைகளுக்குச் சேர்ந்து ஒரு குழு இருக்கும். (எ.கா) அறிவியல் தொழில் நுட்பக் குழு, தொலைபேசித் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பக் குழு, பணியாளர் நலன், சட்டம், நீதிக் குழு போன்றன.

ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு (Adhoc Committee) அவையில் அறிக்கை சமர்ப்பித்தவுடன் குழுவின் செயல்கள் முடிந்து விடும்.

 

கேள்வி 2. பொது நிதித் தணிக்கைக் குழு (Public Accounts Committee) வின் செயல்களை விவரி.

பதில் :- 15 மக்களவை உறுப்பினர்களையும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களையும் கொண்டு விளங்கும் இந்தக் குழுவின் தலைவராக நடைமுறையில் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்படுவார். இக்குழு அரசு செய்த வரவு செலவு களையும், முதன்மைத் தணிக்கை அலுவலர் அறிக்கையையும் (Report of the Comptroller and Auditor General) ஆய்வு செய்யும். பாராளுமன்றம் அனுமதி அளித்தவாறு செலவுகள் செய்யப் பட்டுள்ளனவா மற்றும் செயல் முறை ஒழுங்கீனங்கள் (Procedural segularities) தடந்துள்ளனவா என்பதையும் கவனிக்கும். நிதி உபயோகிப்பதில் வீண் விரயம், திறமையின்மை, ஊழல், நடைமுறைக் குறை பற்றியும் ஆய்ந்தறிந்து அறிக்கை அளிக்கும்.

 

கேள்வி 3. மதிப்பீடு ஆய்வுக் குழுவின் (Estimates Committee) பணிகள் யாவை?

பதில் :- 30 மக்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் குழு, துறைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி, துறைகளின் கொள்கை (Policy)களுக்கேற்ப நிரவி (Well laid out) செலவிடப் பட்டுள்ளதா, துறைகள் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப் படையில் நன்கு செயல்படுவதற்காக என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் ஆய்வு செய்யும். துறைகள் எந்த முறையில் வரவு செலவு மதிப்பீடுகளை அவைகளுக்கு அளிக்கலாம் என்பது பற்றியும் ஆய்ந்து அறிக்கை அளிக்கும்.

உறுப்பினர்கள் மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். குழு ஓராண்டுக்குச் செயல்படும். குழுவின் தலைவரை மக்களவைத் தலைவர் நியமிப்பார்.

 

கேள்வி 4. மற்ற சில குழுக்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுக.

பதில் :- பொதுத் துறை செயல் ஆய்வுக்குழு (Committee on Public Undertaking): 15 மக்களவை உறுப்பினர் களையும், 7 மேலவை உறுப்பினர்களையும் கொண்ட இந்தக் குழு, பொதுத் துறை நிறுவனங்களின் ஆண்டு வரவு, செலவு, செயல் அறிக்கைகளையும் தலைமைக் கணக்காயர் (C&AG) அறிக்கையையும் ஆய்வு செய்து அறிக்கைகள் தரும். பொதுத் துறை நிறுவனங்கள் தீர்க்கமான வணிகக் கொள்கை (Sound Business Principles)களுடனும், விவேகமான வணிக நடைமுறைக ளுடனும் (Prudent Commercial Practices) செயல்படுகிறதா எனக் குழு ஆய்ந்தறிந்தும் அவ்வப்போது நிறுவனங்களுக்கு நேரிடை யாகச் சென்றும் அவைகளுக்கு அறிக்கை தரும்.

அவைச் செயல் தீர்மானிப்புக் குழு (Business Advisory Committee) : ஒவ்வொரு அவைக்கும் தனித்தனிக் குழூ இருக்கும். அவையில் அரசு சார்பில் கொண்டு வரும் மசோதாவுக்கும் மற்ற செயல்களுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும்.

அரசு சட்ட ஆய்வுக் குழு (Committee on Subordinate Legislation): பாராளுமன்றம் கொடுத்த உரிமைகளின் பேரில் அரசு நிர்வாகம் (Executive) இயற்றிய சட்டம் அல்லது விதிமுறைகள் ஒழுங்காக, கொடுக்கப் பட்ட உரிமைகளின் அடிப்படையில் உள்ளதா மீறல் உள்ளதா என ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும். மிதமிஞ்சிய உரிமை (Excessive Delegation) அளிக்கப்பட்டுள்ளதா எனவும் ஆயும்.

பொது மக்கள் விண்ணப்பம் ஆய்வுக் குழு (Committee on Petitions): அரசு நிர்வாகத்தில் நடக்கும் குறைகளைப் பற்றியோ அதைச் சீர்திருத்த உண்டான வழிமுறைகளைப் பற்றியோ பொது மக்கள் தனியாகவோ குழுக்களாகவோ விண்ணப்பங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் அதை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கைகள் அளிக்கும்.

உறுதி மொழி பூர்த்தி ஆய்வுக் குழு (Committee on Govt. Assurance): துறைகள் பாராளுமன்றக் கேள்விகளுக்கு குறுகிய காலத்தில் பதில் அளிக்க வேண்டும்; சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க நேரம் இல்லாத போது அவைகளுக்கு பதிலை கேள்வி நாள் கழிந்த பின் தருகிறேன் என்று துறையைச் சார்ந்த அமைச்சர் அவையிடம் உறுதிமொழி கூறுவார். அத்தகைய உறுதிமொழி கூறப்பட்ட கேள்விகளுக்கு முறையான வகையில் பதில் அவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை இக்குழு ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

சிறப்புரிமை முரண் ஆய்வுக் குழு (Committee on Privileges): பாராளுமன்றத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளுக்கு முரணாக செயல்பட்ட விஷயங்களைப் பற்றி இக்குழு ஆய்ந்து அவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

பொதுவான நடைமுறைகள்

கேள்வி1. பாராளுமன்றத்தின் நடைமுறை மொழிகள் யாவை?

பதில் :- இந்தியும் ஆங்கிலமும் பாராளுமன்றத்தின் நடைமுறை மொழிகள் ஆகும். இருந்த போதிலும் ஓர் உறுப்பினர் ஆங்கிலத் தீலும், இந்தியிலும் புலமை இல்லாவிட்டால் அவைத் தலைவர் அனுமதியுடன் தனது மொழியில் அவையில் பேசலாம் (பிரிவு- 120)

 

கேள்வி 2. பொதுவான நடைமுறைகளைப் பற்றி சிறு குறிப்பு தருக:

பதில் :- இரு அவைகளும், அவை நடவடிக்கைகளுக்காக விதிமுறை களை அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு, தாங்களாகவே இயற்றிக் கொள்ளலாம். இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கும், இரு அவைகளும் தொடர்பு கொள்வதற்கு உரிய விதிமுறைகளையும் குடியரசுத் தலைவர் உருவாக்கலாம். நிதி பற்றிய நடவடிக்கைகள் எடுக்க ஒழுங்குமுறை விதிகளையும் அவைகள் தாமே இயற்றிக் கொள்ளலாம்.

உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகளின் பதவி விலக்கல் தீர்மானம் (Inpeachment) தொடர்பாகத் தவிர நீதிபதிகளின் நடவடிக்கைகள் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தல் கூடாது. இதே போன்று நீதிமன்றங்களும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் தலையிடாது.

 

மேலும் படிக்க…

https://www.highrevenuegate.com/rxwt2dmah?key=9cef5b556ad5cff4bf1e82cd2dab264b

Leave a Reply