உட்பிரிவு – 2
நிர்வாக சம்பந்தமான தொடர்புகள் (Administrative Relations)
(பிரிவுகள் 256-263)
கேள்வி 1. மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் உள்ள நிர்வாக சம்பந்தமான தொடர்புகளைக் கூறுக.
பதில் :-
மாநில அரசு வரையறை, பாராளுமன்றச் சட்டங்களையும், மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள சட்டங்களையும் சரியான முறையில் செயல்படுத்த வேண்டியதையும் உள்ளடக்கும். மத்திய அரசின் நிர்வாக வரையறையை மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசுகள் எந்தவிதத் தடையும் தடங்கலும் ஏற்படுத்துதல் கூடாது. தேவையெனில் இதற்கான வழிமுறைகளைத் (Directions) தெரிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
ஒன்றியப் பட்டியலில் உள்ள இருப்புப் பாதை, தேசிய மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொடர்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவை யான வழிமுறைகளைச் செயல்படுத்துமாறு மாநிலங்களுக்குக் கூற மத்திய அரசுக்கு உரிமை உண்டு. ஒரு தரை வழியையோ (Highways) நீர்வழியையோ தேசிய வழியாக (National High way or Water Way) ஆக்கிடும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு. இதற்கான செலவினங்களை மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்கும்.
மாநிலங்களுக்கிடையே உண்டாகும் நதிநீர்ப் பங்கீடு குறித்த தகராறுகளைத் தீர்க்க உயர்நீதி மன்றத்திற்கு இணையான நதிநீர் ஆணையங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
கேள்வி 2. மாநிலங்களுக்கிடையேயான குழு (Inter State Council)பற்றிக் கூறுக.
பதில் :-
மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தகராறுகளை விசாரிப்ப தற்கும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கூறுவதற்கும் மாநிலங்களுக்கிடையே உண்டான பொது விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும், அவைகளைப் பற்றி ஆய்ந்திடவும் அவைகளைத் திறம்படச் செயல்படுத்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்யவும் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு மாநிலங்களுக்கு இடையேயான குழுமம் (Inter State Council) ஆகும் (பிரிவு 263).
கேள்வி 3. பகுதிக் குழு (Zonal Council) பற்றிக் கூறுக.
பதில் :-
மாநிலங்கள் சீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இக்குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐந்து பகுதி களுக்கும் (வட, தென், கீழ், மேல், நடுப்பகுதிகளுக்கு) ஒவ்வொரு குழுமம் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கிடையேயான பொது விஷயங்களை விசாரிப்பதற்கும் அவைக ளிடையே நல்லுறவை வளர்ப்பதற்கும் இக்குழுமம் செயல் படுகிறது.
கேள்வி 4. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள தொடர்பு பற்றி பரிந்துரை செய்த கமிஷன் எது?
பதில் :-
சர்க்காரியா கமிஷன் (1988).
கேள்வி 5. தேசிய வளர்ச்சி ஆலோசனைக் குழு (National Development Council) ஓர் அரசியலமைப்புச் சார்ந்த அமைப்பா? Constitutional body), அதன் அலுவல் யாது?
பதில் :-
இல்லை. ஐந்தாண்டு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும், அந்தத் திட்டங்களின் செயல்முறைகளைப் பற்றி விவாதிக்க வேண்டியதும் இவ்வமைப்பின் முக்கியக் கடமைகளாகும்.
பகுதி – 12
உட்பிரிவு -1 -4
நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், வழக்குகள் பற்றியன (Finance, Property, Contracts and Suits)
பிரிவுகள் 264 -300A)
கேள்வி 1.நிதிகளைப் பற்றி பொதுவான நிலை என்ன?
பதில் :-
வரிகளை விதிப்பதும் வசூலிப்பதும் சட்டத்தின் வழிமுறை யிலே செய்யப்படும் (பிரிவு 265). சில வரிகள், தீர்வைகள் (Duties), மூலமாகக் கிடைக்கும்- எல்லா வருவாயும், அரசு எழுப்பிய கடன்களும், கொடுக்கப் பட்ட முன்தொகைகளும், கடன்களைத் திருப்பித் தந்த தொகையும் ஒன்றிய ஒருங்கிணைந்த நிதி (Consolidated fund of India) என்று குறிப்பிடப்படும். அதே போன்று மாநிலங்களில் மாநில ஒருங்கிணைந்த நிதியும் இருக்கும் (பிரிவு 266-(1)). இதைத்தவிர கிடைக்கும் பொதுப் பணம், மத்திய அரசு அல்லது மாநில அரசு பொது நிதியில் (Public Account) சேர்க்கப் படும் (பிரிவு 266-(2)),
ஒன்றிய மாநில ஒருங்கிணைந்த நிதியிலிருந்து சட்டம் வழியாக அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து குறிப்பிட்டவாறே நிதி எடுக்கப்படும்.மத்திய, மாநில அரசுகளின் அவசரத் தேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அவசர நிலை நிதியாக (Contingency Fund) இருக்கும். ஒரு குறிப்பிட்ட எதிர்பாராத செலவுக்காக வரவு செலவு நிதி (Budget)யில் பணம் ஒதுக்கப்படாமல் இருந்து பணம் செல வழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதிலிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் பணம் எடுத்துச் செலவழித்த பின்பு அந்தந்தத் துறைகள் நிதி அமைச்சகம் மூலமாகப் பாராளுமன்றத் திற்குச் சென்று அவர்கள் ஒப்புதலுடன் நிதி வாங்கி மறுபடியும் அவரச நிலை நிதியில் பணம் திருப்பிச் சேர்ப்பிப்பார்கள் (பிரிவு 267). மாநிலங்களிலும் இதே முறை பின்பற்றப்படும்.
கேள்வி 2. மத்திய அரசு மாநில அரசுகளுக்கிடையே வருவாய் பகிர்ந்து கொள்ளும் முறைகளை விளக்கு.
பதில் :-
முத்திரைத் தாள் மற்றும் ஆல்கஹால் அல்லது போதைப் பொருள் (Narcotics) கலந்த மருத்துவ அல்லது கழிவறைப்
பொருட்கள் போன்றனவற்றிற்கு வரி விதிப்பது மத்திய அரசு; வசூலிப்பதும், அப்பணத்தை உபயோகித்துக் கொள்ளுவதும் மாநில அரசுகள்.
மாநிலங்களுக்கிடையே நடக்கும் வாங்கக் கூடிய, விற்பனை செய்யக் கூடிய பொருள்கள் மீதான வரி ஒன்றியத்தினால் போடப் பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கிடையே இதற்கென இருக்கும் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும்.
ஒன்றியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மீதான வரிகள், தீர்வைகள் ஒன்றியத்தால் வசூலிக்கப்பட்டு நிதிக் குழுவின் பரிந்துரையின்படி மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப் படும்.
ஒன்றியத்தின் வரையறைக்குள் உள்ள வரிகளின் மீது கண்டத் தீர்வை (Surcharge) விதிக்கப்படும் பொழுது அது ஒன்றிய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும்.
மாநிலங்களுக்கு பங்கீடு கிடைக்க வகை செய்யும் மத்திய அரசால் விதிக்கப்படக் கூடிய வரிகளில் மாற்றம் செய்யும் முன்பும், வேளாண்மை வருமானத்தின் விளக்கங்களில் மாறுதல் செய்யும் முன்பும், மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வருமுன் குடியரசுத் தலைவரின் முன் அனுமதி வேண்டும்.
குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பாராளுமன்றம் சட்டம் வழியாக ஒரு குறிப்பிட்ட தொகையை மானிய உதவியாக (Grants-in-aid) வழங்கும். வெவ்வேறு மாநிலங்களுக்கு நிதி வெவ்வேறு அளவில் இருக்கும். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளை முன்னேற்றம் செய்வதற்கும் மத்திய அரசு மாநிலங்களுக்கு மானியம் அளிக்கும்.
மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கா தொழில்கள், வர்த்தகங்கள், பணிகள் மீது வரி விதிக்க மாநிலங் களுக்கு அதிகாரம் உண்டு. இது ஒரு வருமான வரியாகும். ஆதலால் மாநிலங்களுக்கு உரிமை கிடையாது எனக் காரணம் காட்டி வழக்குத் தொடர முடியாது.
கேள்வி 3. நிதி ஆணையம் (பிரிவு 280) யாரால் அமைக்கப்படுகிறது? தற்பொழுது எந்த நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் செயலாக்கத்தில் உள்ளது?
பதில் :-
நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத- தலைவரால் அமைக்கப்படுகிறது. தற்பொழுது 13ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் (2010-2015) செயலாக்கத்தில் உள்ளது. 14ஆவது நிதி ஆணையம் சமீபத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 2015-2020இல் செயலாக்கம் செய்வதற்கான தனது பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும்.
கேள்வி 4. நிதி ஆணையத்தின் பணிகள் யாவை?
பதில் :-
நிதி ஆணையம் குடியரசுத் தலைவருக்குக் கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றிய தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் (பிரிவு 280).
அ) மத்திய அரசு மாநில அரசுகளுக்கிடையே பிரிக்கக் கூடிய வருவாய், வரி இவற்றின் விகிதாச்சாரம் பற்றியும்;
ஆ) ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப் படும் மானிய உதவித் தொகை வழங்கும் முறைகள் பற்றியும்:
(இ) நகர்மன்றங்கள் ஊராட்சி மன்றங்களுக்கு மாநிலங்கள் நிதி
ஒதுக்கிட மாநில ஒருங்கிணைந்த நிதியின் வருவாயைப் பெருக்
கிடும் வழிமுறைகளைப் பற்றியும்; ) தகுந்த நிதிநிலை இருக்கும் பொருட்டு செய்ய வேண்டிய விஷயங்கள் எது என்பது பற்றியும்;
உ) குடியரசுத் தலைவர் கூறும் கருத்துக்களின் மீது பரிந்துரை செய்தலும் நிதி ஆணையத்தின் பொறுப்புகளாகும்.
புரிதி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையும் பரிந்துரைகள் மீதான எடுத்த, எடுக்கப் போகும் செயல்கள் குறித்த விளக்கங்கள் பற்றியும் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தில் அறிக்கையைச் பிக்கச் செய்வார்.
கேள்வி 16. நிதி சம்பந்தப்பட்ட பல்வேறு கூறுகளைப் (Miscellaneous Financial Provisions) பற்றிக் கூறுக.
பதில் :-
அ) மத்திய மாநில அரசுகள், பொதுக் காரியங்களுக்காக ஒன்றியமும், மாநிலங்களும் சட்டம் செய்ய இயலாத துறை களுக்கும் மானியங்கள் வழங்கலாம்.
ஆ) ஒன்றிய மற்றும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதி, அவசர நிலை நிதி, பொதுநிதி இவைகளின் வரவு, வைப்பு, செலவு முதலியன சட்டத்தின் அடிப்படையிலேயே நடக்கும். சட்டம் இயற்றும் வரை குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரால் விதிக்கப்படும் விதிகளின்படி முறைப்படுத்தப்படும்.
இ) ஒன்றியத்தின் சொத்துக்களுக்கு மாநிலங்கள் விதிக்கும் களியிலிருந்து விலக்கு உண்டு. இதே போல மாநில அரசுகளுக் குண்டான வருமானத்திற்கு அல்லது சொத்திற்கு மத்திய அரசு வீதிக்கும் வரியிலிருந்து விலக்கு உண்டு.
மாநிலங்களுக்கு வெளியே விற்கப்படும் அல்லது வாங்கப் பரம் பொருட்களுக்கு மாநிலங்கள் வரி விதிக்க முடியாது.
பாராளுமன்றம் மட்டுமே வரி விதிக்க முடியும்: மாநிலங்களுக் கிடையே நடக்கும் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமாகக் கரு படும் பொருட்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்கக் கருதினால், பாராளுமன்றம் குறிப்பிட்டிருக்கும் முறைப்படி வரி விதிக்க வேண்டும்.
உ) மாநில அரசுகளிலிருந்து மத்திய அரசு வாங்கும் அல்லது செலவழிக்கும் மின்சாரத்துக்கு பாராளுமன்ற அனுமதி இல்லாமல் மாநில அரசு வரி விதிக்கக் கூடாது.
ஊ) மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளில் சேமித்து வைக்கப்படும் நீருக்கோ அல்லது அதிவிருந்து தயாரிக்கப்படும். மின்சாரத்துக்கோ மாநிலங்கள் குடியரசுத் தலைவர் அனுமதி இன்றி வரி விதிக்க முடியாது.
எ) திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கும், தமிழ்நாட்டுக்கு கேரளாவில் இருந்து மாற்றப்பட்ட தேவஸ்வம் போர்டுகளுக்கும் குறிப்பிட்ட தொகை மானியமாக ஆண்டு தோறும் வழங்கப்படும்.
கேள்வி 6. ஒன்றியம் மற்றும் மாநிலங்களின் கடன் வாங்கும் வரையறைகுறித்து எழுதுக.
பதில் :-
ஒன்றிய ஒருங்கிணைந்த நிதியின் பாதுகாப்பின் பேரில் பாராளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டம் குறிப்பிடும் வரை யறை வரை ஒன்றியம் கடன் வாங்கலாம். அதே போன்ற மாநிலங்களும் மாநில ஒருங்கிணைந்த நிதியின் பாதுகாப்பின் பேரில் கடன் வாங்கலாம். மத்திய அரசு, ஒன்றிய ஒருங்கிணைக்க நிதியிலிருந்து சட்ட வரையறைக்குட்பட்டு மாநில அரசுகளுக்கும். கடன் வழங்கலாம் அல்லது மாநில அரசு எழுப்பும் கடன்களுக் கான உறுதி அளிக்கலாம். மத்திய அரசின் கடன்களைத் திருப்பிச் தராத நிலையில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் மாநில – அரசுகள் மென் மேலும் கடன்களை எழுப்பக் கூடாது.
கேள்வி 7. அரசு மீது வழக்குத் தொடரலாமா?
பதில் :-
“மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் மற்றவர்கள் மீ வழக்குத் தொடரலாம். அதே போன்று பொதுமக்கள் அமைப்புகள் போன்றவை மத்திய மாநில அரசுகளின் இறை யாண்மை மற்றும் அதிகாரங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் குறைகளை எதிர்த்து அரசுகள் மீது வழக்குகள் தொடரலாம்.
கேள்வி 8. சொத்துரிமையைப் பற்றிய நிலை என்ன?
பதில் :-
(பிரிவு 300A) அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை 4ஆவது திருத்தத்தின் கீழ் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. தற்பொழுது அது சட்ட உரிமை மட்டுமே. சட்ட பூர்வமாக அன்றி ஒருவருடைய சொத்துரிமையைப் பறிக்க இயலாது.
பகுதி – 13
தொழில், வர்த்தகம், வியாபார உறவுகள் (Trade, Commerce and Intercourse within the
Territory of India)
(பிரிவுகள் 301-307)
கேள்வி 1. தொழில், வர்த்தகம், வியாபார உறவுகள் பற்றி அரசியலமைப்புச் சட்ட விதிகளைக் குறிப்பிடுக.
பதில் :-
பொதுவாக இந்திய முழுமைக்கும் தொழில், வர்த்தகம், வியாபார உறவுகள் வைத்துக் கொள்வதில் எந்தவிதத் தடையுமில்லை. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி பொருட்கள் தட்டுப்பாடான பொழுது பாராளுமன்றம் சட்டம் மூலமாக தேவையான அளவு தடை விதிக்கலாம். ஆனால் தடை வரி விதிப்பதில் மாநிலங்களுக்கிடையே வேறுபாடுகள் காண்பிக்கக் கூடாது.
ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திலிருந்து வரும் பொருள் களுக்கு வரி விதிக்கலாம். அவ்வரி அதே மாநிலத்தில் அதே மாதிரி உற்பத்தியாகும் பொருள்களுக்கு விதிக்கும் வரியை விட அதிகமாக இருக்கக் கூடாது. ஒரு மாநிலம் அந்த மாநிலத்துக்குள் பொது மக்கள் நலன் கருதித் தடைகள் விதிக்கலாம். மாநிலங்கள் தடைகள் விதிக்கும் சட்டங்களை மாநில அவையில் கொண்டு வருமுன் குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற வேண்டும்.