ASSISTANT JAILOR – INDIAN CONSTITUTION
முன்னுரையும் முகப்புரையும்
(Introduction and Preamble)
Questions 1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் யாரால் தயாரிக்கப்பட்டது?
Answer:-இதற்கென்றே தனியாக அமைச்சரவைத் தூதுக் குழுவின் திட்டத்தின் (Cabinet Mission Plan) அடிப் படையில் 1946இல் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு மன்றத்தினரால் (Constituent Assembly) தயாரிக்கப்பட்டது. இம்மன்றத்தில் 389 உறுப்பினர்கள்இருந்தனர்.
Question 2. அரசியலமைப்பு மன்றத்தின் தலைவர் யார்?
Answer:-முதன் முதலில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தற்காலிகத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் டாக்டர் இராஜேந்திர பிரசாத் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆனார்.
Question 3. துணைத் தலைவர் யார்?
Answer:-.C. மூகர்ஜி
Question 4. அரசியலமைப்புச் சட்டத்தயாரிப்பில் டாக்டர் அம்பேத்காரின் பங்கு என்ன?
Answer:-டாக்டர் அம்பேத்கார் சட்ட முன் வடிவு தயாரிக்கும் குழுவின்(Drafting Committec) தலைவராக இருந்தார்.
Question 5. மன்றத்தின் அரசியலமைப்பு ஆலோசகர் (Constitutionnl Advisor) யார்?
Answer :-B.N.ராவ்.
Questions 6. அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் பற்றிய தீர்மானத்தை (Objectives Resolution) மன்றத்தில் கொண்டு வந்தவர் யார்?
Answer:-ஜவஹர்லால்நேரு.
Questions 7.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் யார்?
Answer:-டாக்டர் அம்பேத்கார்.
Questions 8. அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிக்க அரசியலமைப்புமன்றம் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது?
Answer:-2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்.
Questions 9. உலகின் மிக நீளமான அரசியலமைப்புச் சட்டம் எந்த நாட்டைச் சார்ந்தது?
Answer:-இந்தியாவைச் சார்ந்தது.
Questions 10.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை பிரிவுகளும்(Articles) அட்டவணைகளும் (Schedules) உள்ளன?
Answer:-395 பிரிவுகளும் 12 அட்டவணைகளும் உள்ளன. (அரசியலமைப்பு ஆரம்பிக்கும் பொழுது 8 அட்டவணைகள் மட்டுமே இருந்தன).
Questions 11. அரசியலமைப்புச் சட்டம் எப்போது அரசியலமைப்புமன்றத்தால் (Constituent Assembly) ஒப்புக் கொள்ளப்பட்டது?
Answer:-நவம்பர் 26, 1949.
Questions 12.எந்த நாளிலிருந்து அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
Answer:-ஜனவரி 26, 1950.
Questions 13. அரசியலமைப்புச் சட்டம் முகப்புரை (Preamble) அரசிய லமைப்புச் சட்டத்தின் பகுதியா?
Answer:-ஆம்.
Questions 14. முகப்புரை திருத்தம் செய்யப்பட்டுள்ளதா? எப்பொழுது?
Answer:-1976இல் 42ஆவது திருத்தம் மூலமாக ‘சமதர்ம’ (Socialist) ‘சமயச் சார்பற்ற’ (Secular) மற்றும் ‘ஒருமைப்பாடு’ (Integrity) என்றுமூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன. (3-1-77 முதல் நடை முறைக்கு வந்தது.) முகப்புரையில் ஒரே ஒருமுறை மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Questions 15. அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடி (Soul) என்றழைக்கப் படுவது எது?
Answer:-முகப்புரை.
Questions 16.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் மற்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் (அ) நடைமுறைகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றிக் குறிப்பிடவும்?
Answer:-
a) அடிப்படை உரிமை உச்ச நீதிமன்றம். நீதித்தீராய்வு (Judicial Review), குடியரசுத் துணைத் தலைவர் பதவி அமெரிக்கா
b) வழிநடத்தும் கொள்கைகள் (Directive Principles)
அயர்லாந்து
c) அடிப்படைக் கடமைகள் – ஒருங்கிணைந்த சோவியத்
ரஷ்யா
d) பாராளுமன்ற முறை அரசியலமைப்பு, சட்டமியற்றும் முறை, சிறப்புரிமைகள் (Privileges) -இங்கிலாந்து
e) அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் – தென் ஆப்பிரிக்கா
f) அவசர நிலை நிபந்தனைகள் – ஜெர்மனி g) ஒருங்கிணைந்த அட்டவணை (Concurrent list) ஆஸ்திரேலியா
t) கூட்டாட்சி முறை (Federalism) – கனடா
Questions 17. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூலாதாரமாக (Source) விளங்குவது யார்?
Answer:-இந்தியக் குடிமக்கள்.
Questions 18.இந்தியாவிற்குத் தனியாக ஒரு அரசியலமைப்புச் சட்டம் வேண்டுமென முதன் முதலில் கூறியவர் யார்?
Answer:-M.N. ராய்
Questions 19.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் குறிப்பிடத் தக்க அம்சங்கள் யாவை?
Answer:-எழுத்து வடிவமான அரசியலமைப்புச் சட்டம், சுய ஆதிக்கம் உடைய ஜனநாயகக் குடியரசு, பாராளுமன்ற முறை அரசாங்கம், கூட்டாட்சி முறையும் ஒருமைத் தன்மையும் நிறைந்த அரசியல் சட்டமைப்பு, உறுதித் தன்மை (rigidity)யும், நெகிழ்ச்சித் தன்மை (flexibility)யும் கொண்ட சட்டமைப்பு, அடிப்படை கடமைகள், நீதித் துறையின் சுதந்திரத் தன்மை, மதச் சார்பற்ற அரசியலமைப்பு, ஒற்றைக் குடியுரிமை, வேறுபாடின்றி வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டுரிமை, அனைத்திந்தியப் பணிகள் போன்றவை.
பகுதி – 1
யூனியனும் அதன் நிலப் பகுதிகளும்
(The Union and its Territories)
(பிரிவுகள் 1-4)
கேள்வி1. அரசியலமைப்புச் சட்டத்தில் நமது நாட்டின் பெயர் எவ்வாறுகுறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்:-இந்தியா, அதாவது பாரதம், பல மாநிலங்களின் ஒன்றியமாகும். (Union of States) – (பிரிவு – 1)
கேள்வி 2. ஏற்கெனவே இருக்கும் பகுதிகளிலிருந்து புதிதாக ஒரு மாநிலத்தை ஏற்படுத்தவோ, ஏற்கெனவே இருக்கும் மாநிலத்தின் பரப்பைக் கூட்டக் குறைக்கவோ, எல்லைகளை மாற்றவோ மாநிலத்தின் பெயரை மாற்றவோ யாருக்கு அதிகாரம் உண்டு?
பதில் :-குறிப்பிட்ட மாநிலங்களோடு கலந்தாலோசித்து குடியரசுத் தலைவரின் பரிந்துரையோடு பாராளுமன்றம் இதற்கெனச் சட்டம்இயற்றலாம்.
கேள்வி 3. புதிதாக ஒரு பகுதியை இந்திய மாநிலமாக சேர்க்கவும் (எ.கா. சிக்கிம்) அல்லது புதிதாக ஒரு மாநிலத்தை ஏற்படுத்தவும்(எ.கா. கோவா) யாருக்கு அதிகாரம் உண்டு?
பதில்:-பாராளுமன்றத்திற்குச் சட்டம் மூலமாக.
கேள்வி 4. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
பதில்:-29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
கேள்வி 5. மொழி வாரியாக அமைக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
பதில்:-ஆந்திரப் பிரதேசம் (1953).
கேள்வி6.எந்த ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன?
பதில்:-1956.
பகுதி – 2
குடியுரிமை (Citizenship)
(பிரிவுகள் 5-11)
கேள்வி 1. இந்திய குடியுரிமையைப் பற்றி எந்தச் சட்டம் தெளிவுபடுத்துகிறது?
பதில்:-குடியுரிமைச் சட்டம், 1955.
கேள்வி2. இந்தியக் குடியுரிமையை எந்தெந்த வழிகளில் பெறலாம்?
பதில்:-
பிறப்பு, வழிவழி வாரிசு (Descent), பதிவு (Registration), நீண்ட காலம் தங்கி இருந்து குடியுரிமை பெறுதல் (Naturalization),
புதிதாகப் பகுதி இந்தியாவில் சேரும் பொழுது அப்பகுதியைச் சார்ந்தவர்கள் போன்ற வழிகளில் குடியுரிமை பெறலாம்.
இந்தியக் குடியுரிமை பெற்றவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்தாலும், வெளிநாட்டினரின் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தாலும் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
கேள்வி 3. குடியுரிமை எந்தெந்த வழிகளில் அரசு ரத்து செய்யலாம்?
பதில்:-
அயல்நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த காரணத்தால் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று ஒருவர் கூறினாலும், குடியுரிமை யைத் தவறான வழிகளில் பெற்றிருந்தாலோ, இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணினாலோ, போர்க் காலங்களில் எதிரி நாட்டுடன் வியாபார உறவுகள் வைத்துக் கொண்டாலோ, குடியுரிமை பதிவு பண்ணிய ஐந்து ஆண்டு களுக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு சிறைத் தண்டனை பெற்றாலோ, இந்தியக் குடிகள் இந்தியக்
குடியுரிமை வேண்டும் என்று கூறாமல் எழு ஆண்டுகள் இந்தியா விற்கு வெளியிலே தொடர்ந்து தங்கியிருந்தாலும் குடியுரிமையை ரத்து செய்யலாம். தன் விருப்பப்படியே பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற
வர்கள் அரசியல் சட்டப்படி இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது.
கேள்வி 4. இந்தியக் குடியுரிமையின் ஒரு சிறப்பு அம்சம் என்ன?
பதில்:-
ஒரு சில நாடுகளில் மாநிலங்களுக்கெனத் தனிக் குடியுரிமை யும் நாடு முழுமைக்குமெனத் தனிக் குடியுரிமையும் இருக்கும்
(Dual Citizenship). இந்தியாவில் ஒரே குடியுரிமை தான் உண்டு.
கேள்வி 5. இந்தியக் குடியாக இருப்பவர்களுக்குண்டான சிறப்புச்சலுகைகள் என்ன?
பதில்:-
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள், உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்ற பதவிகள் இந்தியக் குடிகளுக்கே உண்டு. பாராளுமன்ற மாநில அவை உறுப்பினர்கள் ஆவதற்கு இந்தியக் குடியாக இருக்க வேண்டும். சில அடிப்படை உரிமைகள் (எ.கா. பிரிவுகள் 15, 16, 19 போன்றன) இந்தியக் குடிகளுக்கு மட்டுமே உண்டு.
கேள்வி 6. இந்திய வம்சா வழியினர் இந்தியாவிலும், ஒரு சில வெளி நாட்டிலும் ஒரே நேரத்தில் குடியுரிமை வைத்துக் கொள்ள வழிமுறை செய்துள்ள சட்டம் எது?
பதில்:-குடியுரிமைச் சட்டம் 2003.
பகுதி – 3
அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
(பிரிவுகள் 12-35)
கேள்வி 1. அடிப்படை உரிமைகள் என்பன யாவை? அதன் சிறப்புகள் யாவை?
பதில்:-
சமூதாயத்தில் ஒரு தனிமனிதன் எல்லா வகையிலும் முழுமை யான வளர்ச்சி பெற சில அடிப்படை உரிமைகள் தேவை. இங்கிலாந்தின் மாக்ன கார்ட்டா (Magna Carta), அமெரிக்க அரசிய லமைப்புச் சட்டத்திலுள்ள உரிமைகள் மசோதா (Bill of Rights) இவைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் கொண்டு வரப்பட்டன. முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ள உயரிய கருத்துக்களின் விளக்க வடிவமாகத் திகழ்கிறது அடிப்படை உரிமைகள் மற்றும் வழி நடத்தும் கொள்கைகளின் பகுதிகள், அடிப்படை உரிமை களுக்கு முரண்பட்ட நிலையில் உள்ள சட்டங்கள், சட்ட நிலை ஆணைகள் (Ordinances) ஒழுங்குமுறைகள், விதிகள், துணை விதிகள், அறிவிப்பு, உத்தரவு, பழக்க வழக்கங்கள் செல்லாதவை களாகக் கருதப்படும். சுதந்திரத்திற்கு முன் ஏற்பட்ட சட்டங் களிலும் அடிப்படை உரிமைகளுக்கு முரண்பட்ட நிலையில் உள்ள பகுதிகள் செல்லாதவைகளாகி விடும். அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அடிப்படை உரிமைகளுக்கு முரண்பட்ட நிலை யில் உள்ள சட்டங்களை இயற்றாது. அடிப்படை உரிமைகள் ஜம்மு காஷ்மீர் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
கேள்வி 2. அடிப்படை உரிமைகளின் பொதுப்படையான பிரிவுகள் யாவை?
பதில்:-
சமத்துவ உரிமைகள் (Right to Equality) (பிரிவுகள் 14-18),
சுதந்திர உரிமைகள் (Right to Freedom) (பிரிவுகள் 19-22),
சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பு (Right against Exploitation) (பிரிவுகள் 23-24),
மதவழிபாடு உரிமை (பிரிவுகள் 25-28),
கல்வி, பண்பாட்டு உரிமைகள் (பிரிவுகள் 29-30),
அரசியலமைப்புத் தீர்வுகள் (Constitutional Remedies) (பிரிவுகள் 32-35) ஆகியன ஆகும்.
கேள்வி 3. சமத்துவ உரிமைகளைப் (Equality) பற்றிய அடிப்படை உரிமைகள் யாவை?
பதில்:-
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; சட்டத்தின் பாதுகாப்பு
எல்லோருக்கும் சம அளவில் உண்டு. (பிரிவு 14). மதம், இனம் (Race), சாதி, ஆண், பெண் வேறுபாடு, பிறப்பிடம் இவைகளின் அடிப்படையில் அரசு நிர்வாகம் வேற்றுமை காண்பிக்காது. ஆனால் பெண்கள், குழந்தைகளுக்கு அரசு தனிச் சலுகை அளிக்கலாம். கடைகள், உண்டி, உறை நிலையங்கள், உணவகங்கள், பொழுது போக்கு இடங்கள் போன்ற பொதுவிடங்களில் சாதி வேறுபா டின்றி எல்லோருக்கும் சமஉரிமை உண்டு. கிணறுகள், குளங்கள், குளிக்கும் இடங்கள், சாலைகள், தங்கும் இடங்கள் போன்ற பொது இடங்களில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின் தங்கியுள்ள, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக அவர்கள் முன்னேற அரசு தனிச் சலுகைகள் கொடுப்பதைத் தடுக்க முடியாது. அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலோ அல்லது உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களிலோ, பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட பழங் குடியினர் வகுப்பினரை அனுமதிக்கும் பொருட்டு தனி வழிமுறைகளை அரசு ஏற்படுத்தலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங் களுக்கு இது பொருந்தாது.(பிரிவு-15) அரசின் வேலை பெறுவ தற்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மதம், இனம், சாதி, பாலினம், பாரம்பரியம், பிறப்பிடம், உறைவிடம் போன்ற வற்றைக் காரணங் காட்டி ஒருவரை அரசு வேலைக்குத் தகுதி யற்றவர் என்று கூறக் கூடாது. ஆனால் ஒரு மாநிலத்தில் அல்லதுமத்திய ஆட்சிப் பகுறியில் வேலை பெறுவதற்கு. அந்தப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று அரசு குறிப்பிடலாம். மேற்கூறிய சமயசிமை இருந்த போதிலும், அரசுப் பணிகளில் தருந்த அளவு எண்ணிக்கையில் இல்லையென்ற காரணத்தின் அடிப்படையில் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி. வகுப்பினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பணிமூப்பு நிலையுடன் கூடிய பதவி உயர்வுக்குண்டான வழிமுறைகள் அரசு வகுக்கலாம். ஒரு ஆண்டில் ஐம்பது விழுக்காடுக்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்ற நிலையில் இந்த ஆண்டில் கொண்டு வரப்பட்ட பழைய காலியிடங்களின் எண்ணிகை இந்த ஐம்பது விழுக்காட்டில் சேர்க்கப்பட மாட்டாது. ஒரு மதம் அல்லது மதப் பிரிவைச் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு அந்த மதத்தைச் சார்ந்தவர். களே நியமிக்க வேண்டுமென்றிருந்தால் அதற்குத் தடையில்லை (உ-ம்) இந்து அறநிலையத்துறை, வக்ப் முதலியன (பிரிவு 16). தீண்டாமை (Untouchability) ஒழிக்கப்பட்டு விட்டது. அது எந்த வடிவிலும் செயல்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமை யின் காரணமாகத் தகுதியின்மையாக்கல் நடவடிக்கை எதுவும் சட்டப்படி குற்றமாகும். (பிரிவு-17) அரசு பட்டங்கள் தருவது ஒழிக்கப்பட்டுள்ளது; ஆனால் தற்காப்புத் துறை மற்றும் கல்வித் துறையில் பட்டங்கள் கொடுப்பது தடை செய்யப்படவில்லை. அரசின் கீழ் நம்பகமான பொறுப்பையோ, ஊதியம் தரக் கூடிய பதவியையோ வகிக்கும் ஒருவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி எந்த அயல் நாட்டிலிருந்தும் அன்பளிப்பு, ஊதியம், பதவி ஏற்றுக் கொள்ளக் கூடாது (பிரிவு-18).
கேள்வி 4. தீண்டாமை ஒழிப்பது தொடர்பான முக்கிய சட்டம் எது?
பதில்:-
Protection of Civil Rights Act (PCRA) ஆகும்.(1955ஆம் ஆண்டு )
கேள்வி 5. இந்திரா சாஹ்னி வழக்கின் (மண்டல் வழக்கு) (AIR 1993 SC477) முக்கியத்துவம் என்ன?
பதில்:-
மைய அரசில் பின் தங்கிய வகுப்பினருக்காக அரசு வேலை களில் 27% ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து போடப்பட்ட வழக் காகும். ஒதுக்கீடு, அடிப்படையில் சரி என்று கூறிய நீதிமன்றம்,வகுப்பைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்றவர். களுக்கு 10% ஒதுக்கப்பட்டது செல்லாது எனக் கூறியது. பிற்படுத்தப்பட்டோரிலும் ஏற்கனவே முன்னேறியவர்களுக்கு (Creamy Layer) இந்த ஒதுக்கீடு செல்லாது எனக் கூறியுள்ளது.
கேள்வி 6. சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைப் உரிமைகளில் சிலவற்றைக் குறிப்பிடுக.
பதில் :-
பேச்சுரிமை, எழுத்துரிமை, ஆயுதமின்றி அமைதியாகக் கூடும் உரிமை, சங்கங்கள் அமைக்கும் உரிமை, இந்தியா முழுமைக்கும் சுதந்திரமாகத் திரிய, இந்தியாவில் எங்கு வேண்டு மானாலும் வாழ, தங்க, தனக்குப் பிடித்த தொழிலைத் தொடர அடிப்படை உரிமைகள் உண்டு.
அதே நேரத்தில் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப் பாடு, நாட்டின் பாதுகாப்பு, அயல் நாடுகளுடன் உண்டான நட்புறவு, பொது ஒழுங்கு, பண்பாடு, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு, பழங்குடியினர் நலங்காத்தல் போன்றவைகளின் மீது ஒன்றோ (அ) பலவின் காரணங்களால் அரசு நியாயமான கட்டுப்பாடுகளைச் சட்டங்கள் மூலமாக விதிக்கலாம்.
கேள்வி 7. குற்றவியல் சம்பந்தமான அடிப்படை உரிமைகள் யாவை?
பதில்:-
ஒரு குற்றம் நடக்கும் பொழுது அந்த நேரத்தில் அது சட்டத் திற்குப் புறம்பானதாக இருக்க வேண்டும். குற்றம் செய்த நேரத்தில் சட்டத்தில் உள்ள தண்டனையை விட அதிகத் தண்டனை, மாற்றியமைக்கப்பட்ட சட்டங்களினால் பழைய குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க முடியாது. தனக்குப் புறம்பாகச் சாட்சி சொல்லுமாறு யாரையும் வற்புறுத்த முடியாது (பிரிவு-20).
READ MORE,